Blog Archive

Wednesday, February 28, 2018

மாசி மாசமும் வடாம் பிழிதலும் 3

Add caption

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
 சீனுவும் பையனும் வரும் சத்தம் கேட்டதும் விரைந்து வந்தார்கள், ஜயம்மாவும் நாத்தனாரும்.
கீது,  நீ கனமானதைத் தூக்காதே என்றபடி,
பொருட்களை  இறக்கினார்கள் சீனுவும், ஜயம்மாவும்.
கணக்கெடுத்துக் கொண்டே வந்த , ஜயம்மா, எலுமிச்சம்பழம் எங்கே
என்றார்.

ஆட்டோவில் எட்டிப் பார்த்தால் அங்கேயும் இல்லை.
ஆட்டோ ட்ரைவர் வேணு, அம்மா, சாமி தேவதி ,தியாகு கிட்ட பேரம் பேசும் போது மூட்டையோடு வச்சிட்டார் போல. இதோ நான் போய் எடுத்து வரேன் என்று பறந்தான்.
 அவனோட என்ன பேரம். நியாயமாத்தானே கொடுப்பான் என்று அலுத்தபடி உள்ளே நுழைந்தாள்.

500 வாங்கினேன் மா. நல்ல ரசமாக இருந்தது. அவன் ஏட்ஹோ சொல்ல நான் ஏதோ
சொல்ல வெய்யிலில் ,நின்னு கோபம் வந்துவிட்டது என்ற கணவனை உட்கார வைத்து
மோரில் உப்பு சேர்த்துக் கொடுத்தாள்.
கிடைத்த வரை போதும்னா. எல்லாரும் நம் சினேகிதர்கள்,பழக்க மானவர்கள்.
இன்னிக்கு குழம்பு வடம் ஊறப் போட்டு ஆரம்பிக்கறேன்.
ஒரு ஒரு கிலோவாத் தேத்திடலாம். நீங்க சித்த நேரம் படுத்துக் கோங்கோ
என்றபடி,
பொருட்களைப் பிறித்து பெரிய பெரிய டப்பாக்களில் கொட்டினாள்.

பத்து கிலோ பொன்னி புழுங்கலரிசி,
இலைவடாத்துக்கு தனியா பச்சரிசி,
உளுந்து 2 கிலோ,
பச்சை மிளகாய்  ஒரு கிலோ,
பெருங்காயம் ரெண்டு பெரிய டப்பா,

ஜவ்வரிசி 5 கிலோ.

போதுமா. போதலைன்னால் திருப்பி வாங்கிக்கலாம் போ என்று தனக்குள்ளயே
முணுமுணுத்தபடி ,
பிள்ளையாருக்கு மஞ்சள் துணியில் முடித்துவைத்து விட்டு
வேலையைத் தொடங்கினார்கள்.
மணி பனிரண்டாகி இருந்தது.
வாசலில் ஸ்ரீவித்யா பள்ளி முடிந்து குழந்தைகள் செல்ல ஆரம்பித்தார்கள்.
 ஆயாவோடு நடந்து செல்லும் குட்டி ஹரியைப் பார்த்ததும் ,அவன் பாட்டி கேட்டிருந்த
கைமுறுக்கும்,தட்டையும் நினைவுக்கு வந்தது.

ஒரு சௌகர்யம். இந்த வேலையை அவர்கள் வீட்டிலியே சென்று செய்துவிடலாம்.இங்கே அடுப்பு
போடவேண்டாம்.
வாசலுக்கு விரைந்து முனிம்மாக் கிழவியிடம், நாளைக்கு உங்க வீட்டு வரேன்னு பெரியம்மா கிட்ட சொல்லு.
தேவையான வெண்ணெய் எல்லாம் இருந்தால் மூன்று மணி நேரம் எனக்குப்
போதும் என்று இரைந்து சொல்லிவிட்டு உள்ளே வந்தாள்.

ஏன் இதை இழுத்துவிட்டுக்கறே. இருக்கிற வேலை போறாதா என்று
கடிந்து கொண்டார் சீனு.
எவ்வளவு நாள் பழக்கம் அண்ணா. சட்டுனு விடமுடியாது.
வருஷா வருஷம் சுமங்கலிப் பிரார்த்தனைக்குப் புடவை, உங்களுக்கு வேஷ்டி எல்லாம் கொடுத்து, தாராளமாக நடத்துகிறவர் அந்த மாமி.
நாமும் கௌரவமாக இருந்துக்கணும் என்ற படி  ஜவ்வரிசியைக் கழுவ ஆரம்பித்தாள்.
முத்துமுத்தா எவ்வளவு பெரிசா இருக்கு என்று சிலாகித்தபடி. எவர்சில்வர்
அடுக்கில் ஊற வைத்தாள்.
அடுத்தது, எல்லோருக்கும் சாப்பாடு.
கீது அழகாக பெரிய பாத்திரத்தில் பிசைந்து வைத்திருந்த வத்தல் குழம்பு சாதமும்,
சீனு வாங்கி வந்திருந்த கீரை வடையும் எல்லார் வயிற்றுலும் கம்மென்று இறங்கவும், வாசல்ல் மாமி என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
வெய்யில்ல வருவேளோடி பொண்ணுகள என்று வரவேற்றார் சீனு.
 ஜயா, இவர்கள் தான் செங்கமலமும், வேதாவும் என்றார்.
பளிச்சென்று இருந்த அந்தக் குழந்தைகளைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது
ஜயாம்மாவுக்கு.  தொடரும்.
Add caption

8 comments:

ஸ்ரீராம். said...

​// அவனோட என்ன பேரம். நியாயமாத்தானே கொடுப்பான் எல்லாரும் நம் சினேகிதர்கள்,பழக்க மானவர்கள். //

அதானே... மனசில் வைத்துக்கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், மயிலை மாட வீதியில்
அனேகமாக நல்ல விலைக்கு வாங்கலாம். அதுவும் தியாகு கடை
நியாயமாகவே கிடைக்கும். இப்போது எப்படியோ தெரியவில்லை.

KILLERGEE Devakottai said...

எவ்வளவு பழகினாலும் வியாபாரிதான்...

கோமதி அரசு said...

மனதை வருடும் எழுத்து.

தொடர்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வடாம் படங்கள் தின்னும் ஆசையை உண்டாக்கியது.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் முனைவர் ஐயா,
உப்பும் போட்டுப் பொரித்தும் கொடுத்தால்
எல்லோருக்கும் ஆசைதான். நன்றி ஐயா.

வல்லிசிம்ஹன் said...

நலமா கோமதி,
வாழ்க்கை மிருதுவாக இருந்தால் வார்த்தைகளும்
அவ்வாறே அமைகிறது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கில்லர் ஜி.
இருந்தாலும் நல்ல வியாபாரி. பல வருடப் பழக்கம்.