Blog Archive

Saturday, February 22, 2020

வளம் வாழ எந்நாளும் ஆசிகள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
வளம் வாழ  எந்நாளும்  ஆசிகள் 

சில பல காரணங்களால்  , எழுதும் வேலை கடினமாகிறது.
மனஉற்சாகம்,  உடல் வலிமை 
சொல்ல வந்த   வார்த்தைகளைச் சொல்ல 
எண்ணம்  ஓடாமல்  எழுத்தும் நின்றுவிடுவது.
" சொல்ல நினைத்த  ஆசைகள் 
சொல்லாமல் போனதேன்//
சொல்ல வந்த வேளையில்  பொல்லாத நாணம்  ஏன் .
மன்னன் நடந்த பாதையில் 
என் கால்கள் செல்வதேன் //

மன்னன் சென்ற பாதையில் மனைவியும் செல்ல 
நாட்கள் வருடங்கள் ஆகும்.
பொறுப்புகள் எல்லாம் தீர்ந்தாலும் 
நம் ஆன்மாவுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் எத்தனையோ.

நாம் பிறக்கும் போது இருந்தவர்கள் எல்லாம் போகும் வரை நிலைப்பதில்லை என்ற உண்மை நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு 
இறந்த காலத் தவறுகளை,
இனிமேலும் செய்யாமல் , 

வளர்த்த மகன்களிடமோ ,மகள்இடமோ 
உரிமை பாராட்டாமல், பாசம் மட்டுமே  காட்டி 
மிச் ச நாட்களை நிம்மதியாகக் 
கடந்து செல்ல இறை யை எந்நாளும் 
இடைவிடாமல்    மறக்காமல் துதித்து 
உய்யும் வழி காண்பேன்.

20 comments:

KILLERGEE Devakottai said...

நம்பிக்கைதான் வாழ்க்கை நலமே விளையும் அம்மா.

நெல்லைத்தமிழன் said...

நீங்க எழுதுவதைப் படிக்கும்போது நிதர்சனம் தெரிகிறது. உரிமை என்ற வார்த்தை கடமையுடன் சம்மந்தப்பட்டது. பாசம், அன்பு போன்றவை கட்டுப்பாடுகள் இல்லாத உணர்வு.

தொடர்ந்து எழுதணும், அதற்குரிய மனநிலை மற்றும் உடல் நலம் அமையப் ப்ரார்த்திக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

தளர்வு வேண்டாம் அம்மா...

Geetha Sambasivam said...

இங்கே எனக்கும் சில, பல காரணங்களால் மனச்சோர்வுதான். உங்கள் பதிவைப் படித்ததும் கொஞ்சம் தெளிவு வந்திருக்கிறது. அதோடு கணினியில் வைரஸ் பாதுகாப்பைப் புதுப்பிக்கத் தாமதம் வேறே ஆனதால் இரண்டு நாட்களாக வர முடியலை. இன்னும் நான்கைந்து நாட்களில் இந்தியா கிளம்பணும். நீங்க எப்போ சிகாகோ வரீங்க?

ஸ்ரீராம். said...

இந்த மன இறுக்கங்கள் சிலசமயம் வந்துவிடும் அம்மா.   பிடித்த இசை, பிடித்த புத்தகங்கள், பிடித்த மனிதர்கள் ஆகியோர் இதனை போக்குவார்கள். 

உரிமை பாராட்டாமல், பாசம் மட்டுமே காட்டி...    இதைத்தான் பழகவேண்டும். 

வல்லிசிம்ஹன் said...

மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள் அன்பு தேவகோட்டைஜி.
மனம் மிக நலிந்து விட்டது.
பேரன் பேத்திகளுக்குச் சளித்தொல்லை என்றால் கூடப் பதறுகிறது.

எல்லாம் சரியாகும். நல்வார்த்தைகளுக்கு நன்றி மா,

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
உண்மையான வார்த்தைகள்.
நீ உரிமை எடுத்துக்காதே என்பது போலத்தான்
அடுத்த தலைமுறை சொல்கிறது.
கொஞ்சம் வலித்தாலும்,
அஞ்ஞானம் அப்போது விலகுகிறது.
இதுவும் நமக்கு பாடம். பண்பட ஒரு வழி.
மிக நன்றி மா. இதோ அடுத்த பதிவுகளுக்குத் தயாராகலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்.
தளர்ந்தால் வாழ்வு கடினம்.
சில சமயம் சந்தர்ப்பங்கள் நம்மை வருந்த வைக்கின்றன.
அதிலிருந்து மீள வழி இறைவனே கொடுப்பான்.
நன்றி ராஜா. என்றும் வளமுடன் இருங்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமேன்னு ,சும்மாவா சொன்னார். நம் இடம் நமக்கு இதம்.
இறுக்கம் வேண்டாம் அம்மா. சர்க்கரை எகிறும்.
கணினி குணமடையட்டும். வரும் சனிக்கிழமை இறைவன் அருளில் சிகாகோவில் இருக்க வேண்டும். நீங்கள் அடுத்த நாள் கிளம்புவீர்களாக இருக்கும்.
மாமாவும் நீங்களும் சகல சௌபாக்கியங்களுடன் ஆரோக்கியமாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அத்தனையும் உண்மை ஸ்ரீராம்.
வாயைக் கட்டி விட்டால் வருத்தம் தொலையும்.
இசையும் புத்தகங்களும் இருக்கோ, நான் உயிர்வாழ்கிறேனோ.

பாட்டி நினைவு வருகிறது. அன்று மதியம் அவர் இருக்கப் போவதில்லை. காலையில் நான் பள்ளிக்கூடம் கிளம்பும்போது ,
பராக்குப் பார்க்காமல் உச்சிவெய்யில் தலையில் விழாமல் நிழலோடு நட என்றார்.
கேட்கும் போது அவசரத்தில் கோபம் வந்தது.
பிறகு அவர் சொன்னபடியே நடந்தேன்.
அந்தக் கோபம்கூடப் பட்டிருக்க வேண்டாம்.
இதுதான் உலகம். நன்றி ஸ்ரீராம்.

கரந்தை ஜெயக்குமார் said...

கலங்காதீர்கள்
இதுவும் கடந்து போகும்

வெங்கட் நாகராஜ் said...

நல்லதே நடக்கும் என நம்பிக்கையுடன் முன் செல்வோம் மா...

ஹிந்தி பாடல் மீண்டும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வது சரிதான் அக்கா.
குழந்தைகளின் நலனுக்கு இறைவன் கிட்டே வேண்டிக் கொண்டு .அவர்கள் சொல்வதை மட்டும் நாம் கேட்டுக் கொண்டால் போதும்.
காலம் அப்படித்தான் இருக்கிறது.

அவர்கள் பேசினால் மகிழ்ந்து கொண்டு பேசவில்லையென்றால் கவலைபட்டுக் கொண்டு இருக்கிறது மனசு.

உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா.
சாரின் நினைவுகள் வந்து கொஞ்சம் மனதை சஞ்சலபட வைக்கிறது. மனதைரியத்தை கொடுக்கச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

பாடல் இங்கு திறக்கவில்லை. யூ-யூடிப் போய் கேட்டேன். நல்ல பாடல்.

பிலஹரி:) ) அதிரா said...

வீடியோ வேலை செய்யவில்லையே வல்லிம்மா.

//சில பல காரணங்களால் , எழுதும் வேலை கடினமாகிறது.
மனஉற்சாகம், உடல் வலிமை
சொல்ல வந்த வார்த்தைகளைச் சொல்ல
எண்ணம் ஓடாமல் எழுத்தும் நின்றுவிடுவது.//

இது நம் எல்லோருக்கும் அடிக்கடி நடப்பதுதான் வல்லிம்மா... ஆனா இவற்றுக்கு இடம் கொடுக்காமல், நாம் இவற்றை வெல்ல வேண்டும்.. அப்போதுதான் நமக்கு உற்சாகம் பிறக்கும்..

கண்ணதாசன் அங்கிள் சொன்னதை அடிக்கடி நினைப்பேன்..
“உணர்வுகளும் உணர்ச்சிகளும் நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிடக்கூடாது”..

பிலஹரி:) ) அதிரா said...

பிறக்கும்போதும் தனியாகவே பிறந்தோம், அதுபோலவே போகும்போதும் தனியாகவே போகப்போகிறோம், ஆனா வாழும்போது மட்டும் நம்மால் தனியே வாழ முடிவதில்லை.. இது என்ன டிஷைனோ எனத்தான் அடிக்கடி நினைப்பேன்... நாம் போக விரும்பினாலும் போக முடியாது, போக மாட்டேன் என அடம் பிடிச்சாலும் எ. அங்கிள் விடமாட்டார்ர்:)).. அதனால வருங்காலத்தைப் பற்றி எண்ணாமல், இன்றைய பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்க முயற்சி செய்வோம் வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

16 வருடங்களாகக் கடந்து கொண்டிருக்கிறேன் அன்பு கரந்தை ஜெயக்குமார்.
மிச்சத்தையும் கடக்கலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் இனிய திங்கள் காலை வணக்கம்.
நீங்கள் எல்லோரும் கூடவே பயணிக்கும் போது என் பாரம் மிகக் குறைகிறது.
நன்றி மா. தேற்றிக் கடக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அவர்கள் பேசினால் மகிழ்ந்து கொண்டு பேசவில்லையென்றால் கவலைபட்டுக் கொண்டு இருக்கிறது மனசு.../////////இதுதான் உண்மை. ஒதுக்கப் படுகிறொம்
என்று தெரிந்தும் பழைய தைரியத்தை
மேலெழும்ப வைப்பது சுலபமே அன்பு கோமதி.
தாண்டி விடலாம்.
பாடல் முதலில் ஒலித்தது இப்போது கேட்கவில்லை.சிங்கம் முணுமுணுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

ஆதரவான வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

“உணர்வுகளும் உணர்ச்சிகளும் நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிடக்கூடாது”..
அன்பின் அதிரா,
அவர் பட்டுத் தெளிந்த மகான்.
எல்லோரின் ஆதரவும் எப்பொழுதும் இருந்தது அல்லவா.

பெண்ணாக இருப்பதும், சார்ந்திருப்பதும்
நம்மை பலவீனமாக்குகின்றன.

நீங்கள் சொல்வது போல் நாம் விரும்பிப் பிறக்கவில்லை.
நாம் விரும்பிப் போகவும் முடியாது.

பொறுமை, மனோதைரியம் எத்தனையோ சாதிக்கும்.
என்றும் பதினாறில் இருக்கும் அதிரா,
அறிவில் மிக உயர்ந்தவர் என்பது தான் உண்மை.
நன்றி மகளே என்றும் வாழ்க வளமுடன்.

மாதேவி said...

மனதை தளரவிடாதீர்கள் நன்மையே நடக்கும்.