வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
1969 December.
ஒரு சின்னப் பொய் ஒரு தம்பதியின்
வாழ்வைக் காக்கிறது.
புதிதாகத் திருமணம் செய்த தம்பதியின் தேன் நிலவு
ஊட்டியில் ஆரம்பிக்கிறது.
அப்போதெல்லாம் பயணிகள் விடுதி மட்டுமே
இருந்த காலம்.
யாராவது தெரிந்தவர்கள் சிபாரிசு செய்தால்
அங்கு போய்த் தங்க முடியும்.
நாங்களும் இரண்டு குழந்தைகளுடன்
அங்கு போய் இரண்டு நாட்கள் தங்கி
மைசூர் வரை சென்று வந்தோம்.
ஒரு வாரப் பயணம். :)
ஒரு வெள்ளை அம்பாஸடர். சிங்கம் ஓட்டுனர்.
கூட உதவிக்கு வந்தது பெரிய தம்பி. ஐஐடியில்
மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.
சிங்கத்துக்கு ஓட்டும் போது ஒரு துணை வேண்டும்.
நான் பின் இருக்கையில் இரண்டு குழந்தைகளுக்கும்
உணவு, தூக்கம் என்று கவனிக்க.,
முன் சீட்டில் அத்திம்பேரும் மச்சினனும் அரட்டை
அடிக்க ஆரம்பித்தது எங்கள் பயணம்.
சேலத்திலிருந்து ஊட்டி வந்த போது
மதியமாகி இருந்தது.
எங்கள் அறைக்குப் போன போது பக்கத்து அறைக்கு
வந்தவர்களைப் பார்த்து நானும் சிங்கமும்
புரிந்து கொண்டோம்:) 'நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட"
பாட்டுக்கு ஏற்ற ஜோடி.
புருவங்களை உயர்த்தியபடி, முகம் முழுவதும் விரிந்த
புன்னகையோடு
உள்ளே வந்தவர்,எல்லாம் சரியாக இருக்கா என்று
பார்த்துவிட்டு,
'டேய் வாடா முரளி. நாம கார்டன்ஸ் பார்க்கலாம்.
உங்க அக்கா, குழந்தைகளோடு ரெஸ்ட் எடுக்கட்டும்"
என்று கிளம்பிவிட்டார்.
நான் குழந்தைகளை (3 அண்ட் ஒண்ணரை)ப்
படுக்கவைத்து நானும் கம்பளியைப்
போர்த்துக் கண்மூடினேன்.
ஹ்ம்ம். கொடுத்து வச்சவங்கள் இந்த ஆண்பிள்ளைகள்.
நிமிஷமா, சட்டுனு கிளம்ப முடிகிறது பார்.
நமக்கு மனசாகிறதா:(
குழந்தைக்கு சில்லுனு இருக்குமே. சளி பிடித்தால்....' என்றெல்லாம்
நான் யோசிக்கிற வேலையில்
இவர்கள் மட்டும் ரோஸ் கார்டன் போயாச்சு.
இந்தப் பயணமே இப்படித்தான் இருக்கப் போகிறது என்ற
யோசனைப் பொருமலில் தூங்கி
விழித்த போது சாயந்திரம் நாலு மணி.
அறையில் வெளிச்சம் இல்லை.
வெளியே மழை .
அறைக்குள்ளே யாரோ நடமாடும் சத்தம்.
பெட்டியைத் திறந்து மூடும் ஒலி கேட்டதும்
''அந்த லைட்டைப் போடுங்கப்பா" என்று நான் சொல்ல
வெளிச்சம் பரவ நான் பார்த்தது சிங்கம்
இல்லை:)பக்கத்து அறைக்கு வந்த ஹனிமூன் கணவன்!!
மிச்சக் கதை அடுத்த பதிவில்.:)
28 comments:
அடப்பாவி.. தவறுதலாக அறை மாறி வந்து விட்டானா? திருடவா?
சிங்கமொன்று புறப்பட்டதே... பைக்கில் சிங்கம்!
__/\__
கடைசியில் சொன்ன விஷயம் மனதில் கிலி உண்டாக்கியது. மேலும் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
//கொடுத்து வச்சவங்கள் இந்த ஆண்பிள்ளைகள். //
நிறைய தடவை (சமீப வருடங்களில்) நான் நினைத்திருந்த எண்ணம். எங்கேயாவது வெளியில் போய்விட்டு வந்தால், என்னால் அக்கடா என்று உட்கார முடிகிறது (உணவு அவ தயார் செய்வாள் என்ற எண்ணத்தில்). அதுபோல ஏதேனும் பர்சேஸ் செய்துகொண்டு வந்தாள், அவள் எடுத்துவைப்பாள் என்ற எண்ணத்தில். இல்லை வீட்டில் இருக்கும் பசங்களுக்கு அவள் உணவு தயார் செய்யணும்..... ஓய்வொழிவில்லாத வேலை பெண்களுக்கு
சட் என்று, ஐயோ என்னாச்சு என்ற இடத்தில் 'தொடரும்' நியாயமா?
வணக்கம் சகோதரி
பதிவு அருமையாக தொடங்கியுள்ளது. பெண்களின் உள்ளத்தின் நிலைகளை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, கணவன்மார்கள் இப்படித்தான் அக்காடா என வெளியே கிளம்பி விடுவார்கள் போலும்.
பாடல்கள் அருமை. இரண்டாவது பாடல் உண்மையாகவே இதுவரை கேட்டதில்லை.
பக்கத்து அறைகாரர் தெரியாமல் தவறுதலாக உள்ளே வந்து விட்டாரா? திருடனாக இருந்திருந்தால், நீங்கள் விளக்கைப் போடச் சொன்னதும் போட்டிருப்பாரா? இருந்தாலும் அவர் ரூம் மாறி வந்ததன் அவசியத்தை தாங்கள் விளக்கும் வரை இதயம் படபடக்க காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் ஶ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
அட்டா. திருடன் இல்லம்மா. பக்கத்து அறைக்காரர் தவறி உள்ளே வந்திருக்கிறார்
அதற்கப்புறம் நடந்தது காமெடி. நன்றி மா. வேலை இருந்ததால் பதிவிட்டு விட்டேன். ஸஸ்பென்ஸ் ஒண்ணுமே இல்லை.:)
ஆமாம் என்றைக்கிருந்தாலும் சிங்கம் தான் அன்பு சிங்கம்.
அன்பின் வெங்கட், நலமுடன் இருங்கள்.
கிலி எனக்கு இருந்தது நிஜமே.
பயப்பட்டிருக்கத் தேவை இல்லை.
சாதாரண அறை மாற்றம் அந்தச்சின்ன வயதுப் பதட்டம் தான்.
நன்றி மா.
அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள.
வயது 40 ஐ எட்டும் போதே கணவர்கள் மாறுகிறார்கள் .முதிர்ச்சி வந்து மனைவியின் வருத்தங்களை மதிக்கக் கற்கிறார்கள்.
இவரும்அப்படித்தான். நீங்களும் மாறுவீர்கள்.குழந்தைகளும் உதவி செய்தால் குடும்பம் சர்ககரைப் பொங்கல் தான். நன்றி மா.
அன்பு முரளிமா,
நலமுடன் இருங்கள்.
இது ஒரு வேடிக்கையாக ஆரம்பித்த பதிவு நடுவில் மார்கழி,
பெருமாள் என்று ,
பதிவை பப்ளிஷ் செய்துவிட்டேன்.
ஒன்றும் திகில் கிடையாது.
நன்றி மா.
அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் மா, தவறிப் போய்
எங்கள் அறைக்கு வந்து விட்டார்.
விவரம் சொல்கிறேன்.
''பக்கத்து அறைகாரர் தெரியாமல் தவறுதலாக உள்ளே வந்து விட்டாரா? திருடனாக இருந்திருந்தால், நீங்கள் விளக்கைப் போடச் சொன்னதும் போட்டிருப்பாரா?''
அதேதான்:)
சரியாகச் சொன்னீர்கள். மிக மிக நன்றிமா.
வேறு ஏதோ ஊட்டிக் கதை படிக்கும் போது இந்த சம்பவம் நினைவுக்கு வந்ததுமா:)
அம்மா, அதானே ஆண்களுக்கு நினைச்சா கிளம்பிவிட முடிகிறது நமக்கு அப்படி இல்லைதான். இந்தக் கருத்திற்கு உங்களோடு ஹைஃபைவ்!!!
கீதா
ஹையோ அம்மா கடைசில என்னாச்சு...எப்படி அவன் உள்ளே நுழைய முடிந்தது? உள்பக்கம் நீங்க லாக் போட்டுக்க மறந்துட்டீங்களா?
பயணம் நல்ல முறைல தொடங்கியது என்று நினைத்தால்...
கீதா
அப்பா பைக்கில் அந்த ஆளைப் பிடிக்கப் போவது போல் இருக்கு!!!!!! ஹாஹா
ஸ்ரீராம் கு கொடுத்த கருத்தில் புரிந்தது அந்த ஆள் தவறுதலாக வந்துவிட்டார் என்று..ஹப்பா
கீதா
அம்மா கணவன் 40 ல் மாறும் போது நல்லதுதான்....சில சமயம் இட்ஸ் டூ லேட் பெண்களுக்கு என்று ஆகும் நிலையும் இருக்கு இல்லையா...
கீதா
ஹையோ, ஹையோ! ஒரு முறை எனக்கு முதல் வகுப்பு கூஃபேயில் இந்த அனுபவம் ஏற்பட்டது. நல்லவேளையா ரங்க்ஸ் மேலே தூங்கிக் கொண்டிருந்தார்.:)))) அடுத்ததுக்குக் காத்திருக்கேன்.
சுற்றிப் பார்க்கச் செல்லும் போது நான் தனியாக எங்கும் சென்றதில்லை எல்லாமே குடும்பத்தோடுதான். செல்லும் இடங்களில் கூட வெளியே செல்லும் போதும் கூட. ஆசிரியராகக் மாணவ மாணவியரோடு சென்றதைத் தவிர்த்து.
அந்த ஹனிமூன் ஜோடி மனிதர் ரூம் மாறி வந்துவிட்டாரோ? அதன் பின் என்னாயிற்று?
துளசிதரன்
கருத்துகள் வ்ருகிறதா என்று தெரியவில்லை அம்மா
கீதா
கருத்துகள் வருகிறதா என்று தெரியவில்லை அம்மா
கீதா
பக்கத்து அறைக்காரர் எதற்கு வந்தார் ? தொடர்கிறேன்...
ஆரம்பம் அருமை...
அன்பின் கீதா ரங்கன்,
எல்லாக் கருத்துகளும் வந்து விட்டன.
மாலை 6 லிருந்து 8 வரை பிரார்த்தனை மார்கழி நேரம்.
நான் இணையம் பக்கம் பார்ப்பதில்லை. அதனால்
தாமதம் அம்மா.
40 லாவது மாற வேண்டுமே என்று யோசிக்கிறேன்.
மிச்ச காலங்களைக் கழிக்க வேண்டுமே.
பெண்களுக்குத் தொல்லை எழுதி வைக்கப்
படாத மனு சாஸ்திரம்!!!
அன்பின் கீதா ரங்கன்,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் அடுத்த அறைக்காரார் மது.....சூதனனாக
அறை மாறிவிட்டார்:)
கலட்டாவுக்குப் பின் சரியாக ஆனது.
அப்பா மோட்டார் பைக்கில் பறந்து
வீட்டுத் திருடனைப் பிடித்த கதையும் உண்டு:)
இந்த சம்பவத்தில் அருமையாகச் சமாளித்தார்.!!!
மிக நன்றி மா.
அறையை அப்பாவும் தம்பியும் சாத்திக் கொண்டு போனார்கள்.
பூட்டவில்லை. அப்பொழுதெல்லாம் இது சகஜம்.
பணியாளர்கள் கதவைத் தட்டிய பிறகுதான்
வருவார்கள்.
நல்ல காலம் அது.
''ஹையோ, ஹையோ! ஒரு முறை எனக்கு முதல் வகுப்பு கூஃபேயில் இந்த அனுபவம் ஏற்பட்டது. நல்லவேளையா ரங்க்ஸ் மேலே தூங்கிக் கொண்டிருந்தார்.:)))) அடுத்ததுக்குக் காத்திருக்கேன்''
அடக் கடவுளே!!!
கீதாமா, இது எப்போ. பசங்க பிறப்பதற்கு முன்னயா.!!!!
நீங்க எழுதவில்லையே.
அடுத்த பாகம் நாளைதான் மா.
வேளுக்குடி,துஷ்யந்தன், திரு, திருவெம்பாவை என்று நல்ல பொழுதாகப்
போகிறது.
நன்றி மா.
அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
எங்கள் சிங்கத்துக்குக் கூடத் தனியாகப் பயணம்
செல்லப் பிடிக்காது.:)
ஆமாம். அறை தவறி உள்ளே வந்து விட்டார்.
நாம் என்ன சினிமா மாதிரி கத்தமுடியுமா:)
நன்றி மா.
அன்பின் தனபாலன்,
நலமுடன் இருங்கள்.
'ஆரம்பம் அருமை" :)
ஆமாம் சுவையான நிகழ்வுகளை இப்போது
நினைத்தாலும் ரசிக்கத் தோன்றுகிறது.
நன்றி மா.
அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள்.
சுவாரஸ்யமான நாட்கள்.
எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் மனிதர் சிங்கம்.
எந்த நிலைமையையும் சமாளிப்பார்.
நாளை எழுதுகிறேன் அப்பா.
நன்றி.
Post a Comment