Blog Archive

Sunday, November 27, 2022

மாசு மரு அற்ற முகம்....

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

அருமையுடனும் அன்புடனும் பின்னூட்டம் இடும்
அனைத்து நட்புகளுக்கும் நன்றி.
இப்படி எல்லாம் சொல்லி உங்களிடமிருந்து ஒதுங்க நினைக்கவில்லை.

ஆனால் வாழ்வில் சில சமயங்களில்
விலகி நின்று பார்ப்பதும் நல்லதே.

மனதின் தயக்கம் வாழ்வில் நெருடல் கொடுக்கும்.
உடலின் வலி நம்மை சில சமயம் முடக்கிப் போடும்.

அதற்காக நான் சிரமப் படுகிறேன் என்று 
சொல்வதற்காக ஒரு பதிவு வேண்டுமா
என்றே யோசித்தேன்.
அவசியம் இல்லை. அவரவர் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள். 
எல்லோரும் அதைத் தாங்கியே வாழ்வைத் தொடருகிறார்கள்.

இறக்கும் வரை ஆரோக்கியம் , மன நிம்மதி வேண்டும் 
என்பதே இப்போதைய விருப்பம்.

உபாதைகள் நீடிக்கும் போது மனம் தளராமல் 
இருக்க இறைவன் வழிபாடே சிறந்தது.

நம்மை விட நோய் பாதிப்பில் இருப்பவர்கள்
சந்தோஷமாக  வாழ்வை எதிர்கொள்வதைப்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரு என்பது உடலில் எங்கு வேண்டுமானாலும் வரும்.
முகத்தில் இதுவரை எனக்கு வந்தது இல்லை.
வந்தவுடன் அதைப் பெரிதாக நினைக்கவும் 
இல்லை.
உதிர்ந்துவிடும் என்று நம்பினேன்.
அதற்கு நம்மிடம் பிரியம் போல!!

தூங்கும் போது (குளிர்கால உறைகள்) முக மருவில் உரசி
அதுக்கு Bacterial Infection) வந்துவிட்டது.
 இரண்டே நாட்களில் முகம் வீங்கி
அவசர வைத்தியத்துக்குப் போனேன். இப்போது
நன்றி நவிலும் நாட்களுக்கான விடுமுறை என்பதால்
எப்போதும் பார்க்கும் வைத்தியர் கிடைக்கவில்லை. 

நம் ஊரா, நினைத்ததும் தேவகிக்கு சென்று ,
பார்த்துவிட்டு,
கருப்பையா ஃபார்மசியில்  மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வர?

இங்கே மருத்துவர் மருந்து கொடுத்தாலும்
மகளும் மாப்பிள்ளையும் 
இரவுக்குளிரில் ஃபார்மசியில் காத்திருக்க வேண்டி வந்தது.

அங்கே இருக்கும் வாலிபர்கள் இப்போது ,இந்த வருடம் படித்து
லீவு நாட்களில் மாற்று ஆட்களாக வந்திருப்பவர்கள்.

லீவு முடிந்ததும் எப்போதும் இருக்கும் அனுபவசாலிகள்
வருவார்கள்.

அப்படி எல்லாம் நம் ஊரில் விடுமுறையில் போக முடியுமா
என்று தெரியவில்லை.
நம் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் எத்தனையோ
சிரமப்பட்டிருக்கிறார்.

நான் சென்ற மருத்துவ மனையிலேயே ஒரே ஒரு மருத்துவர் 
ஒரே நாளில் 78 ஃப்ளூ  வியாதியஸ்தரைப்
பார்த்தாராம். அதுவும் அவர் இந்தியர். நமக்கெல்லாம் 
தாங்க்ஸ் கிவிங்க் கிடையாது என்று சிரிக்கிறார்.
முகம் பூராவும் களைப்பு.


மீண்டு விடலாம். நீங்கள் எல்லோரும் படித்துவிட்டுக் கருத்து இடும்போது
என்னால் உடனே பதில் எழுத முடியவில்லை.
இறைவன் அருள்.





 மேலிருப்பது என் முகம் இல்லை.:)மேலும் படங்கள் போட்டு பயமுறுத்த மனம் இல்லை.

17 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவை படிக்கும் போதே மனது மிகவும் கஸ்டபடுகிறது. தற்சமயம் கொஞ்சம் நலமாகி இருக்கிறீர்களா? இவ்வளவு வலிகளை வைத்துக் கொண்டு தங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் அதனை எதிர் கொள்ளுகிறீர்கள். உடம்பை பார்த்துக் கொள்ளவும். தங்களுக்கு அனைத்து உபாதைகளும் விரைவில் பரிபூரணமாக குணமாக இறைவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

/உபாதைகள் நீடிக்கும் போது மனம் தளராமல்
இருக்க இறைவன் வழிபாடே சிறந்தது/

ஆம்... உண்மை.. இறை வழிபாடு நம் உடல் வலிகளிலிருந்து மனதை சற்று திசை திருப்பி நாம் நார்மலாக இருக்க கொஞ்சம் வழி வகுக்கிறது.இறைவன் தங்களது பிரச்சனைகளை சீக்கிரமாக சரி பண்ண வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

வைத்தீஸ்வரன் உங்கள் மருவை உதிர்த்து விட்டு விடுவார். சமயபுரம் மாரியம்மாளையும் வேண்டிக்கோங்க. விரைவில் சரியாகப் பிரார்த்திக்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

என் மகளுக்கு 12 வருடத்துக்கு முன் கன்னத்தில் எதையோ கிள்ளி மரு வந்து, அது பெரிதாகவும் பத்தாயிரம் அழுது லேசரில் எடுக்க நேர்ந்தது. உங்கள் கவலை விரைவில் தீரும்.

கோமதி அரசு said...

சங்கரன் கோயில் கோமதி அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள், புற்றுமண் இருக்கா இருந்தால் கொஞ்சம் தண்ணீரில் குழைத்து தடவி வாருங்கள்.
வைத்திய நாதனும், சமயபுரமாரியம்மனையும் வேண்டிக் கொள்ளுங்கள்.
நம் ஊரில் உப்பு வாங்கி போடுவார்கள் கோயிலில்
தங்கைகளிடம் கேட்டுப்பார்த்து உப்பூ வாங்கி போட சொல்கிறேன்.

விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

விரைவில் நலம்பெற வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu said...

கண்டிப்பாகச் சரியாகிவிடும் அம்மா...பாட்டி வைத்தியம் சொல்லலாம் என்றால் கொஞ்சம் பயமாக இருக்கே!!!!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா ஹரிஹரன்,
மிக மிக நன்றி மா.
ஒரு பதிவுக்கும் போய்ப் பின்னூட்டம் இட
முடியவில்லை. மகன் களிடம் கூட வீடியோ
கால் அழைத்துப் பேசவில்லை. பாவம் தள்ளி இருக்கிறார்கள். கவலையும் பயமும் அதிகரிக்கும் இல்லையா.
வீக்கம் வடியத் துவங்கி இருக்கிறது.

முண்டகக் கண்ணி அம்மா, சமயபுரம் அம்மா, சங்கரன் கோவில் என்று
எல்லோரையும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
கண்ணுக்குப் போகாமல் இருக்கும்படி சரியான
மருந்து கொடுத்த வைத்தியரையும்
அழைத்துச் சென்ற மகளையும் வாழ்த்துகிறேன்.
என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தாங்கள் மற்ற பதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் இட முடியவில்லையே என வருந்த வேண்டாம் சகோதரி.பதிவுகள் எங்கே போய் விடப் போகிறது.முதலில் தங்கள் உடல் நிலை நல்லபடியாக முற்றிலும் குணமாகட்டும். தாங்கள் வேண்டிய தெய்வங்களும்,நாங்கள் வேண்டும் தெய்வங்களும், தங்களை கண்டிப்பாக குணப்படுத்தி விடுவார்கள். தற்சமயம் வீக்கம் சற்று வடிந்திருப்பது ஆறுதலாக உள்ளது.விரைவில் முழுதுமாக தாங்கள் குணமடைய இறைவனை பிரார்த்தித்து கொண்டேயிருக்கிறேன். நன்றி சகோதரி.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை.
உடனே முடிந்து வைக்கிறேன்.
நலமுடன் இருங்கள். நன்றி மா.

ஒரு வேண்டுதலையும் பூரணமாக நிறைவேற்ற முடிவதில்லை.
பணம் அனுப்பி , அவளைத் தரிசிக்காமல்
வருகிறோமே என்ற கவலை உண்டு.
வேறென்ன செய்வது. அங்கே தான் முறையிடணும். உங்கள் சொல்படி நடக்கட்டும்
அம்மா.


வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

நீங்கள் சொல்லும் லேசர் என்றுதான் போனோம்.
முகம் வீங்கி,சிவந்து இருந்தது..
டாக்டரே பயந்துவிட்டார்.

உங்கள் மகளுக்கும் வந்தததா. பாவம் குழந்தை.
நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
அனைத்து அம்மாக்களையும் என் அம்மாவிடமும் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
வலி போக வேண்டும். வீக்கம் மிக வடிந்து விட்டது.

''வைத்திய நாதனும், சமயபுரமாரியம்மனையும் வேண்டிக் கொள்ளுங்கள்.
நம் ஊரில் உப்பு வாங்கி போடுவார்கள் கோயிலில்
தங்கைகளிடம் கேட்டுப்பார்த்து உப்பூ வாங்கி போட சொல்கிறேன்.''

எத்தனை அன்பு உங்களுக்கு தங்கச்சி. ஆமாம் உப்பு
துவஜஸ்தம்பம் அருகே சமர்ப்பிப்போம்.
புற்று மண் இப்போது ஏதுமா.
முன்னால் என்றால் மாதாமாதம் வீட்டுக்கே வரும்படி
பணம் கட்டி இருந்தேன்.
வைத்தீஸ்வரன் கோவிலிலும் அர்ச்சனை உண்டு.
திருவள்ளூர் வீரராகவனுக்கும் வேண்டிக் கொள்வேன்.

எல்லாம் மற்றவர்களுக்காகச் செய்தது.
இப்போது நீங்கள் செய்கிறேன் என்கிறீர்கள்.
எப்போதும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜயக்குமார் சார்.
மிக மிக நன்றி.நலம் அடைவேன்.
இறைவன் அருள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

''கண்டிப்பாகச் சரியாகிவிடும் அம்மா...பாட்டி வைத்தியம் சொல்லலாம் என்றால் கொஞ்சம் பயமாக இருக்கே!!!!!''

ஆமாம் பயம் தான். முன்னால் எல்லாம் மஞ்சள் வேப்பிலை அரைத்து
வைத்தியம் செய்து கொண்டிருக்கிறேன்.
இப்போது, இந்த டாக்டர் விரல் கூட படக்கூடாது என்று விட்டார்.
தண்ணீரும் ஆகாதாம்.
எப்படியோ மருந்தை விழுங்கி வைக்கிறேன்.
நலம் அடையலாம் நன்றி மா.

ஸ்ரீராம். said...

மனதில் கவலையை ஏற்றும் பதிவு.   வாட்டசாப்பிலும் நீங்கள் சொல்லி இருந்த தகவல்கள் கவலையை அதிகரிக்கவே செய்கின்றன.  சீக்கிரம் குணமாகி சுகம் பெற வேண்டும் அம்மா.  பிரார்தித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

Get well soon amma. our prayers are with you

Kala from Melbourne

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் வளமுடன் வாழ வேண்டும்.

தங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு மிக மிக நன்றிமா.
ஒரு வலைப் பதிவர் என்று
பெயர் வைத்துக் கொண்டு, மற்ற பதிவுகளைப் படிக்காமல் கருத்திடாமல் இருப்பது
மிகப் பெரிய தவறாக எனக்குத் தோன்றுகிறது.

முடிந்தவரை கண்களையும் , சருமத்தையும்
பாதுகாக்க வேண்டும். முக வலி எத்தனையோ தேவலை.
இறைவன் துணை.நன்றி சகோதரி.

மாதேவி said...

விரைவில் நலமாக வேண்டுகிறேன்.