Blog Archive

Thursday, June 03, 2021

1955 காலப் பாடல்கள்.

திருமங்கலத்தில் இருந்த போது
கேட்ட ஒலி பெருக்கிப் பாடல்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறேன்.

எந்த ஒரு நிகழ்வானாலும் 
உடனே அந்த வீட்டில் பந்தல் கட்டியதும் பாடல்கள் ஒலிக்க
ஆரம்பிக்கும். முதல் பாடல் மாதர்குல மாணிக்கம்
படத்தில் வந்த தங்கவேலு ,எம்.என்  ராஜம்
பாட்டு. எல்லாம் கலந்த ஒரு இசை,

வேறேதோ இந்திப் பாட்டின் சாயல்:)

பிறகு


 வருவது 'ராஜ சேகரா என் மேல்''
அனார்க்கலி படப் பாடல்.

படம் பார்க்காததால் இது என்ன சூழ்னிலையில் 
வரும் என்றும் தெரியாது.
கண்டசாலா ஜிக்கி குரல் மட்டும் தெரியும்.

ஹிந்தி படத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம் என்பதால்
அந்த இந்துஸ்தானி இசையும் தாளக்கட்டும்
மிகப் புதிதாக இருந்தது.
மகிழ்ச்சியாக ஒலிக்க வேண்டிய பாடலே சோகமாக
ஒலித்தது. ...அவ்வளவாக ரசிக்க முடியவில்லை...
பழகிவிட்டது.:)


மூன்றாவது பாடல் மஞ்சள் மகிமை
படத்தில் தங்கவேலு, ராஜ சுலோச்சனா
பாடும் காமெடி பாடல்.


அப்போது வந்த படங்களைப்
 பார்க்க அப்பாவிடம் அனுமதி கிடைக்காது.
அதுவும் கெட்ட பழக்கம் கொண்ட கதா நாயகன் என்றால் அறவே மறுப்பு.

எல்லாமே இப்படி ஆரம்பிக்கும் படங்கள் ஒரு பெண்ணால்
அந்தக் கணவன் திருந்துவது போலவே முடிக்கப் 
படும்:)
''மானம் மணி பர்ஸ்  ரெண்டும் காலி.
ஊரை சுற்றுவதே ஜோலி
மைனர் லைஃப் ரொமba


ஜாலி"
இப்படி வரும் அந்தப் பாடல்.

அடுத்து வருவது....


கசக்குமா இல்லை ருசிக்குமா பாடல், பத்தினி தெய்வம்
என்ற படத்திலிருந்து
சட்டென்று பிடித்துப் போனது இந்தப்
பாடல். டப்பிங்க் செய்யப்பட்ட இந்திப் படம்.
இசை மெல்லிசை மன்னர்கள் என்று 
பதிவாகி இருக்கிறது.





15 comments:

ஸ்ரீராம். said...

ராஜசேகரா பாடல் பிடிக்கும்.  கசக்குமா இல்லை இனிக்குமா கேட்டிருக்கிறேன்.  மற்ற பாடல்கள் கேட்டதில்லை!  பெரும்பாலும் நகைச்சுவைப் பாடல்கள் என்று வரும் பாடல்கள் கேட்பதில்லை.  விதிவிலக்காய் சில பாடல்கள் பின்னாட்களில் கேட்டதுண்டு.

திண்டுக்கல் தனபாலன் said...

பழைய பாடல்கள் என்றால் விருப்பம் அதிகம்...

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாப்பாடல்களும் கேட்டிருக்கிறேன் அம்மா நல்ல பாடல்கள் ஒரே ஒரு பாடல் மட்டும் அவ்வளவு நினைவில்லை முதல் பாடல்...

அனாற்கலி பாடல் பிடிக்கும்

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்கள்

Geetha Sambasivam said...

பழைய ஞாபகங்கள். அருமை. எனக்கு இந்தப் பாடல்கள் எல்லாம் தெரியாது. கேட்டாப்போல் நினைவிலும் இல்லை. :)) எனக்குத் தெரிந்து "கல்யாணப்பரிசு" "வீரபாண்டியக் கட்டபொம்மன்" "மதுரை வீரன்" பாடல்கள் தான் நிறையக் கேட்டிருக்கோம். மஞ்சள் நீராட்டு விழா என்றாலே ஒலிபெருக்கிக் கட்டிடுவாங்களே மதுரையில்! :))))

வெங்கட் நாகராஜ் said...

மைனர் லைஃப் ரொம்ப ஜாலி பாடல் பதிந்து வைத்திருந்தேன் கேசட்டில். இப்படியான பாடல்களை இன்றைக்கும் கேட்டு ரசிக்க முடிகிறது. அனைத்து பாடல்களையும் மீண்டும் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ரசிக்கத் தந்தமைக்கு நன்றிம்மா.

கோமதி அரசு said...

பகிர்ந்த பாடல் எல்லாம் அருமை.

முதல் பாடல் இந்தியில் "குங்கட்" என்று வந்த படம் என்று நினைக்கிறேன்.
ஆதனால் இந்தி பாடல் சாயல் இருக்கலாம். இந்தி படம் பார்த்து இருக்கிறேன். இந்த தமிழ் படம் இரண்டு வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்தேன், பார்த்து அதே இந்தி படக் கதை தான் என்று தெரிந்து கொண்டேன். நன்றாக இருக்கும் படம்.

'ராஜ சேகரா என் மேல்''
அனார்க்கலி படப் பாடலும் பிடிக்கும் எனக்கு.
மற்ற பாடல்களும் பிடிக்கும். மைனர் லைப் பாடல் படம் பார்த்து இருக்கிறேன்.

இந்தி டப்பிங்க் படம் பார்த்தது இல்லை பாடல் கேட்டு இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

இந்தப் பாடல் இல்லாமல் ஒலிபரப்பு ஆரம்பிக்காது.
மதன மனோஹர' என்று ஆரம்பிக்கும் போதே
கண்டசாலாவின் குரல் இனிமை
மனத்தை வசீகரிக்கும்.
முதலில் ஒட்டவில்லை. பின்னால்
மிகப் பிடித்து விட்டதுமா. நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
இனிய காலை வணக்கம்.
பழைய பாடல்கள் எனக்கே பழைய பாடல்கள்!!
அவற்றை நீங்கள் ரசிப்பது அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
இசை எல்லோரையும் எப்படி ஒன்று சேர்க்கிறது பார்த்தீர்களாம்மா.
அனார்கலி முதன் முதலில் கேட்டபோது எட்டு வயது
இருக்கும். அவ்வளவு ரசிக்கவில்லை.
கேட்டுக் கேட்டு மிகவும் பிடித்து விட்டதும்மா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ஹாஹாஹா. ஆமாம் ஆனால் அப்போது இதுதான் என்று தெரியாது.
திருமணங்கள் வருஷம் பூரா நடக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்:)))))))

வெள்ளையம்மா, பொம்மி வசனங்கள் மறக்க முடியுமா?
எல்லாமே மனப்பாடம்.

இன்னோரு விதமான சோகப்பாடல்களும் கேட்டாலே
அழுகை வரும்!!!!!!!!
நம்முடைய டிவி , வானொலி எல்லாமே இவைதான்.
நடுவில் நடுவில் டொக் டொக் மைக் டெஸ்டிங்க் வேற:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நீங்கள் இதை எல்லாம் கேட்டு இருக்கிறீர்கள் என்பதே எனக்கு அதிசயமாக
இருக்கிறது.!!!!

காஸ்ஸெட்டில் இருக்கிறதா!!!
தெரியாமல் போச்சே.:(
எத்தனை அருமையான பாடல்கள்.!
நீங்களும் ரசித்ததே சந்தோஷம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன் மா.
விகடனில் குங்கட் படம் பற்றி வண்ணத்தாளில்
விளம்பரம் வந்தது நினைவில் இருக்கிறது.
50.60 களில் நிறைய இந்திப் படங்கள்
டப் செய்யப்பட்டு வந்தன என்பது உங்கள் பின்னூட்டத்தால்
தெரிய வருகிறது.
இந்தப் படங்கள் தொலைக்காட்சியில் வருகிறது என்றால்
அதிசயம் தான் .
அனார்கலி திரை வசனங்களும் ஒலிபெருக்கியில் வைப்பார்கள். அனார் அனார் என்று சலீம் கதறும் குரல் கேட்கும்:__)
நான் படம் பார்த்ததில்லை.
நிறையத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்
அன்புத் தங்கச்சி.

கோமதி அரசு said...

https://www.youtube.com/watch?v=D4MrCvw6xcU இந்த இந்தி படம் பாருங்கள் அக்கா நேரம் கிடைத்தால் மாதர் குலமாணிக்கம் படம் தான் அது. ஜெமினி தான் தயார்ரித்து இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

மிக மிக நன்றி. கண்டிப்பாகப் பார்க்கிறேன்.
வாழ்க வளமுடன்.
எனக்குப் பழைய படங்கள் மிகப் பிடிக்கும்.
இரண்டு நாட்களாகப் பார்க்கலாம்.