எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
பூசணிக்காய் வடாம், குழம்பில் போடுவது
......................................................................................................
பாட்டியும் அம்மாவும் செய்யும் முறை. அதற்காகத்தான் , மாசி மாச
வடாம் பதிவில் உ. பருப்பு சேர்த்திருந்தேன்.
வெய்யில் கொளுத்தும்போது இந்த வடாம் காயப் போட்டு விடவேண்டும்.
காய நேரம் பிடிக்கும்.
சாம்பல் பூசணிக்காயைப் பார்த்ததும் பாட்டி இந்த வடாம் போட்டுவிடுவார்.
தேவையான பொருட்கள்.
வெள்ளைப் பூசணிச் சாறு தேவையான அளவு.
உ.பருப்பு அரைக்கிலோ
க.பருப்பு கால்கிலோ,
பெருங்காயம் நிறைய,
உப்பு, மிளகாய் அவரவர் இஷ்டம்.
இதிலியே முருங்கை இலை,கறிவேப்பிலை நான் சேர்ப்பேன்.
வெங்காயம் சேர்ப்பாள் என் தோழி.
இந்த ஊறவைத்த பொருட்களை கொற கொறன்னு அரைத்துக் கொண்டு
கெட்டியான பதத்தில் எடுத்துக் கொண்டு
,
பூசணியைத் துருவியும் போடலாம்.
சாறும் விடலாம்.
மாவு தளர்வாக இருக்கக் கூடாது.
காலையில் அரைக்க வேண்டும் . பத்து மணிக்கு மொட்டை மாடி வெய்யிலுக்கு ப்ளாஸ்டிக் விரிப்பில்
குணுக்கு குணுக்காகக் கிள்ளி வைத்துவிட வேண்டும்.
நல்ல வெய்யிலில் இரண்டு நாட்களில் காய்ந்துவிடும்.
சாயந்திரம் வீட்டுக்குள் நிழல் உணர்த்தல்..
மூன்று நாட்கள் ஆனாலும் சரி, ஈரத்தோடு
டப்பாவில் போடக் கூடாது.
பூஞ்சக் காளான் பிடித்துக் கொள்ளும்.
இத்தோடு, வெண்டைக்காய், கொத்தவரங்காய்,,கத்திரிக்காய்
எல்லாம் வற்றலாகக் காய வைப்பது உண்டு.
குழம்பு, அதுவும் மிளகு, பொரித்த குழம்பில் வறுத்துப் போட்டால்
அமிர்தம் தான். பொரிச்சகூட்டு இன்னும் சுவை.

11 comments:
நாங்கள் வடகம் என்று சொல்லுவோம்.
பூசணிக்காய் வடாம் என்று சொல்வதைவிட, இதைக் குழம்பு வடாம் என்றே சொல்வோம்.
வடாம், வடகம் என்று இரு முறையிலும் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.
சாமான்கள் வாங்கி வைச்சிருக்கேன். இனிமேல் தான் போடணும். உடம்பு கொஞ்சம் தகராறு செய்யறது! :)
கில்லர்ஜி வடகம் என்பது சரியான சொல். அவசர வழக்கில் வடாம் ஆகிவிடும்.
கருவடகம், கருடாம் ஆன மாதிரி.
வத்தல் வடாம்னு ரைமிங்கா வந்துவிட்டதுன்னு நினைக்கிறேன் ஸ்ரீராம்.
பார்க்கப் போனால் பூசணிக்காயின் பங்கு குறைவுதான். பாட்டி சொல்லிச் சொல்லி எனக்கும் அதுவே பழக்கமானது மா.
உண்மைதான் முனைவர் ஐயா.
வழக்கத்தில் உள்ள சொற்கள் தான். நாங்கள் வற்றல் என்று சொல்லுவோம்.
ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு செய்யுங்கள் கீதா.
வெய்யில் எங்கே போகப் போகிறது.
நாங்கள் குழம்பு கருவடாம் என்போம். இதைப் போட்டு வற்றல் குழம்பு, மோர் குழம்பு போன்றவை செய்தால் மிக நன்றாக இருக்கும். புடலங்காய் கூட்டிலும் சேர்க்கலாம். எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் மற்றவர்களுக்கு பிடிக்காததால் செய்வதில்லை.
வல்லிம்மா இதை நாம குழம்புவடாம் என்போம் இல்லையோ...
இதைப் பார்த்ததும் என் அம்மா நினைவு வந்துவிட்டது (அஃப்கோர்ஸ் என் அம்மா வயதேதான் உங்களுக்கு!!!!!!!!) என் அம்மாவும் போட்டுவைப்பார். இதில் தனியாக வெங்காயம் சேர்த்தும் போடுவார். நானும் அப்படியே மாமியாருக்குக் கொடுக்க வேண்டி வெங்காயம் சேர்க்காமலும் போடுவேன்...வெங்காயம் போட்டும் செய்வேன்....
ஒரு சிறிய அளவு போட்டுவிட்டேன்...வெங்காயம் இல்லாமல். புளிப்புக்கூட்டிலும் சேர்ப்பதுண்டு...
எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும் எங்கள் வீட்டில்...
கீதா
அட இங்க பாருடா. நிஜமாவா கீதா. உங்க அம்மாவுக்கும் என் வயதா.
அப்போ எனக்கு தோழி கீதா சாம்பசிவம், பொண்ணு கீதா ரங்கன், மாட்டுப்பொண்ணு கீதா
எல்லாரும் வலையில் இருக்கிறார்கள். ஆஹாஆஆ.
ஆமாம் குழம்பு வடாம் தான். அம்மா வெங்காயம் சேர்த்து செய்வதை
குழம்பு வடாம்னும், பூசணி சேர்ப்பதை பூசணிவடாம்னும் நான் சொல்வேன்.
தனியாகப் பொரித்து சாப்பிட்டாலும் கறுக் முறுக்னு நன்றாக இருக்கும்.
Post a Comment