Blog Archive

Wednesday, May 23, 2018

வாழ்க்கையின் குரல் 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

உள்ளே வந்து உட்கார்ந்த விஸ்வனாதன் தான் காசி என்பதை உணர்ந்ததும் ,சந்திரா கலங்கினாலும்.
நீயும் இந்த சீட்டாட்ட கும்பலில் ஒருவனா என்றாள் கோபத்தோடு.
நான் ஒருவனில்லை. அந்த கிளப்பின் உரிமையாளர்.
என்றான்.

நீயா சுந்தரத்தை இத்தனை இழிந்த நிலைக்குக் கொண்டு வந்தாய் என்று
ஆத்திரத்தில் சத்தமெழுப்பினாள்.

ஏன் உனக்கு இத்தனை கோபம் . சுந்தரம் சின்னக் குழந்தை இல்லையே.
அவனே சூதாடித்தோற்றான். நான் மேற்பார்வையாளர்  மட்டுமே.
நான் சீட்டு விளையாடுவதில்லை.

அது இருக்கட்டும். இப்போது அவனைப் பார்த்தாயா.
கூட விளையாடினவனைத் தாக்கிவிட்டான். தானும்
காயப்பட்டான்.
எங்கள் கணக்கில் இருபதாயிரம் வர வேண்டி இருக்கிறது. நீ
கொடுப்பாய் என்றதால் இங்கே வந்தேன்.
 இல்லாவிட்டால் எங்கள் நடை முறையே வேறு என்றவனை உறுத்து விழித்தாள்.

உன்னுடைய அறிவு இந்த வழியில் இறங்கிவிட்ட பிறகு உன் கிட்ட
நற்குணத்தை எதிர்பார்ப்பது என் முட்டாள் தனம்.
இதோ வருகிறேன் என்று உள்ளே சென்றவள்
 ஸ்வாமி சன்னிதியில் கைவளைகளைக் கழற்றினாள்.

இரண்டு வளைகளைத் தனியாக அவற்றின் மதிப்பு, பதிந்த தங்கமாளிகை ரசீதுடன்
 காகிதத்தில் பொதிந்து , ஹால் ,டீப்பாய் மேல் வைத்தாள்.

என்னைப் பொற்கொல்லனாக்கப் பார்க்கிறாயே.
இது ஒரிஜினல் என்று நான் எப்படி நம்புவது.
என்றதும்,
கண்ணைத் திறந்து அந்தக் காகிதத்தைப் பார். இப்போதைய விலை 30 ஆயிரத்துக்கு இருக்கும்.
நீ இனி இங்கே வரக்கூடாது.
அவர்  விளையாட்டுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை.

படிக்காத குடிசைப் பெண்களிடம் உன்  சின்னத்தனத்தை வைத்துக் கொள்.

மீறி என்னை மிரட்டினால் மேற்கொண்டு யாரை அணுகுவது என்று எனக்குத்தெரியும்.
தனியாக இருக்கும் பெண்ணைத் துன்புறுத்தினால்
நடக்கும் விபரீதம் உனக்கும் புரிந்திருக்கும்
என்றவள் வாயிலை நோக்கி நடந்தாள். நீ போகலாம்.

அவருக்கு நான் பிணை இல்லை. இது என் வீடு.என் சம்பாத்தியம்.
மீண்டும் சொல்கிறேன்.
இவ்வளவையும் கேட்டு அசராமல் வெளியே சென்றன் விஸ்வனாதன் என்ற காசி.

மிக சிரமப்பட்டுத் தன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு
தன் பெண்களை அழைத்துக் கொண்டாள்.
 ஏம்மா,என்ன ஆச்சு, யார் வந்தது.
அம்மா உன் கை வளையல் எங்கே.
 சந்திரா நிதானமானாள்.
இன்னும் இரண்டு நாட்களில் நான் சொல்கிறேன்.
உங்கள் வருடமுடிவுத் தேர்வு எப்போது வருகிறது என்று கேட்டாள்.

இன்னும் இரண்டு நாட்களில் என்றதும்,
சரி நீங்கள் படியுங்கள்.
இரவுக்கான தேங்காய் சாதமும் அப்பளமும்  வைத்திருக்கிறேன்.
 என் அலுவலகப் போன் கால்களை முடித்து வருகிறேன்,
என்று தன் அறையில் புகுந்தாள்.
  தன் மேலதிகாரியான மீனாக்ஷியிடம் தன் நிலைமையை விளக்கி
  இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வாங்கிக்கொண்டாள். எமெர்ஜென்சி
என்றதால் அவளும் சம்மத்தித்தாள்.

இனி என்ன நடக்க வேண்டும் என்பதை யோசித்து முடிவெடுத்து
சுந்தரத்தின் வரவுக்காகக் காத்திருந்தாள்.



8 comments:

கோமதி அரசு said...

சந்திரா என்ன முடிவு எடுத்தார் என்பதை அறிய் அடுத்தபதிவுக்கு காத்து இருக்கிறேன்.
குழந்தைகள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

துணிச்சலான முடிவுகள். காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக...

Geetha Sambasivam said...

என்ன முடிவெடுத்தாலும் அது குழந்தைகள், சந்திராவின் நலனுக்கு உகந்ததாகவே இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
நம் காலப் பெண் இல்லை சந்திரா.
புத்திசாலி.
நல்ல முடிவு எடுப்பாள்.வாழ்க வளமுடன்

வல்லிசிம்ஹன் said...

நிஜம் தான் ஸ்ரீராம்.
Dire situations require straight actions.
அவளும் திடமாக இருப்பாள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கீதா. இந்த நிலைமைக்குத் தயாராக எதிர் கொள்ளும் திறனோடுதான்
குழந்தைகளை வளர்க்க வேண்டும். அடுத்த தலைமுறை இன்னும் பரிமளிக்கும் என்று நம்புகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: சந்திரா அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்? என்று அறிய தொடர்கிறேன் வல்லிம்மா

கீதா: அம்மா இப்போதேனும் துணிச்சலான முடிவு எடுக்கத் துணிந்தாரே. எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. அவர் வேலையிலும் இருக்கிறார் ஏன் முடிவு எடுக்கத் தயங்குகிறார். கணவன் குழந்தைகள் என்று யோசித்திருப்பார் என்று நினைக்கத் தோன்றியது. இப்போது அதீத ஆர்வத்தில் அடுத்து என்ன என்று பார்க்கச்செல்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி அண்ட் கீதா
காலம் நிறைய மாறி விட்டது.

தீர்க்க சிந்தனைக்குப் பிறகே
ஒரு முடிவுக்கு வருகிறார்கள். நன்றி மா.