வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்
வாசமுள்ள மஞ்சள் மலரே !
இந்தப் பூ மரம் எங்கள் வீட்டுக்கு 1983யில் வந்தது.
ஒரு இரண்டடி வளர்ந்ததும் மொட்டு வந்துவிட்டது.
மொட்டாக இருக்கும்போதே அத்தனை வாசனை ,ஜன்னல் வழியே வந்து மூக்கை வருடும்.
நிறைய விருந்தாளிகள் வீட்டுக்கு வரும் காலம் அது.
அவர்களில் சிலர் இது வீட்டில் வைக்கக் கூடாத மரம்
என்ற எண்ணம்.
இந்த மரத்தின் பூக்கள் மாடியில் ஜன்னலை உரசியபடி இருக்கும். 10 வருடங்களில் அவ்வளவு வளர்ந்து விட்டது.
தம்பிகளின் மனைவிகள் வரும்போதெல்லாம்,
இதன் மலர்களை ஆசையுடன் எடுத்துச் செல்வார்கள்.
இந்த நெல சம்பங்கி வளர எங்கள் குடும்பமும் வளர்ந்தது.
அத்துடன் பக்கத்தில் நடப்பட்ட மணிபிளாண்டு இந்த மரத்துடன்
பின்னிப் பிணைந்து வளர்ந்து வீடு அமேசான் காடு போல ஒரு தோற்றம் கொடுத்தது.
மணி பிளாண்டின் ஒவ்வொரு இலையும் பலகாரம் வைத்து சாப்பிடலாம் போல
பெரிதாக இருந்தது.
1983 லிருந்து 2013 எங்களுக்கு நல்ல மணத்தை அள்ளித் தந்து,
பச்சைப் புல்களுக்கிடையே மஞ்சளும் வெண்மையாக மனதை
மயக்கிக் கொண்டாடிக் களித்தது.
சென்ற வருடம் 16 நாட்கள் சென்னையில் இருக்கும் பாக்கியம் கிடைத்தது.
ஐப்பசியில் அபரிமிதமாகப் பூக்கும். வருபவர்கள்
மீது ஒவ்வொரு மலராக விழும்.
சிதறிக்கிடக்கும் மஞ்சள் பூக்களை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் இட்டு வைப்பேன்.
மேலே படத்தில் இருக்கும் மலரின் அழகுக்கு
சில வரிகள்.
//
பூத்து மணம் வீசி மரம் விட்டு வீழ்ந்த பூவே
கவலை வேண்டாம்.
இதோ அடுத்து வரப் போவது உன் துணைப்பூ.
தனிமை நிரந்தரமில்லை.
வேறு யாரும் உன்னை மிதிக்காமல்
காற்று உன்னைக் காக்கும்.//
அழகான படத்தைக் கொடுத்த நண்பர் கௌதமன் ஜி க்கு மிக மிக நன்றி.
கொக்கி 200125 நம்ம ஏரியா கதை.

4 comments:
மிக அருமையாக மஞ்சள் மலர் ஒற்றை மலரைப் பற்றி எழுதி விட்டீர்கள். கடைசியில் எழுதிய கவிதை மனதை கனக்க வைத்து விட்டது.
மிக மிக நன்றி கோமதி மா.
இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறோம்.
மீண்டும் பார்க்கலாம். வாழ்க வளமுடன் மா.
தனிமை நிரந்தரமில்லை...
உண்மை மா...
கொக்கி பதிவில் வந்த மலருக்கான பதிவு நன்று.
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
'வாசமுள்ள மலரது வசந்தத்தை தேடுது.'...
Post a Comment