Add caption |
Add caption |
வீடே அல்லொலகல்லோலப் பட்டது.
பாட்டியும் தாத்தாவும் காசிக்கும் கயாவுக்கும் யாத்திரை போகிறார்கள் என்றால்
சும்மாவா.
அதுவும் தாத்தாவுக்குக் கோவில் குளம் இங்கெல்லாம்
போவது வேஸ்ட் என்று தீர்மானம். அருகிலுள்ள அனுமார் கோவிலுக்கு மட்டும் போய்
வருவார்.
அங்கே ராமர் பட்டாபிஷேகப் படம் பெரிதாக் மாட்டி இருக்கும்.
பெங்களூரில் அனுமன் கோவிலுக்கா பஞ்சம்.
மற்றபடி மாடிப் படுக்கை அறைக்கு ஏறும்போதும் இறங்கும்போதும்
ராம் நாமமே துணையாக நடந்து வருவார்.
பாட்டிக்குப் பூஜை அறையே கோவில்.
நிறைய தோழிகள் உண்டு. தினம் ஒரு கோவில்.மல்லேஸ்வரத்துக்கு எப்பவொ
1960இல் குடிவந்தது.
அதற்கப்புறம் பொன் போலப் பிள்ளையும் பெண்ணும் தான்.
அலுப்பில்லாத சம்சாரம்.
தாத்தா இளைஞராக வேலைக்குச் சேர்ந்த தொலைபேசி இலாகாவில்
இப்போது ஜி எம் வேலை..இன்னும் கன்சல்டண்டாகத்தான் இருக்கிறார்.
இதோ 63 வயதை எட்டும்போது போர்ட் மீட்டிங்க்,டைரக்டர் கான்ஃபரன்ஸ் என்று
போய் வந்து கொண்டிருக்கிறார்.
இறைவன் கொடுத்த ஆரோக்கியமான உடம்பு.
டென்னிஸ் விளையாடுவார்.
பிள்ளையும் பெண்ணும் திருமணமாகிப் போனதிலிருந்து
ஒரு சங்கடமும் இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறது
வாழ்க்கை.
பாட்டிக்கு இருதய நோய் வரும் வரையில்.
திடீர் என்று இரவு வேளையில் வந்த வலிக்கு
ஆஞ்சியோ ப்ளாஸ்டி ,வாழ்வுக்கு உத்திரவாதம் கொடுத்தது.
உடல் இளைத்தாலும் மனம் இளைக்காத
பாட்டி ,வஞ்சு, தன் வழக்கமான சுற்றல்களிலிருந்து
கொஞ்சமே குறைத்துக் கொண்டாள்.
தாத்தா ஸ்ரீனிவாசனும் வீட்டில் நிறைய நேரம் தங்க ஆரம்பித்தார்.
அப்போதுதான் அவர்களுக்கு அனுமார் கோவில் நட்பு
ஒருவர் காசிக்கு யாத்திரை ஏற்பாடு செய்வதாகவும், முன்னோர்களுக்கான
கயா ஸ்ரார்த்ததுக்கு ஏற்ற மாதிரி பயணத்தை அமைக்கப் போவதாகவும் சொன்னார்.
ஸ்ரீனிவாசன் தயங்குவதைக் கண்டு, மாமியைப் பற்றிக் கவலை வேண்டாம்.
இங்கிருந்து ரயில் இலஹாபாத் போகிறோம்.
பிறகு காசியும் ,கங்கையும், கயாவும்,மத்ரா கிருஷ்ணனும் தரிசனம்.
வரும்போது விமானப் பயணம். பங்களூரு வந்துவிடலாம்.
கூடவே டாக்டர் ராமமூர்த்தியும், பிகே ஸ்ரீனிவாசனும் வருகிறார்கள்.
உடல் நேரத்துடன் ஒத்துழைத்தால் ,காலமும் நம்மை நடத்திச் செல்லும்.
பகவான் நம்முடன் வருவார்,.
மாமிக்கும் உங்களுக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
விட்டுவிடாதீர்கள் என்று முடித்தார்.... பயணம் முடிவாகியது.
Add caption |
Add caption |
16 comments:
இதய நோய் வந்தவர்கள் பயணம் செய்யத் தயங்குவது இயற்கை.
பயமாகத்தான் இருக்கும்.
அதுவும் விமானப்பயணம்...
தொடர்கிறேன்.
நாங்க கயிலை யாத்திரை போனப்போ இருதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவங்கல்லாம் வந்தாங்க. தொடருங்க காத்திருக்கேன்.
காசி பயணம் அருமை.
தொடர்கிறேன்.
அம்மா, அப்பா படம் அருமை.
பயணத்தில் நானும் வருகிறேன்...
முதல் படம் அருமை அம்மா.
அன்பு ஸ்ரீராம், வஞ்சும்மாவுக்கு ஆஞ்சியோ செய்து இரு மாதங்களே ஆன நிலை. ரயில் போவதையே விரும்பினார்கள். திரும்பும் பயணம் மட்டும் விமானத்தில்.
சுகாதாரம் சுற்றூச் சூழல் எல்லாம்வெகுவாகப் பார்ப்பார் ஸ்ரீனிவாசன். ஏதாவது
தொற்று பிடித்துக் கொள்ளும் என்ற பயம்.
நல்ல படியே சென்று வந்தார்கள் மா.
காசிக்குப் பயணம். நானும் உடன் வருகிறேன்.....
உண்மைதான் கீதா. மனதில் உறுதி இருந்துவிட்டால்.
பயணம் நன்மையே தரும்..அப்படியே நடந்தது.
நன்றி கோமதி மா. அம்மா அப்பா படம் 1994 இல் நம் வீட்டு வாசலில் எடுத்தது.
அவர்களும் பத்ரி நாத் போய் வந்தனர்.
வரணும் தேவகோட்டைஜி. முதுமையும், அதிலும்
ஓடும் நீரில் உறுதியாகக் கால் வைத்து
நீராடும் திறத்துக்கு நம் பாராட்டு அவசியம்.
அருமையான பயணம் தொடங்குகிறதே அம்மா....நாங்களும் தொடர்கிறோம். தாத்தா பாட்டியுடன்
துளசிதரன், கீதா
போகும் உத்தேசமும் இருப்பதால் ஆர்வத்துடன் தொடர்கிறோம்
வணக்கம் சகோதரி
மனதில் ஒற்றுமை நிறைந்த தம்பதிகளின் புண்ணிய நதி தீர்த்த பயணம் என்பது மனதிற்கு இதமளிக்க கூடியது. அவர்களின் பயணத்தில் நானும் மானசீகமாக இணைகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு வெங்கட், வந்து படித்ததற்கும்
அருமையான கருத்து சொன்னதுக்கும் மனம் நிறை நன்றி மா.
அன்பு துளசி,கீதா
வெகு நாட்கள் மந்தில் உருவான பயணம். நல்லபடியே நடக்கும். உங்கள் இருவர் தொடர்ந்த ஆதரவுக்கு மனம் நிறை நன்றிம்மா.
அன்பு ரமணி,
நல்ல படியாகத் திட்டம் செய்து போய் வாருங்கள். தண்ணீர்
கையில் நிறைய வைத்துக் கொள்ளுங்கள்.
இடம் பார்த்து சாப்பிடுங்கள்.
இனிய பயணம் அமைய வாழ்த்துகள்.
அன்பு கமலாமா,
அருமையான பின்னூட்டதுக்கு மிக நன்றி. உங்களை எல்லாம் பார்க்க ஆவல் மேலிடுகிறது
Post a Comment