வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++\
அங்கே இங்கே வாய் வைத்து விட்டு
உலகம் முழுவதும் ஆட்களை அனுப்பிப்
பரவ வைக்கிறது.
இதுவோ ஒன்றே உலகம் என்றாகிவிட்டது.
ஆனானப் பட்ட வெறும் ஆள் நான்,
ஊர் உலகம் சுற்றும் சுற்றும்போது,
எத்தனையோ வணிக சம்பந்தமாக ஆண்களும் பெண்களுமாகப் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சுற்றி இருக்கும் இத்தாலி,ப்ரான்ஸ் இவை
நிறைய பாதிக்கப் பட்டு,
மெதுவாக மீள முயற்சிக்கின்றன.
அங்கிருந்து வெளியுர்களுக்குக் கிளம்பினவர்கள்
தங்களை அறியாமலேயே இந்த ஊருக்கும் கொண்டுவந்து விட்டார்கள்.
ஆனால் நல்ல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சமாளிக்கத் தயார் ஆகிறார்கள்.
இதோ நாளை கிளம்புகிறோம்.
எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++\
அங்கே இங்கே வாய் வைத்து விட்டு
உலகம் முழுவதும் ஆட்களை அனுப்பிப்
பரவ வைக்கிறது.
இதுவோ ஒன்றே உலகம் என்றாகிவிட்டது.
ஆனானப் பட்ட வெறும் ஆள் நான்,
ஊர் உலகம் சுற்றும் சுற்றும்போது,
எத்தனையோ வணிக சம்பந்தமாக ஆண்களும் பெண்களுமாகப் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சுற்றி இருக்கும் இத்தாலி,ப்ரான்ஸ் இவை
நிறைய பாதிக்கப் பட்டு,
மெதுவாக மீள முயற்சிக்கின்றன.
அங்கிருந்து வெளியுர்களுக்குக் கிளம்பினவர்கள்
தங்களை அறியாமலேயே இந்த ஊருக்கும் கொண்டுவந்து விட்டார்கள்.
ஆனால் நல்ல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சமாளிக்கத் தயார் ஆகிறார்கள்.
இதோ நாளை கிளம்புகிறோம்.
எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
24 comments:
எல்லாம் நலமாகும் அம்மா
நலமே கிளம்பி வந்து விடுங்கள்.. வாழ்த்துக்கள்.
கொரோனா மிருகம். இதுவரை யாருமே உபயோகித்திராத வார்த்தைப் பிரயோகம். ஒரே வார்த்தையில் கொரோனாவிற்கு இலக்கணமான பொருத்தமான வார்த்தை. மின்னலடித்த மாதிரி உங்கள் மனசில் மின்னிய 'மிருகம்' என்ற சொல்லாட்சியை நினைத்து நினைத்து பிரமிக்கிறேன்.
அன்பு தேவகோட்டைஜி,
உண்மையே, பயமுறுத்தி விட்டுக் கிளம்பிவிடும்.
மிரட்டுவதைக் கண்டு நாம் கலங்கக் கூடாது.
நன்றி மா
அப்படியே ஜீவி சார்.
சிகாகோ செல்கிறோம். எல்லோருக்கும் உண்டானது நமக்கும்.
இந்தக் குளிர் நாளினால வெகு வேகமாகப் பரவுகிறது.
நன்றி ஜி..
அன்பு ஜீவி சார்,
1962 இல் சிங்க நாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது'' பாடல் நினைவுக்கு வருகிறதா.
அங்கேயிருந்து கட்டவிழ்த்துப் பட்டது இந்தக் கொடூரம்.
சுனாமியை விட மோசமானது.
யாரிடம் இந்த நோய் வந்திருக்கிறது என்றுதெரியும் முன்னாலயே அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு வந்து விடுகிறது,.
சட்டென்று வந்து விழுந்த வார்த்தைதான் அது.
நன்றி சார்.
மிருகம் கூடத் தன்னை வருத்துபவர்களைத் தான் துன்புறுத்தும்.
இதற்கு வேற பெயர் வைத்திருக்கலாமோ:)
எல்லாம் நல்லபடி .நடக்கட்டும் அம்மா. இந்த பேராபத்திலிருந்து மீள்வதற்கு உலகமே துடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நோய் தாக்குண்டவரைப் பிடிக்கும் பார்த்தால் மனம் பேதலித்து விடும் போல... வெறிநாய்க்கடிக்கு ஆளானவர்கள் படும் அவஸ்தை ஞாபகத்துக்கு வருகிறது.
நலமாக சிகாகோ சென்று மகள் , மருமகன், பேரன்களுடன் மகிழவாய் இருங்கள்.
மகிழவான பயணத்திற்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
நலமாய் கிளம்பி வந்து விடுங்கள்
வாழ்த்துகள்
நினைக்கப் பயமாகத்தான் இருக்குது வல்லிம்மா, எல்லாம் விதிப்படிதான் நடக்கும், நம் கையில் என்ன இருக்கிறது..
தங்களது தளத்திற்கு வந்து வெகு நாட்களாகின்றன...
எல்லாம் நலமாக ஆவதற்குப் பிரார்த்திப்போம்...
அன்பு ஶ்ரீராம் , நிறைய பேர் வைத்தியரிடம் செல்லவே. பயப்படுவதாகச் செய்தி வந்தது. நம் ஊரில் இன்னும் ஜாக்கிந்தையாக இருக்க வேண்டும்.என் பிரார்த்தனைகள்.
நன்றி அன்பு கோமதி. அங்கே ஏர்ப்போர்ட்டில் நல்ல கெடுபடி இருக்கும். கடவுள் நம்முடன். மீண்டும் சந்திப்போம் வாழ்க வளமுடன்.
நன்றி அன்பு ஜெயக்குமார். எல்லோரும் நலமுடன் இருப்போம்.
அன்பு அதிரா, உண்மைதான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதில் மறு பேச்சில்லை.
அன்பு துரை .நலமுடன் இருங்கள் உங்கள் ஊரிலும் பள்ளிகள் மூட்பபட்டிருப்பதாகக் கேள்விப் பட்டேன் எச்சரிக்கை தேவை. ஊருக்குக் கிளம்பும் மும்முரம் மீண்டும் சந்திக்கலாம்.
நலமே விளையட்டும்....
பயணம் சிறக்க வாழ்த்துகள் மா.
உலகமே பதறும் நிலை வந்து விட்டது...
இருந்தாலும் நல்லதே நடக்கும்...
மாமி, பத்திரமாக வந்து விடுங்கள். திரும்பி சிகாகோவிற்குதானே. சிகாகோவிற்கு நல்வரவு. சுமித்ராவிற்கு பதில் நான் இன்னொரு மகள் கூறுகின்றேன்.
ஆமாம் ராஜா.பத்திரமாக இருக்க வேண்டும்.
நன்றி வெங்கட்.
அடடா.ரமா. நன்றி டா.
இன்னும் விரட்டிக்கொண்டுதான் இருக்கிறது:(
Post a Comment