எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
திருமணம் மாலையான பூவிலங்கு
+++++++++++++++++++++++++++++++++++++++
வேறெந்த குடும்பத்தை எடுப்பானேன்.
எங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் பல தீர்மானங்களை அவர்தான் எடுப்பார்.
வீடு, வாகனம் ,பொருட்செலவு,பள்ளிகள்
என்றூ.
அந்த முடிவுகளில் எனக்கும் உடன் பாடே.
பத்து வருடங்கள் தனிக் குடித்தனம் முடிந்த
பிறகு சென்னைக்கு வந்தோம்.
பெரிய குடும்பம்,.
குழந்தைகளின்,எங்களின் சுதந்திரம் குறைந்தது.
பெரியவர்களுடன் இருப்பதால் ஆதரவும் உண்டு.
அதற்கேற்றார்ப் போல வருவோரும் போவோரும். நமக்கென்று தனி நேரம் கிடைப்பது அரிதாக இருந்தது.
அதனால் வரும் friction எல்லாம் தான்.
லாபம்,நஷ்டம் இரண்டும் உண்டு.
பெரியவர்களை எதிர்த்து வார்த்தை சொல்லாத காலம்.
அதற்குப் பிறகு பெரியவர்கள் மறைந்து ,உலகை நான் பார்க்கும் போது
மிக மாறி இருந்தது.
பெண்களின் எண்ணங்கள் வெவ்வேறு வழியாகப் பயணித்தன.
புதிதாக வந்த மருமகள்கள்,வெளீயூரில் குடித்தனம் வைத்துக்
கொண்டு அவ்வப்போது மாமியார் மாமனாருடன்
வருடத்தில் ஒரு மாதம் வசந்தமாகக் கழித்துவிட்டுப் போனார்கள்.
80 களில் கதை முற்றிலும் மாறியது. நிறையக் காதல் திருமணங்கள்.
அதை விரும்பி ஏற்றுக் கொண்ட பெற்றோர்.
எங்கள் சுற்றத்தாரின் மாப்பிள்ளைகளும் மருமகள்களும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அப்படி வந்தவர்கள் இன்னும் ஒன்றாக இருக்கிறார்கள்.
மாறாகபெற்றோர் பார்த்து செய்துவைத்த பல திருமணங்கள் அப்படி இல்லை..
என் சமனிலைப் பெற்றோர்களின் மகன்,மகள்கள் விவாகரத்து வரை சென்றார்கள்.
மறு மணமும் செய்தார்கள்.
இப்போது இரண்டாயிரம் ஆண்டும் வந்து 18 வருடங்களும் ஆன நிலையில்
நல்ல திருமணங்களும் நடக்கின்றன.
நாங்கள் ஒத்துவாழ்ந்து பார்க்கிறோம். முடிந்தால் திருமணம்
இல்லையெனில் முறிவு.
சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.
பொருளாதார சுதந்திரம், நிறைய மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறது.
இன்னும் எங்களைப் போல வாழ்க்கை நடத்தும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.
இறை நம்பிக்கை, குழந்தைகளிடம் கவனம், பெண்டாட்டி மேல் கரிசனம்
எல்லாமே அழகாக இருக்கிறது பார்க்க.
கணவனையும், அவனைப் பெற்றவர்களையும் கவனித்து வரும் பெண்களுக்கு ,அந்தப் பெற்றோரின் ஆதரவு இருந்துவிட்டால் குடும்பம் சுமை இல்லை. தொடரும்
திருமணம் மாலையான பூவிலங்கு
+++++++++++++++++++++++++++++++++++++++
வேறெந்த குடும்பத்தை எடுப்பானேன்.
எங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் பல தீர்மானங்களை அவர்தான் எடுப்பார்.
வீடு, வாகனம் ,பொருட்செலவு,பள்ளிகள்
என்றூ.
அந்த முடிவுகளில் எனக்கும் உடன் பாடே.
பத்து வருடங்கள் தனிக் குடித்தனம் முடிந்த
பிறகு சென்னைக்கு வந்தோம்.
பெரிய குடும்பம்,.
குழந்தைகளின்,எங்களின் சுதந்திரம் குறைந்தது.
பெரியவர்களுடன் இருப்பதால் ஆதரவும் உண்டு.
அதற்கேற்றார்ப் போல வருவோரும் போவோரும். நமக்கென்று தனி நேரம் கிடைப்பது அரிதாக இருந்தது.
அதனால் வரும் friction எல்லாம் தான்.
லாபம்,நஷ்டம் இரண்டும் உண்டு.
பெரியவர்களை எதிர்த்து வார்த்தை சொல்லாத காலம்.
அதற்குப் பிறகு பெரியவர்கள் மறைந்து ,உலகை நான் பார்க்கும் போது
மிக மாறி இருந்தது.
பெண்களின் எண்ணங்கள் வெவ்வேறு வழியாகப் பயணித்தன.
புதிதாக வந்த மருமகள்கள்,வெளீயூரில் குடித்தனம் வைத்துக்
கொண்டு அவ்வப்போது மாமியார் மாமனாருடன்
வருடத்தில் ஒரு மாதம் வசந்தமாகக் கழித்துவிட்டுப் போனார்கள்.
80 களில் கதை முற்றிலும் மாறியது. நிறையக் காதல் திருமணங்கள்.
அதை விரும்பி ஏற்றுக் கொண்ட பெற்றோர்.
எங்கள் சுற்றத்தாரின் மாப்பிள்ளைகளும் மருமகள்களும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அப்படி வந்தவர்கள் இன்னும் ஒன்றாக இருக்கிறார்கள்.
மாறாகபெற்றோர் பார்த்து செய்துவைத்த பல திருமணங்கள் அப்படி இல்லை..
என் சமனிலைப் பெற்றோர்களின் மகன்,மகள்கள் விவாகரத்து வரை சென்றார்கள்.
மறு மணமும் செய்தார்கள்.
இப்போது இரண்டாயிரம் ஆண்டும் வந்து 18 வருடங்களும் ஆன நிலையில்
நல்ல திருமணங்களும் நடக்கின்றன.
நாங்கள் ஒத்துவாழ்ந்து பார்க்கிறோம். முடிந்தால் திருமணம்
இல்லையெனில் முறிவு.
சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.
பொருளாதார சுதந்திரம், நிறைய மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறது.
இன்னும் எங்களைப் போல வாழ்க்கை நடத்தும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.
இறை நம்பிக்கை, குழந்தைகளிடம் கவனம், பெண்டாட்டி மேல் கரிசனம்
எல்லாமே அழகாக இருக்கிறது பார்க்க.
கணவனையும், அவனைப் பெற்றவர்களையும் கவனித்து வரும் பெண்களுக்கு ,அந்தப் பெற்றோரின் ஆதரவு இருந்துவிட்டால் குடும்பம் சுமை இல்லை. தொடரும்
Brother Murali,his wife and YOUNGER BROTHERS DAUGHTER ON HER MARRIAGE FUNCTION. 2015 |
Mama Ambi and Jaya Manni. 1957 |
Maamanaar and Maamiyaar 1930 |
Us in 1966 Pudukottai |
Ambi,Manni sadhabishekam |
The best Maamiyaar Kamalamma. |
20 comments:
// அதை விரும்பி ஏற்றுக் கொண்ட பெற்றோர்.//
விரும்பியோ, விரும்பாமலோ... தவிர்க்க முடியாமல்!!!!!
இப்போதைய திருமணங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. படங்களை ரசித்தேன்.
நாங்களும் சுமார் பத்தாண்டுகள் தனிக்குடித்தனத்தின் பின்னர் தான் கூட்டுக் குடும்பம்! நீங்கள் சொல்லி இருப்பது உண்மையே. பெண்களின் மனப்போக்கு மிகவும் மாறி விட்டது. ஆனால் ஆண்கள் மாறவில்லையோனு தோணுது! ஏனெனில் அவர்கள் இன்னமும் வீட்டையும் தன்னையும் அக்கறையுடன் கவனிக்கும் பெண்களைத் தான் எதிர்பார்க்கின்றனர்.
மனம் ஒத்த நிலை என்பதானது இக்காலகட்டத்தில் தடம் மாறுவதைப் போலத் தோன்றுகிறது. இப்போது பணம் என்பதே முதன்மையாக பெரும்பாலும் கொள்ளப்படுகிறது.
நல்ல பகிர்வு. உங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடம்.
கூட்டுக் குடும்பமோ, தனிக்குடித்தனமோ இரண்டிலுமே நல்லது கெட்டது உண்டு என்று சொன்னது சிறப்பு.
அந்தக்காலம் முதம் இந்த காலம் வரை அலசி இருக்கிறீர்கள்.
அருமையான பதிவு.
திருமணம் சிலருக்கு பூ விலங்கு , சிலருக்கு கடினமான கனமான விலங்கு.
எல்லோருக்கும் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. நம்மை போன்றவர்கள் அதை காட்சியாக பார்த்துக் கொண்டு இருக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
படங்கள் அழகு.
அழகாக விரிவான அலசல் நன்று.
புகைப்படத்தில் உள்ளவர்களை யாரென்று சொல்லி இருக்கலாம்.
வல்லிம்மா...திருமணம் பற்றி சொல்லியிருப்பது அத்தனையும் சரி...
காதல்திருமணங்களிலும் பிரச்சனைகள் உண்டு பார்த்துச் செய்யப்படும் திருமணங்களிலும் பிரச்சனைகள் உண்டு. நீங்கள் சொல்லியிருப்பது போல் பார்ட்துச் செய்யப்படுபவையும் பிரிதலில் முடிகிறது காதல் எல்லோரையும் அரவணைத்தும் செல்கிறது...எனவே எல்லாமே புரிதலில்தான் இருக்கிறது.
அதே தான் தனிக் குடித்தனமோ கூட்டுக் குடும்பமோ ப்ளஸ் மைனஸ் இரண்டிலும் உண்டு. இதுவும் புரிதலில்தான்...பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அவர்களை நிறையவே யோசிக்க வைக்கிறது...அதே சமயம் தடம் புரளவும் வைக்கிறது....
கீதா
புகைப்ப்டங்கள் ரசிக்க விவைத்தன....வல்லிமா
கில்லர்ஜி புகைப்படத்தின் கீழ் வல்லிம்மா சொல்லிருக்காங்களே யார் என்று...
கீதா
அன்பு கில்லர்ஜி ,
நீங்கள் சொன்ன பிறகு பெயர்களைச் சேர்த்துவிட்டேன்.
நன்றி மா.
அன்பு ஸ்ரீராம்,
காலம் மிக மாறி விட்டது.
அண்மையில் ஒரு பெண் பெற்றோரைக் கேட்ட கேள்வி, மாற்று மதத்தவரைக் கல்யாணம் செய்து கொள்கிறேன். இல்லாவிடில்
என் தோழி இருக்கிறாள். என்று. இது நகைச்சுவையாக இருந்தால்
சிரித்திருக்கலாம். நாட்டு நடப்பு மாறி இருப்பதற்கு
இது ஒரு சாட்சி. யாரையும் காயப்படுத்தும் எண்ணத்தோடு எழுதவில்லை.
மிக உண்மை கீதா. சில ஆண்கள் மாறவில்லை.
பெண்கள் சிந்திக்கும் விதம்
மாறிவிட்டது. ஒரு போட்டி போல, நான் மட்டும் செய்வதையே செய்யணும். நீ உன் இஷ்டப்படி சுதந்திரமாக இருக்கிறாயே என்ற வாக்குவாதங்கள் அதிகம்.
நிறைய ஆண்களும் மனைவி சொல்வதன் அர்த்தம் புரிந்து வீட்டு வேலைகளில்
உதவுகிறார்கள்.
இங்கு எல்லோர் வீட்டிலும் இருவரும் வேலைக்குப் போகிறார்கள்.
கணவன் வாக்குவம் செய்து, கழிவறை சுத்தம் செய்வது, புல் வெட்டுவது என்று அனேகக்
காரியங்களையும் செய்வதைப் பார்க்கிறேன்.
இல்லாவிட்டால் குடும்பம் நடத்துவது மிகக் கடினம் ஆகிவிடும்.
உண்மைதான் திரு ..முனைவர் ஐயா.
பணம் தான் முதன்மையாகிவிட்டது பாதி பேருக்கு. நல்ல வேளையாக சில சதவிகிதம்
நல்ல மந்துடனும் இருக்கிறார்கள்.
அன்பு வெங்கட்,
எத்தனை பெற்றோரால் தனியாக இருக்க முடியும்.
பணம் சேர்த்து வைத்திருந்தால் கூட,
முதிய வயதில் பெற்ற குழந்தைகளின் உதவி தேவைப் படுகிறது.
எத்தனையோ விதமாக எல்லோரும் ஒத்துழைத்தால் தான்
குடும்பம் ஒழுங்காக இருக்கும்.
அன்பு கீதா, இதுவே உண்மை. கூட்டுக் குடும்பம் பாதுகாப்புத் தரும் அதேவேளையில்
வயது முதிர்ந்தவர்களும் சிறியவர்கள் உடன் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
தங்கள் அதிகாரத்தைச் சிறிய குழந்தைகளிடம் காட்டும் பாட்டிகளைப் பார்த்திருக்கிறேன்.
தாத்தாக்களையும் பார்த்திருக்கிறேன்.
மகனையோ மகளையோ அதிரப் பேசாதவர்கள் பேரன் பேத்திகளைச் சொல்வது அதிசயமாக இருக்கும். அதுவே எனக்கு ஒரு பாடமாக அமைந்தது.
நல்ல வார்த்தைகள் சொல்லி நல் வழிப் படுத்துவதே சரியான முறை என்று.
என் தாத்தாவோ பாட்டியோ ஒரு சந்தர்ப்பத்தில் கூட எங்களைக் கடிந்து கொண்டதில்லை.
நான் பார்த்த குடும்பத்தில் ஏன் இப்படி நடந்தது என்று யோசித்ததில்
அவர்களது மகனின் இயலாமையே என்று புரிந்தது.
இது போல் பல வேறு நிகழ்ச்சிகள்,பலவேறு குடும்பங்கள்.
ஓநாய்,ஆடு கதை போலப் பல சேதிகள் காதில் விழுகின்றன.
மாற வேண்டும். நன்றி மா. காலங்கள் மாறட்டும்.
Thank you Geetha for appreciating all the posts. yes the pictures bring back good memories.
அன்பு கோமதி, எத்தனை வருடங்கள் ஓடிவிட்டன.
மனிதர்கள் மாறிவிட்டார்கள். கடவுள் நம் வசம் கருணை காட்டி
நல்ல சந்தர்ப்பங்களையே காணக் கொடுக்க வேண்டும்.
நாம் நம் பெரியவர்களை விட்டுக் கொடுக்கவில்லை.
நம் குழந்தைகளும் அப்படியே இருப்பார்கள் என்றே
நம்புவோம்.
உங்கள் இடுகைகளை அவ்வப்போது படித்துவிடுவேன்.
படங்களின் விளக்கம் அளித்தது நன்று. நான் உண்மையா, 'மாமனார்/மாமியார்' போட்டோவை, உங்கள் கணவர் அவர் அம்மாவோடு என்றுதான் அப்போ கருதினேன். தம்பி பெண்ணின் திருமண போட்டோவை முன்னரே பகிர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்.
அன்பு நெல்லைத் தமிழன் எப்போ முடிகிறதோ அப்போ படியுங்கோ.
ஆமாம் மாமனார்க்கும் இவர்க்கும் அச்சு அசல் ஜாடை.
அவர் இன்னும் உயரமும் பருமனுமாக actor Johny Weismuller மாதிரி இருப்பார்.
குரல் கம்பீரம் இன்னும் அதிகம்.
ஆனால் இவர் முகம் இன்னும் handsome .pl add a smiley here.thank you ma.
1930-லேயே ஸ்டைலாக இருக்கின்றார்களே....?
ஆமாம் எங்கள் குடும்பத்திலியே மிக நாகரீகமான தம்பதிகள் என் மாமியாரும் மாமனாரும் அன்பு தேவ கோட்டைஜி..
Post a Comment