Blog Archive

Monday, March 02, 2020

இறைவன் எல்லோரையும்காக்கட்டும்.

வல்லிசிம்ஹன்

அம்மா உனக்கு வயதாகிவிட்டது என்று
சிரிக்கும் மகனின் அன்னை என் பக்கத்து சீட்டில் இருந்தார்.

என்னையும் விட  சரீர கனம் அவர்க்கு அதிகம். நான்
சன்னலோர  இருக்கையில் இருந்தேன்.
அவருடைய மகனும் எங்கள் மகனும் அடுத்தடுத்த
இருக்கைகளில்.

நமக்கெல்லாம் இகானமி லாயக்கில்லை என்று புன்முறுவல் பூத்தார்
அந்த அம்மா. என் வயதிருக்கலாம்.
நானும் ஒத்துக் கொண்டேன்.
அவரிடம் சொல்ல முடியுமா. நமக்குப் பிரயாணமே வேண்டாம்
என்று.

9 மணி நேரமும் சுற்றிலும் இருமல், தும்மல்,
எல்லோர் முகத்திலும் எச்சரிக்கை உணர்வு.
யாரைப் பார்த்தாலும் சந்தேகம்.
விமானப் பணிப்பெண்கள் ஒரு கையுறை கூடப்
போடாமல் நடமாடுவது அதிசயமாக இருந்தது,

ஸ்விஸ்ஸில் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று
இருபதை எட்டி இருந்தது.
 காரணமே இல்லாமல் தாக்கப் படும் இடமாக
இருக்கிறது. போக்குவரவு நிறைய.
இத்தாலியில் முழுவீச்சில் சேதக்கட்டுப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஊரிலும் (பாசல்) அந்த எச்சரிக்கை பரவி இருக்க வேண்டும்.

நான் வந்த விமானத்தில் பயணிகள் முழுவதும் அமெரிக்கர்கள்.

பலர் வாய் மூக்கு மூடிய ஜெயின் துறவிகளைப் போலத்தான்
நடந்து கொண்டிருந்தார்கள்.
வருமுன் காப்போனாக இருப்பதே அழகு.
வந்த பின் நம்மால் அவதியுறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமே.

பயனாக களைப்பு  ,மற்றும் இமிக்ரேஷன் படுத்தல் 
நமக்கு ஏன் இந்தத் தொல்லை எல்லாம் , 
எப்பொழுதும் நினைவில் வருவது  நம் வீடுதான்.

நிம்மதியாக  அங்கே  இருந்துவிடலாம்.
தொலைக் காட்சி பார்த்தால்  தானே 

மனக் கவலை  என்று யோசித்தாலும் 
7 வருடங்களுக்கு முன் இருந்த தெம்பு 
இப்போது  இல்லை  என்பதுதான் உண்மை.

இறைவன் எல்லோரையும்காக்கட்டும்.


14 comments:

Geetha Sambasivam said...

நீங்கள் சிகாகோ சென்றடைந்த அன்று நாங்கள் இந்தியா வந்து அடைந்தோம். பயணம் முடியவில்லைதான். இம்முறை ஜெட்லாக்னு இல்லை. ஆனால் கால் வலி உயிரைக் கொல்கிறது. தூக்கம் வருவதில்லை. சரியாகத் தூங்கி நான்கைந்து நாட்கள் ஆகின்றன. இன்னிக்காவது தூங்குவேனா தெரியலை.

கோமதி அரசு said...

பயணவிவரம் முகநூலில் படித்தேன்.
பழைய தெம்பு இருக்காதுதான், ஆனால் தெம்பு இருப்பது போல் நினைத்துக் கொள்ள வேண்டும், அதனால் கொஞ்சம் மனபலம் கிடைக்கும்.

கீதா சாம்பசிவம் போலவே எனக்கும் ஒரு வாரமாய் இருக்கிறது தூக்கம் என்பதே இல்லை. புத்தகம் படித்தல், இறைவனை தொழுதல் என்று தான் இருக்கிறேன் பகல் பொழுது எப்படியோ ஒடிவிடுகிறது. இரவு தூங்கவில்லை என்றால் உடல் சோர்வு, மனச்சோர்வு வருது.

ஜீவி said...

//பயனாக களைப்பு ,மற்றும் இமிக்ரேஷன் படுத்தல்
நமக்கு ஏன் இந்தத் தொல்லை எல்லாம் ,
எப்பொழுதும் நினைவில் வருவது நம் வீடுதான்.//

இந்தியா மாதிரி பேசாமல் வீட்டிலேயே இருக்கக்கூடாதா என்று எனக்கும் அமெரிக்கா வந்து இவர்கள் அடிக்கடி சுற்றுலாக்களுக்கெல்லாம் செல்லும் பொழுது தோன்றும்.

இதோ அங்கு வர இப்பவே டிக்கெட் புக் பண்ணி விட்டார்கள். ;]

ஸ்ரீராம். said...

வேறு வழியில்லாத பயணங்கள்.  பாதுகாப்பாய் இருக்கவேண்டும்.  எல்லாம் நல்லபடி நடக்கட்டும் அம்மா,

ஸ்ரீராம். said...

கீதா அக்கா மற்றும் கோமதி அக்கா...    உடல்நிலையை கவனித்துக்கொள்ளுங்கள்.

கோமதி அரசு said...

இறைவன் எல்லோரையும் காக்கட்டும் அக்கா.

வெங்கட் நாகராஜ் said...

நலமே விளையட்டும்...

எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் அம்மா... கவலை வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. இப்பொழுதுதான் உங்கள் பதிவு படித்தேன். அப்போதுதான் தோன்றுகிறது. எல்லோருக்கும் பழகி விட்டதே. நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று.

அதுவும் இந்தக் குளிர், கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. இராத்திரித் தூக்கம் இல்லைன்னு ஆகிட்டது. கோமதியும் இதையே சொன்னார்.

சரியாகிடும்னு நினக்கிறேன்.

மாமாவுக்கும் உங்களுக்கும் உடல் நலம். சரியாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். அன்பு கோமதி...
இந்த. தொந்தரவும் கடப்போம். வேறு என்ன செய்வது.
உடல் நலம் தேறவும் கை வலி குணமாகவும் என் பிரார்ததனைகள். நீங்கள் சொன்னபடியே. மனத்துணிவு
பயிற்சி செய்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜீவி சார்.
சம்பந்தம் இல்லாத. இடத்தில் இருப்பது போல

நீங்களும் வருகிறீர்களா! நல்லதுதான். யாம் பெறும் இன்பம் பெறுக வையகம்.:)

இதே போல கணினி வழியே உரையாடலாம்.!

வல்லிசிம்ஹன் said...

நலமே விளையட்டும்.நன்றி வெங்கட்.

priyasaki said...

உடல நலத்தை பார்த்துக்குங்க வல்லிம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் நலமாக அமையும் அம்மா...

மாதேவி said...

எல்லாம் நலம் என நம்புவோம்.