Blog Archive

Thursday, November 26, 2020

அஞ்சலி. திரு. திரு நாவுக்கரசு அருணாச்சலம்.

வல்லிசிம்ஹன்


மஞ்சள், குங்குமம், கற்பூரம், திரிகள்
நிறைய வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழங்கள் என்று
முதல் நாள் தான் வாங்கி வைத்திருக்கிறார் சார்.
திருக்கார்த்திகைக்காக.

அன்பின் கோமதி சொல்லி அழும்போது மனம் விண்டு போனது.
அதெல்லாம் அவருக்கே உபயோகப்
படப் போகிறது என்று தெரியாமல் 
போய் விட்டதே. என்று மனமுருகி கலங்கினார்.

வாய் நிறைய அனைவரையும் வாழ்க வளமுடன் என்று
வாழ்த்தியபடி இருக்கும் அன்பு கோமதி அரசுக்கு
 இறைவன் நல்ல வழி காட்டுவார்,.
இந்த அதிர்ச்சி கொஞ்ச நாட்களில் தீராது.

கண்முன்னே ஒரு உயிர் பிரிவது காண்பது கொடுமை.
தன்னால் முடிந்த முதல் உதவிகளைச் செய்திருக்கிறார்.
மூன்று டாக்டர்கள் வந்து உதவி செய்திருக்கிறார்கள்.

சட்டென்று தான் வணங்கும் கைலாயப் பெருமானிடம் 
கலந்துவிட்டார் திரு. திருநாவுக்கரசு சார்.

அவர் வரைந்த பொக்கிஷங்களைக் காத்து
வைப்பார்கள் அவரது செல்வங்கள். 
அனைவருக்கும் என் அன்பு.

16 comments:

பிலஹரி:) ) அதிரா said...

மனம் ஆறுதே இல்லை வல்லிம்மா... நம் வீட்டு நிகழ்வுபோல மனம் கிடந்து தவிக்கிறது... இத்தனைக்கும் இதுவரை கோமதி அக்காவுடன் மெயிலில்கூடப் பேசியது கிடையாது... கோமதி அக்காவை இத் துயரிலிருந்து எப்படியாவது மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

Angel said...

விவரம் கேள்விப்பட்டதுமுதல் மனம் கனத்தது வல்லிம்மா :( பாவம் கோமதி அக்கா .அவங்களுக்கு அன்பைத்தவிர வேறெதுவும் தெரியாது .மிகவும் உடைஞ்சிருப்பாங்க .என்ன சொல்றதுன்னே தெரியல ..இறைவன் இந்த இக்கட்டான சூழலில் அக்கா அவர்களுக்கு துணை இருக்கணும் .அரசு சார் அவர்களின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் 

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
நாமெல்லாம் கோமதிக்குத் துணையாக இருக்க வேண்டும்.

இத்தனை கடினமான நேரத்திலும் என்னுடன்
பதில் சொன்னார். அந்த அன்பை என்ன என்று
சொல்லமுடியும்.
நம் எல்லோருக்கும் இந்த வலைப் பதிவுகள்
இத்தனை நெருக்கத்தைக் கொடுத்திருந்தாலும்,
எனக்கு என்று நெருக்கமானவர்கள்
துளசி கோபால், கீதா சாம்பசிவம், கீதா ரங்கன், கோமதி அரசும்
மிக மிக முக்கியமானவர்கள்.
ஸ்ரீராம், திண்டுக்கல் தனபாலன் எல்லோருமே
தங்கள் அம்மாவாக என்னை ஏற்றுக் கொண்டவர்கள்.

ஏஞ்சல், நீங்கள் எல்லோரும் அன்பைப் பொழிபவர்கள்.
கோமதியுடன் பேசியதிலிருந்து மனம் ஒரு நிலையிலில்லை.
என் புலம்பலைக் கேட்டு மகள் வருந்துகிறாள்.
இன்னும் நேரேயே பார்க்கவில்லை
எப்படி இப்படி ஒரு நட்பு என்று ஆச்சர்யப் படுகிறாள்.
இந்த அன்பை அளவில்லாமல் கொடுக்கும் மனம்
கோமதியுடையது.

நாம் எல்லோருமே இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஸ்ரீராம் வழியாக அவர் வாட்ஸாப் நம்பரை வாங்கிப்
பேசுங்கள்.
நம்மால் முடிந்தது அதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
இறைவன் சோதிக்கிறான்.
கோமதி மாதிரி ஒரு மரியாதைக்குரிய மனுஷி
காண்பது அரிது.
சார் மாதிரி அற்புத மனிதரையும்
காண்பது அரிது.எல்லோருமே மனம் சிதைந்த நிலையில் இருக்கிறோம்.

அன்பு கோமதிக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறேன்.
இப்பவும் துளி மரியாதை குறையாமல் பதில் அனுப்புகிறார்.
மிகத் தவிப்பாக இருக்கிறது.

மெதுவாக அவர் மீள வேண்டும். கடினம் தான்.

நெல்லைத்தமிழன் said...

கடினமான நேரம் கோமதி அரசு மேடத்துக்கு....இதைக் கடந்து வரணும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீங்கள் தொடர்பில் இருந்தது நெகிழ்ச்சியுறச் செய்தது

Geetha Sambasivam said...

நேற்று நானும் பேசினேன். அவங்களால் பேசவே முடியவில்லை. அழுகை பொத்துக் கொண்டு வருகிறது. கண் முன்னால் உயிர் பிரிந்த வேதனையைத் தாள முடியவில்லை. என்னென்னவோ செய்தும் பிழைக்கவில்லையே எனப் புலம்புகிறார். இந்தச் சமயம் பார்த்து மருமகளுக்கு அறுவை சிகிச்சை, மகளும் அங்கே அமெரிக்காவில். என்ன சொல்லித் தேற்றுவது! வார்த்தைகளே வரலை.

ஸ்ரீராம். said...

மனம் எதிலும் செல்லவில்லை.  இந்த ஆண்டுதான் அடுக்கடுக்காய் எத்தனை துயரங்கள்...  இழப்பு என்பதன் வலியை அனுபவிப்பவர்களுக்கு நட்புகளும் உறவுகளும்தான் துணை நிற்கவேண்டும்.  என்ன சொல்லித் தேற்றுவது..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு முரளிமா.
மிக மரியாதைக்கிரியவர்கள் இருவரும்.

அதுவும் அக்கா, உங்க சிங்கம் மாதிரியெ
இவரும் போய்விட்டார் என்று
அழும்போது இன்னும் கனமாகிவிட்டது.
என்னைப் பார்க்க கோமதி வயதில் இன்னும் சிறியவர்.

நன்றாக இருந்திருகலாம் அரசு சார்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தெளிய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா.
மகள் வழிப் பேரன், பேத்த்,மாப்பிள்ளை வந்துவிட்டதாகச் சொன்னார்.
அமெரிக்கா பேரனும் பேசினானாம்.

எப்படியாவது மீண்டு வரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மனமே மரத்துப் போய்விடுமோ என்று தவிப்பாய்
இருக்கிறது.

பகவான் தான் நிம்மதி கொடுக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

கேள்விப்பட்டதிலிருந்தே அதிர்ச்சி தான் வல்லிம்மா...

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நம் எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் அன்பு செலுத்துபவர்
நம் கோமதி.
சீக்கிரம் இறைவன் அவரைத் தேற்ற வேண்டும்.

துரை செல்வராஜூ said...

மனம் ஆறவில்லை.. பார்க்காமலே கேட்காமலே அப்படியொரு அன்பு..
எல்லாம் வல்ல இறைவன் தான் அவர்களது துயரினை மாற்ற வேண்டும்.. அவன் ஒருவனே ஆறுதலும் தேறுதலும் அளிக்க வல்லவன்... இறைவனை வேண்டிக் கொள்வோம்...

காமாட்சி said...

ஆமாம்டஅவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் இறைவன் தாங்கும் சக்தியைக் கொடுக்க வேண்டும். ஆறுதல்கள் அன்புடன்

மாதேவி said...

அறிந்ததில் இருந்து மிகுந்த துயரம் திருமதி கோமதி அவர்கள் துயரில் இருந்து மீண்டு வர பிரார்த்தனைகள்.

Anuprem said...

செய்தி அறிந்ததில் இருந்தே மிகவும் வருத்தமாக இருக்கிறது மா .....

இறைவன் துணை இருந்து அவர்களை காக்கட்டும் ..