Blog Archive

Tuesday, August 18, 2020

venkatesh bhat makes veg makhanwala | aloo gobi masala | north indian gr...

வல்லிசிம்ஹன்
ருசித்து சாப்பிடலாமா.

14 comments:

ஸ்ரீராம். said...

அவர் செய்பவற்றை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தால்தான் சில தொடர்ச்சிகள் தெரியும் போல.   ரெடிமேடாக அவர் செய்து வைத்திருக்கும் பனீர் பட்டர் மசாலா கிரேவி எப்படி செய்வது என்று தேடிப்பார்க்கவேண்டும்.  அதை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாமா என்றும் தெரியவில்லை.  அவர் பிரிஜ்ஜில் வைத்திருப்பப்பதாய்ச் சொல்கிறார்.

நெல்லைத் தமிழன் said...

நல்லாத்தான் இருக்கு. நான் இவர் யூடியூப் பெரும்பாலும் பார்த்துவிடுவேன். இவர் சொன்னாரேன்னு தேங்காய் சட்னியும் ஆனியன் சட்னியும் இவர் மெதட்ல ரவா தோசைக்குச் செய்தேன். ஆனியன் சட்னில, பச்சை ஆனியனை அரைக்கச்சொல்லியிருந்தார். வீட்டுல ஒருத்தரும் சாப்பிடலை. எல்லாரும் என்னைப் பார்த்து முறைக்கறாங்க (ஆனியனை பச்சையா சாப்பிடமுடியுமான்னு.. பண்ணினது வேஸ்டாகிடுச்சு ஹா ஹா)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், நானும் சில செய்முறைகளைப் பார்பபேன். எனக்குப் பனீர் அவ்வளவு பிடிக்காது. நிறைய இதுபோல, மிளகாய் க்ரேவி கூட செய்து காட்டினார். இங்கு அவ்வளவாக ப்ரிட்ஜிஇல் வைத்து உபயோகிப்பதில்லை் அமாவசை, மாத தர்ப்பணம் சமயங்களில் சுத்தமாக வேறு ஒன்றும் சேராது. இங்கே இரண்டு வாரமாக, வெங்காயம் வாங்க தடை சொல்லி இருக்கிறார்கள். எல்லா ஆசையும் விடவேண்டியதுதான்:)))))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு. முரளிமா, பச்சை வெங்காயம் நன்றாக இருக்காதே..வறுத்துட்டுச் செய்தால் போச்சுமா.
அவர் செய்தால் நன்றாக வருமோ என்னவோ:)

வெங்கட் நாகராஜ் said...

காணொளி பார்க்கிறேன் மா. இவரது சில காணொளிகள் கண்டு நானும் ஒன்றிரண்டை முயற்சித்திருக்கிறேன். இப்போது நிறைய காணொளிகள் வெளியிடுகிறார்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா பட் செய்வதை நானும் பார்த்ததுண்டு. ஆனால் நான் சிலது அப்படியே செய்வதில்லை. என் முறைப்படிச் செய்வதுண்டு. மாற்றம் இருந்தால் அது ஒத்துவந்தால் சேர்ப்பது. ஏனென்றால் அவர் ஒரு கை இரண்டு கை என்பது நமக்கு நம் கை அளவு மாறுமே. அவர் நல்ல அனுபவஸ்தர் பெரிய பெரிய ஹோட்டல்களில். எனவே அவர் சொல்லும் கிராம் கணக்கு விஜய் டிவியில் சொன்னது ஒன்று என்றால் இப்போது அவர் தன் சானலில் சொல்வது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக உடுப்பி ரசப் பொடி.

நான் முன்பே உடுப்பி ரசம் அப்போது பங்களூரில் இருந்த என் சித்தி அவர் கேட்டரிங்க் செய்து வந்தார் அவரிடம் கற்றுக் கொண்டதைச் செய்து வருகிறேன். கிட்டத்தட்ட பட் சொன்னதுதான் ஆனால் சித்தி கரெக்ட்டாக கிராம் அளவு சொல்லிக் கொடுத்தார். அது போலத்தான் பிஸி பேளா பாத் ரெசிப்பியும் சித்தியிடம் கற்றதும் பட் சொல்வதும் ஒரே போல்தான் ஆனால் பட் கை அளவு சொல்றார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா என் பாட்டி போல!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்‌ரீராம் ஆமாம் பனீர் பட்டர் மசாவுக்கான மசாலாவை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். அதாவது தக்காளி வெங்காயம் வதக்கி அரைத்து நான் ஃப்ரிட்ஜ் இருந்தப்ப வைத்துக் கொண்டு விடுவதுண்டு. அதில் கொஞ்சம் உப்பும் போட்ட்டு நன்றாக வதக்கு. எப்போது வேண்டுமோ அப்போது இதை டக்கென்று சேர்த்து க்ரேவி செய்துவிடலாம் என்பதால். நல்ல ஏர் டைட் பாட்டிலில் போட்டு வைத்துவிடுவேன். ஆனால் அதிகம் வைப்பதில்லை. ஒரு அரைகிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் அல்லது ஒரு கிலோ கொள்ளும் பாட்டிலில். ஒரு கிலோ பாட்டில் என்றால் இது 4 அல்லது 5 முறை வரும் அம்புட்டுத்தான். சென்னையில் அடிக்கடி செய்ததால். இப்போது ஃப்ரிட்ஜும் இல்லை எனவே அவ்வப்போதுதான்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் பெரும்பாலும் ஹோட்டல்களில் இந்த மசாலாவை ரெடியாகக் கிலோ கண்க்கில் வைத்துக் கொண்டுவிடுவார்கள் அதனால்தான் டக்கென்று நமக்கு க்ரெவி வருகிறது. இதை பேஸாக வைத்துச் செய்யும் க்ரேவிக்கள்.

நானும் சென்னையில் இருந்த வரை வைத்திருப்பேன். கெடாது ஸ்ரீராம் நன்றாக வதக்கி வைத்துவிட வேண்டும். மசாலா, எல்லாம் சேர்த்து.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இப்படித்தான் நான் சொல மசாலாக்களை பொடியாகவும் நம் தெற்கத்தி சமமையலுக்கும் வைத்துக் கொள்வதுண்டு. ஐ மீன் ட்ரையாக. வறுத்து பொடித்து தேங்காய் போட்டும் ஃப்ரிட்ஜில். வேண்டும் போது தண்ணீர் விட்டு அரைத்த்ச் சேர்த்தால் போதும். மகனுக்கும் இப்படியானவை தான் புளியும் சேர்ப்பதென்றால் புளியும் சேர்த்து கொடுத்துவிடுவேன். அங்கு அவன் காய்களுடன் இதைச் சேர்த்துக் கொதிக்க வைத்தால் போதும். கூட்டு குழம்பு என்று. தாளிக்கக் கூட வேண்டாம் எல்லாம் அந்த ரெடிமேடில் இருக்கும். உடுப்பி ரசம் கூடப் பொடியாகவே அதோடு து பருப்பும் கூடப் ப்ரொப்போர்ஷன் கணக்கிட்டு பொடித்து ரசப்பொடியோடு கலந்து அனுப்பிவிட்டேன் அவன் டக்கென்று தக்காளியுடன், கொதிக்க விட்டு விளாவி பயன்படுத்தினால் போதும். நன்றாக இருக்கிறது என்றான்.

கீதா

கோமதி அரசு said...

நன்றாக இருக்கிறது அவர் செய்வது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

அவர் காஷுவலாகச் செய்வதையோ,
அந்தக் காரத்தையோ நாம் போட முடியாது. செய்முறையைப் பார்க்க
இண்டரஸ்டிங்க். அவ்வளவுதான்.
இப்போ இங்கே வெங்காயத்தை எல்லாம்
கடையிலிருந்து எடுத்திவிட்டார்கள்.
சால்மொனெல்லா கிருமியாம்.

அதனாலென்ன, நிறைய மசாலா இல்லாமல்
சாப்பிடலாம்.
இருக்கவே இருக்கு பெருங்காயமும் உப்பும் கருவேப்பிலையும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம்மா.
ஆமாம் தினம் ஒன்றாக வருகிறது. வேலை செய்பவர்களால் சும்மா
இருக்க முடியாது இல்லையா.
யூ டியூப் தளம் சமையல் முறைகளால் நிரம்பிக் கிடக்கிறது.
நீங்களும் செய்து பார்ப்பது மகிழ்ச்சியே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
என் அம்மாவும் ஸ்பூன் அளவில் தான் சொல்லிக் கொடுத்தார்.
பாட்டி கையளவு.
பெரிய குடும்பத்துக்கு சரிப்படும்
இரண்டு மூன்று நபர்கள் என்றால் கை உதவிக்கு
வராது இல்லையாம்மா.
நீங்கள் சுலபமாக எல்லாம் செய்து விடுவீர்கள்.
அன்பாகப் பின்னூட்டம் இடுவதற்கு மிகவும் நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.

நல்ல வண்ணக் கலவையுடன் அவர் செய்வது நன்றாகத்தான் இருக்கிறது.