Blog Archive

Tuesday, November 01, 2022

ஹாலோவீன் !!!!!!!

வல்லிசிம்ஹன்





மீண்டும் அக்டோபர் மாசம். சிகாகோ  திமிலோகப்படுகிறது.
 இப்போது 2022 இல்  வாசல் நிறைய
குட்டிப் பிசாசுகளும், எலும்புக் கூடுகளும்,
மந்திரவாதிகளும் அம்மா அப்பாவோடு வந்து சாக்கலேட்

வாங்கி செல்கிறார்கள்.
ஸ்பைடர் குட்டி  எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 
எல்லாமே  வேஸ்ட் என்று சொல்லும் பருவம்:)

2008  October 31  Trick or Treat.
பெண்வீட்டில் சின்னவன் பல பல காஸ்டியூம்களைப் பார்த்துவிட்டு. ஸ்பைடர் மேன்
வாங்கி வந்திருக்கிறான்.
அண்ணாவின் பழைய உடைகள் அவனுக்குப் பொருந்தவில்லை. உடலமைப்பில்
அண்ணா பெரிய அளவு. இவன் இன்னும் சதை போட்டால் நன்றாகப்  பொருந்தும்.
எங்க !!சாப்பிடற சாப்பாடெல்லாம் ஓட்டம் விளையாட்டுல  கரைந்துவிடுகிறது:)

கடைக்கு அழைத்து போய் ,அவனை  தேர்ந்தெடுக்கச் சொன்னதும் ,பலவற்றையும் அணிந்து பார்த்து விட்டு,
ஒ ஐ கிவ் அப் மா. நத்திங் பிட்ஸ் மி''  ன்னு    கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)
கடைசியாக ஸ்பைடர் மேன் கிடைத்திருக்கிறார்.
இப்ப எல்லாம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. தானே எல்லாம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை.
வாங்கின  உடையை  அதற்கான அறையில் உள்ளே போய்க் சார்த்திக் கொண்டுவிட்டானாம் . எப்படியோ வளைந்து நெளிந்து  போட்டுக் கொண்டு விட்டான். ஜிப்  மட்டும் எட்டவில்லை. அம்மாவை அழைத்து அதையும் சரி
செய்துகொண்டுவிட்டான். இப்போது ஸ்பைடர் மேன் மாஸ்க் போடணுமே.

அதைப் பிரித்தபோது  தான்  ஒரு பிரச்சினை .அதில் கண்களாக  இரு நீளக் கோடுகளே இருந்தன.
சின்னவனுக்கு மூக்கை மூடினாலே பிடிக்காது. என்னதான் வலைமாதிரி  போட்டு இருந்தாலும் ,இந்த உடுப்பையும் வேண்டாம் என்று சொல்லப் போகிறான் என்று பெண் நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
''அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய  ஹெட்லஸ்   ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்.:(
பெரியவன் அந்த மாஸ்கைப் பார்த்துவிட்டு, இவ்வளவு தானா.நான் சரிசெய்து விடுகிறேன் என்று  அந்த  முகமூடியின் முன் பாகத்தை வட்டமாகக் கிழித்து எடுத்துவிட்டான்.
ஒரு புது விதமான,   ஸ்பைடர் மாஸ்க் போடாத ஸ்பைடர் குட்டியை  சின்னவன் பள்ளியில் நாளைக்குப் பார்க்கப் போகிறார்கள்.:)

11 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான நினைவுகள். அதற்குப்பிறகு பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன இல்லை?!!

கோமதி அரசு said...

பேரனும் பள்ளிக்கு ஹலோவின் உடை அணிந்து சென்றான், ஹாரி பாட்டர் கதைகள் படிக்கிறான் இப்பீது அதனால் இந்த ஆண்டு ஹாரி பாட்டர் உடை.

//ஒரு புது விதமான, ஸ்பைடர் மாஸ்க் போடாத ஸ்பைடர் குட்டியை சின்னவன் பள்ளியில் நாளைக்குப் பார்க்கப் போகிறார்கள்.:)//


உங்கள் பேரன் சிறு வயதில் போட்டுக்கொண்ட ஸ்பைடர் மேன் அலங்காரத்தை பள்ளியில் பார்த்து ரசித்து இருப்பார்கள்.

நெல்லைத் தமிழன் said...

//கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)// ஹா ஹா ஹா

அந்த நவீன ஸ்பைடரின் படம் எங்கே?

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
14 வருஷங்கள் ஆகிவிட்டது.
அடுத்த தலைமுறையின் குழந்தைகள் இன்னும் அதே உற்சாகத்தோடு
பெற்றோர் சூழ பவனி வந்தார்கள்.
குட்டி முயல், குட்டி வாத்து, குட்டி குதிர,ஆட்டுக்குட்டி என்று வித விதமான
உடைக்குள் ஒளிந்து கொண்டு
பயமுறுத்திய அழகு மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

''பேரனும் பள்ளிக்கு ஹலோவின் உடை அணிந்து சென்றான், ஹாரி பாட்டர் கதைகள் படிக்கிறான் இப்பீது அதனால் இந்த ஆண்டு ஹாரி பாட்டர் உடை.''


அவனுடைய வயதுக்குப் பொருத்தமான உடைதான்.
அன்புத் தங்கச்சி கோமதி.
குழந்தைகளின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சி.

என் பல்லுக்கு உறுதி கொடுக்கும் மருத்துவரும்
நேற்று அதையே சொல்லி மகிழ்ந்தார்.

சின்னச் சின்ன சந்தோஷங்கள் வாழ்க்கையை நிறைக்கட்டும்.
நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

நலமுடன் இருங்கள்.
யார் ஃபோடோ எடுக்கிறேன்னு சொன்னாலும் இப்ப எல்லாம் ஐயா கலந்துக்கறதே இல்லை.
''அந்த நவீன ஸ்பைடரின் படம் எங்கே?''

முன்பும் அப்படித்தான். மஹா முரடு:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பின் ஜெயக்குமார். நலமுடன் இருங்கள்.

Geetha Sambasivam said...

மீள் பதிவா? இதை முன்னர் படிச்ச நினைவு இல்லை இப்போ எல்லாம் பெரியவனாகப் போயாச்சே! குழந்தைகள் விளையாடுவதை ரசிக்கும் பருவம்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எப்பவும் நன்றாக இருக்கணும்.

எழுத முடியாத காரணத்தால் இருப்பதை பப்ளிஷ் செய்தேன்.
ஆமாம், சின்னவனை எந்தக் காரணத்தைக் கொண்டும் படிப்பிலிருந்து
எழுப்ப முடியாது. இண்ட்டரஸ்டும் இல்லை.

மாதேவி said...

குழந்தைகளின் இனிய பொழுதுகள் எமக்கும் மகிழ்ச்சி தரும். சென்ற வாரம் மாண்டசரி ஆண்டுவிழாவில் எனது பேரனும் ஆடினார்.