நம்பி ஆறு எல்லோரும் வளமாக வாழ வேண்டும் |
திருநெல்வேலி வந்தாச்சு. |
வைணவ நம்பி கோவிலுக்கும் வந்து விட்டோம். |
புகழ் பெற்ற நம்பி கோவில் படிகள் |
பிரகாரச் சிறப்பு சிற்பங்கள் |
நெல்லையில் தாமிரபரணி .
அனைவரும் துலா ஸ்நானத்திற்கு காவிரியத் தேடித் சென்று கொண்டிருக்கையில் நான் பொருனையை நாடிக் கண்டேன்.
கீழநத்தத்தில் கோவிலைத் திறந்ததும் உள்ளே சென்று ஸ்ரீவேணு கோபாலனைத் தரிசனம் செய்து வைத்தார்
பட்டாச்சார்.
அதற்குள் ஊர்ப் பெரியவர்கள் வந்து எங்களை
விசாரித்தார்கள். ஏதாவது பரிகாரமோ என்று ஒருவர் கேட்டார்.
வெறும் அபிமானத்தால் வந்தோம் என்று விளக்கினோம்.
கோவில் மிக மிக சுத்தமாக இருந்தது.
கொஞ்சம் பணத்தேவை இருந்ததை மிக்க கௌரவமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
முன்பே சொல்லி விட்டு வந்தால்
தங்கும் இடம் ஏற்பாடு செய்து,நாங்களே சமைத்துக் கொள்ள வசதியும் செய்து கொடுப்பதாவும் என்றும் சொன்னார்கள்.
மிக உயர்ந்த பதவியில் வேலை யில் இருப்பவர்கள் ,சொந்த ஊருக்கு வந்து மாதக்கணக்கில்
இங்கு வந்து கோவில் கைங்கரியம் செய்வதாகவும் சொன்னார்கள். எல்லோருக்கும் 60 வயதும் அதற்கு மேலேயும் இருக்கும்.
வைகாசி,சித்திரையில் திரு நாட்களுக்கு வருமாறு
அழைப்பும் விடுத்தனர்.
இந்தக் கிராமமும் ,கோவிலும் ஸ்ரீவேணுகோபாலன் கருணையில்
செழிக்க வேண்டும்.
அடுத்த நாள் திருக்குறுங்குடி பயணம். செல்வோம்.