எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
இனிய நன்னாளுக்கான வாழ்த்துக்கள்
நாமோ நிறைய எழுதுவதில்லை. இந்த இரு மாதங்களில் தான்
எண்ணங்களை பகிர்ந்து வந்தேன்
நேற்று கூட 92 ஆவது ராங்கில் என் பதிவு இருந்தது.
இதென்ன பள்ளிக்கூடமே. இல்லை போட்டி போடத்தான் வசந்தாவோ ,மீனாவோ இருக்கிறார்களா.
அதனால் அதிகம் யோசிப்பதில்லை . இன்னிக்குப் பார்த்தால் 29 ஆவது
ராங்க் என்று காட்டுகிறது. ஹ்ம்ம். நாமளும்
கொஞ்சம் நல்ல வேலை செய்திருக்கோமோ
எதற்கும் நாளைக்கும் இதே நம்பர் இருக்கிறதா என்று பார்க்கலாம் அப்புறம் பதிவிடலாம் என்று நினைத்தேன்.
அப்படியெல்லாம் சொன்னதைக் கேட்பது என்பது நம் அகராதியில் எழுதப் படவில்லையே,
அதனால் இன்றே பதிந்தேன். அடுத்த நாள் மனம்,எண்
எல்லாம் மாற வாய்ப்பு உண்டு.😀😀😀😀😀😀😀 |
8 comments:
வணக்கம் அம்மா 92-29 ஆனதில் வியப்பில்லை வாழ்த்துகள்
சகோ கீதா சாம்பசிவம் அவர்கள் 2 வது இடத்தை பிடித்து உச்சி (பிள்ளையார்)
தொட்டு விட்டார்கள் அவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துகள் அம்மா.. இரண்டாவது இடத்தில் இருப்பது கீதா அக்கா. நாங்கள் இப்போது 76 வது இடத்தில!
கோலம் அழகாக இருக்கிறதே!!
வல்லிம்மா ராங்க்? ஓ தமிழ்மண ரேங்கா? வாழ்த்துகள் வல்லிம்மா...
சந்தோஷத்தை எப்போதுவேண்டுமானாலும் பகிரலாமே அம்மா...பரவால்ல நாளைக்கு என்னவேணா இருந்துட்டுப் போகட்டும்...இன்றைய இந்த நிமிடத்தைப் பகிரலாமே!!!
துளசி, கீதா
அன்பு கில்லர்ஜி, இது எனக்கு மிக அதிசயமாகத்தான் இருக்கிறது.
அதுவும் கீதா மா. இரண்டாவது இடம் என்றால் வெகு சந்தோஷமாக
இருக்கிறது.இப்போது பார்த்தால் 16 ஆவது இடமாம்.
ஏதோ ஹாரி பாட்டர் மாஜிக் மாதிரி.நன்றீ மா
அன்பு ஸ்ரீராம், இதென்ன புதுக்கதை. என்ன நடக்கிறது.
எப்படி நடந்தது. என்ன காரணம்.
கீதா இரண்டாவது இடம் சந்தோஷம்.ஆஹா. அப்போ முதலிடம் யார்.
கண்கட்டு வித்தையா இருக்கே.
அன்பு துளசி, கீதா,
சிரிப்பா இல்லை இந்தக் கதை.
ஆமாம் ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைத்தாச்சு.
அனுபவி ராஜா அனுபவி.ஹாஹா.
என்னாது?????????????????? நான் இரண்டாம் இடமா? எங்கே? எப்போ? எப்படி? எதுக்கு? தமிழ்மணம்? நான் அதிலே இல்லவே இல்லையே! எப்படி ஓட்டுப் போடறதுனு கூடத் தெரியாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!என்னமோ ஜதி நடந்திருக்கு போல! அதிரடியைத் தான் கேட்கோணும்! :))))))
கீதா மா, நானும் உங்க பதிவு எல்லாத்திலயும் பார்த்தென்.
கண்ணில படவில்லை.
என்ன மாயமோ தெரியவில்லை. எல்லோரும் சொல்கிறார்கள் நிஜமாத்தான் இருக்கணும். வாழ்த்துகள். மனசு நிறைய சந்தோஷம் பா.
Post a Comment