பழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.🙏🙏🙏🙏🙏🙏
பழனி முருகன் கோவிலை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | பழனி மனிதர்களாக பிறந்த அனைவருமே அடைய முயற்சிக்க வேண்டிய ஒரு மேன்மையான நிலை ஞானம் ஆகும். தவ வாழ்க்கை மேற்கொள்பவர்களுக்கும், ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கும் சுலபத்தில் வந்துதவுவார் முருகன். அப்படி அந்த முருகபெருமான் ஞானத்தின் வடிவாக கோவில் கொண்டிருக்கும் புனித தலம் தான் “பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்”. இக்கோவிலைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான விடயங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். பழனி மலை முருகன் கோவில் தல வரலாறு மிகவும் பழமையான கோவில் இந்த பழனி மலை பாலதண்டாயுதபாணி கோவில். இக்கோவில் முருகனின் “ஆறு படை” வீடுகளில் “மூன்றாம் படை” வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் “திருஆவினன்குடி” என்றும் “தென்பொதிகை” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் “தண்டாயுதபாணி” மற்றும் “குழந்தை வேலாயுதர்” என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் “ரசவாத கலையை” பயன்படுத்தி, “நவபாஷாணத்தில்” செய்யபட்ட முருகனின் சிலையை போகர் சித்தர் ஸ்தாபித்தது தான். -
- புராணங்களின் படி “ஞானப்பழத்தை” சிவன், பார்வதியிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகன் பெற்றுக்கொண்டதால் கோபித்து கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டார் முருகப்பெருமான். தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப்படுத்தியும், இந்த பழனி மலையிலேயே தங்க போவதாக உறுதியாக கூறிவிட்டார் முருகன். பிற்காலத்தில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்த போது “நீயே ஞானவடிவானவன்” என்ற பொருள் கொண்ட “பழம் நீ” என்று அவ்வை போற்றினார். இதுவே காலப்போக்கில் இத்தலத்திற்கு “பழனி” என்ற பெயர் வர காரணமாயிற்று. தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்களில் “போகர்” சித்தரும் ஒருவர். அஷ்டமா சித்திகளையும் கைவரப்பெற்றவராவார். இந்த பழனி மலைக்கு போகர் தவமியற்ற வந்த போது, அன்னை பார்வதி, முருகன் மற்றும் சித்தர்களில் தலையாய சித்தரான “அகத்தியர்” ஆகிய மூவரின் உத்தரவு பெயரில் பழனி மலை முருகனுக்கு “நவபாஷாண சிலை” வடிக்கும் பணியை மேற்கொண்டார் போக சித்தர். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். “4000” திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்படுத்தப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர்.
7 comments:
நன்றி சகோதரி
பழனி பெயர்க்காரணம் மீண்டும் வாசித்து தெரிந்துகொண்டேன் அது போல போகர் சித்தர் விஷயம் பற்றியும். பழனி முருகன் போகர் சித்தர் வடிவமைத்தது என்று அறிந்ததிலிருந்து என் மகன் போகர் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று போகர் சப்தம் காண்டம் என்று அழைக்கப்படும் போகர் -7000 தேடி அப்போது பாண்டிச்சேரியில் இருந்ததால் பின் பக்கம் இருந்தவர் வீட்டில் அப்புத்தகம் பொடியும் அளவில் இருந்ததை ஏதேச்சையாக அறிந்து உடனே அதை காப்பி எடுத்து பைன்ட் பண்ணி வைத்திருக்கிறான். அதை வாசித்துக் கொஞ்சம் தெரிந்து கொண்டாலும், அதைப் பிரித்து வாசிக்க அறிந்த நல்ல சித்த மருத்துவர் யார் இருக்கிறார்கள் என்று அறியும் முன் மகன் இன்டெர்ன்ஷிப் ரெசிடென்ஸி என்று போயாச்சு. இப்பவும் புத்தகம் அவனிடம் இணையத்தில் இருப்பதை இறக்கி வைத்துக் கொண்டுள்ளான். காப்பி எடுத்த புத்தகம் இங்கு இருக்கு. அதில் நிறைய மருத்துவக் குறிப்புகள் உண்டு...
பழனி பற்றிய தகவல்கள் வெகு சுவாரசியம். நிறைய சென்றிருக்கிறோம்.
கீதா
தெரிந்த தகவல்கள் என்றாலும் இவை எல்லாம் மீண்டும் மீண்டும் படிக்கச் சுவை. உடம்பு தேவலையா?
அன்பின் ஜயக்குமார் சார். நன்றி.
அன்பின் கீதாமா,@ Geetharengan
எவ்வளவு தகவல்கள். !!!
சித்தர்கள் என்றும் அதிசயிக்க வைக்கும் வரலாறுகள்.
உங்கள் மகனின் ஆர்வம் அதிசயிக்க வைக்கிறது.
எத்தனை புத்திசாலி. என் மனம் நிறை ஆசிகள்.
"காப்பி எடுத்து பைன்ட் பண்ணி வைத்திருக்கிறான். அதை வாசித்துக் கொஞ்சம் தெரிந்து கொண்டாலும், அதைப் பிரித்து வாசிக்க அறிந்த நல்ல சித்த மருத்துவர் யார் இருக்கிறார்கள் என்று அறியும் முன் மகன் இன்டெர்ன்ஷிப் ரெசிடென்ஸி என்று போயாச்சு. இப்பவும் புத்தகம் அவனிடம் இணையத்தில் இருப்பதை இறக்கி வைத்துக் கொண்டுள்ளான். காப்பி எடுத்த புத்தகம் இங்கு இருக்கு. அதில் நிறைய மருத்துவக் குறிப்புகள் உண்டு...""
உங்கள் இருவரின் அறிவுக் கூர்மை அவனிடம் டி என் ஏ யாக உறைந்திருக்கிறது.
மிக மிக நன்றி மா .வாழ்க வளமுடன்.
அன்பின் கீதாமா,
எப்பவும் நலமாக இருங்கள்.
முகம் வீக்கம் எல்லாம் வடிந்திருக்கிறது. எரிச்சல் + வலி மட்டும் இருக்கிறது.
கடக்க வேண்டிய காலம். மாத்திரைகள் முடிந்ததும் மீண்டும்
டாக்டரிடம் போகணும்.
ரொம்ப நன்றி மா.. தினம் கந்த சஷ்டி கவசமும் சொல்கிறேன்.
பழனி முருகன் தலம் பற்றிய பகிர்வு அருமை. இருமுறை முருகனை தரிசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
Post a Comment