Blog Archive

Monday, February 24, 2020

நற்காரியங்கள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.


அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

நற்காரியங்கள் 
++++++++++++++++++

15 comments:

KILLERGEE Devakottai said...

அருமை அம்மா

கோமதி அரசு said...

விருந்து பிரமாதம்.
நற்காரியம் செய்தார்கள்.
வாழ்க! வாழ்க!

எத்தனை வயதானவர்கள், முடியாதவர்கள், ஏழைகள் அவர்கள் வயிறு குளிர சாப்பாடு போட்டவர்கள் வாழ்க!
சமைப்பதை பார்ப்பதே அழகு.

இப்படி அம்மியில் அரைத்து வைக்கும் குழம்பு மணக்கும்.

சாம்பாருக்கும், பூண்டும், சோம்பும் சேர்க்கிறார்கள் அது இல்லாமல் இவர்கள் முறையில் செய்யலாம் சமையல். வெண்டைக்காய் மண்டி தேவகோட்டை, காரைக்குடி சிறப்பு சமையல்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சமையல். கிராமிய மணம் கமழ்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி! எத்தனை அருமையாகச் சமைக்கிறார்கள். சுத்தம். எல்லோருக்கும் உணவளிக்கும் அழகு. எல்லாமே சிறப்பு. மிகப் பிடித்த காணொளி. அதுதான் பகிர்நது கொண்டேன் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு கோமதி. இந்த சமையல் அழகையும் அம்மியில் அரைக்கும் பாங்கும் என்னை அசத்தி விட்டது. . பழைய அம்மி நாட்களுக்கும் , ஊரகளுக்கும் சென்று விட்டேன். நமக்கு இந்த பூண்டு, சோம்பு வேண்டாம்.
அவர்கள் சமைத்ததைப் பகிர்ந்து, அன்ன தானம் செய்தது இன்னும் அருமை.
உங்களுக்கும் பிடித்ததே எனக்கு மகிழ்ச்சி. நன்றி மா.

ஸ்ரீராம். said...

கத்தரிக்காயும் வெண்டைக்காயும் கண்ணைப் பறிக்கிறது!  பசுபசுவென காய்கறிகள்...    அவர் அதை சுத்தம் செய்து வெட்டும் அழகு... நாம் சாதாரணமாக நறுக்கியபிறகு காய்களைக் கழுவ மாட்டோம்.  அம்மியில் எத்தனை பாந்தமாக அரைக்கிறார்....   சூப்பர்...    கடைசியில் அந்த வரிசையில் ஒரு இலைபோட்டு அமரும் ஆவல் வருகிறது!

துரை செல்வராஜூ said...

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்த்தோரே...

நலம் வாழ்க...

priyasaki said...

வாவ்..இப்படி அம்மியில் அரைச்சு,அடுப்பில் சட்டி வைத்து சமைத்து எப்ப சாப்பிடபோறேனோ தெரியல. எனக்கு இப்ப்டி செய்ய ஆசை வல்லிம்மா. காய்கறிகள் எவ்வளவு ப்ரஷ் ஆக இருக்கு. ஆ..கறிவேப்பிலை. பார்க்கவே அருமை. அந்த கிராமத்து சூழல் சொல்லி வேலையில்லை. அவங்க வயிறார சாப்பிட கொடுத்தவங்க நன்றாக இருக்கட்டும். நல்லதொரு வீடியோ வல்லிம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் அருமையான சமையல் பண்பான மனிதர்கள.எல்லாமே. பிடித்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு ஶ்ரீராம்.,
இந்தப் பேச்சு ,மற்றும் சமைக்கும் பாங்கு இதெல்லாம் மதுரைப் பக்க வழக்கம் போல் தோன்றுகிறது.

வளமாக இருக்கட்டும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, இந்தக் குழுவினரை மிகவும் பிடித்து விட்டது. சமைத்துப் பகிரந்து கொள்ளும் பாங்கு மிக மிக நலம். வளமே வாழட்டும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பிரியசகி அம்மு,
என்னை அப்படியே ஈர்த்து விட்டதுமா. உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்.
என்னையும் அந்தப் பசுமையும், மக்களும் செய்முறையும் வெகுவாக்க் கவரந்தது.
அம்மியில். அரைக்கும் போது வரும் மணம் தனிதான். நீங்களும் அதையே சொல்கிறீர்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் உண்மையிலேயே அருமையான வாழ்வு முறை. நன்றி மா.

மாதேவி said...

உணவளித்தவர்களுக்கு வாழ்த்துகள். பார்க்கும் போது மனம் நிறைகிறது.