Blog Archive

Tuesday, June 01, 2021

புத்தம்புதுக் காலை

வல்லிசிம்ஹன்
அன்பின் சூடா, சூடாமணி.
வாழ்வின் அனேக அத்தியாயங்களை

பொறுமை, மேலும் பொறுமையுடன்,
கடந்து உன்னை விட இளையவர்களான
 எங்களிடம் எத்தனை அருமையாகச் சிரித்துப் பழகினாய்.

இன்று காலை எனக்குக் கிடைத்த செய்தி,
உன்னைக் கடவுளிடம் சேர்த்து விட்டதாகச் சொன்னது.
என் அப்பாவின் அன்பான அக்காவின் மகள் நீ.

87 வயதில் ஆரோக்கியமாக இருந்து,
ஒருவரையும் நோகவைக்காமல்
அமைதியாக  இறைவனிடம் கலந்தாய் என்று உன் தம்பி சொன்னான்.

வெகு நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் 
உரையாட ஒரு சந்தர்ப்பம் கொடுத்து
அதில் நீ கலந்து கொள்ள முடியவில்லை.

குணவதியாக இருந்து குணவதியாக மறைந்தாய்.
அமைதி பெற பிரார்த்தனைகள்.

12 comments:

ஸ்ரீராம். said...

ஆழ்ந்த இரங்கல்கள், அனுதாபங்கள் அம்மா.   இந்தத் துன்பத்தைத் தாங்கும் வலிமையை உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இறைவன்  வழங்கப் பிராத்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
வயதாகி நல்ல இதமான நிலையில்
நிகழ்ந்திருக்கிறது மா.
அவர் வாழ்வில் அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுதலை.

அவர் மகன் மிக நல்ல பையன்.
இறைவன் அமைதி கொடுக்கட்டும்.
மிக நன்றி மா.

Geetha Sambasivam said...

அவரின் ஆன்மா நற்கதி அடையட்டும். நேற்று எங்களுக்கும் ஓர் உறவினரின் மரணச் செய்தி! அதிர்ச்சி அடைய வைத்தது. கொரோனா இல்லாதவருக்கு வைத்தியம் செய்திருக்கிறார்கள் போல! முழு விபரம் தெரியலை. ஆனால் சோதனையில் கொரோனா இல்லை என்றே வந்திருக்கு. ஆனால் அவர் இல்லை. :(

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரது ஆன்மா இறைவனிடத்தில் ம்கழிவாக இருக்க பிரார்த்தனைகள். அவர்கள் குடும்பத்துக்கும் ஆறுதல்கள்.

வயதாகிக் கஷ்டப்படாமல் போயிருக்கிறார் இல்லையா...

பொதுவாக வாத்தியார்கள் சொல்வது...என் பாட்டி நான் அவருக்குச் செல்லப் பேத்தி அது போல அவர் எனக்கு...அப்படியானவர் என்னிடம் இருக்கறப்ப போன போது நான் அழுதுவிட்டேன். 93 வயது அவருக்கு இருந்தாலும்....வயசாகி போறவங்க விசேஷத்துல அழக்கூடாது அவங்க ஆன்மா இறைவனடிக்குப் போகாது நாம் அவர்களை மகிழ்வாக இறைவனிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்று.

கீதா

கோமதி அரசு said...

செய்தி கேட்டு வருத்தமாக இருக்கிறது. வெகு தூரத்தில் இருக்கும் போது சொந்தங்களின் இழப்பும் அவர்களை பார்க்க முடியாமல் போவதும் மனதுக்கு வேதனை தரும் விஷயம்.

அவர்களை இழந்து வாடும் அவர்கள் அன்பு குடும்பத்திற்கு இறைவன் ஆறுதலை தர பிரார்த்திக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என் அத்தை மகள் சூடா.

அவளுக்கும் இது போல செய்தி வந்ததிலிருந்து அவளால்
சாப்பிடக்கூட முடியவில்லையாம்.
மறைந்த பெண் மிகச் சின்ன வயதாம்.
நாலு நாட்களில் இவளும்
இறைவனிடம் சேர்ந்து விட்டாள்.
எப்படியோ போனாளோ பிழைத்தாளோ.அமைதி அடையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா.
அத்தை மகளை என் வாழ்வு முழுவதும் அறிந்திருக்கிறேன்.
அவள் மறைந்ததற்கு அழவில்லை. அவள் வாழ்ந்த போது அடைந்த துன்பங்களுக்குக் கணக்கில்லை.
அதை நினைத்து வருத்தமாக இருந்தது.
இனி நிம்மதியாக இருக்கட்டும் . நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
வாழ்க்கையில் மிகச் சிரமமான
கட்டத்தில் இருக்கிறோம்.
இலைகளாக உறவுகள் உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்ன செய்யலாம். இவர் முதிர்ந்த வயதில் சங்கடம் இல்லாமல்
இறைவனடி சேர்ந்தார்.
அமைதியை அடையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன். வாழ்க வளமுடன்.
நன்றி மா.

மாதேவி said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அவரின் ஆன்மா நற்கதி அடையட்டும். பிரார்த்தனைகள்.