எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1996க்குப் பிறகு சீனிம்மாப் பாட்டியின் உடல் நலம் அவ்வளவாகச் சரியில்லை.
மாப்பிள்ளை பகவான் திருவடி அடைந்தது வெகு வாகப் பாதித்தது.
என்னைப் பொறுத்த வரை உலக அழகிப் பட்டம் அவருக்குத்தான் கொடுப்பேன்.
அடுத்தாற்போல் என் அம்மாவும் ,மன்னியும்.
1998இல் எங்கள் பேரன் பிறந்த பொழுது சென்னை வந்து, உடனே
அம்பி மாமாவுடன் இருந்த பாட்டியைப் பார்க்கத்தான் போனோம்.
ஜெயா மன்னி, குழந்தையை மடியில்
வைத்துக் கொஞ்சியது இன்னும் மனக்கண்ணில் இருக்கிறது,.
வாழ்க்கையில் எத்தனை சவால்களைச் சந்தித்திருக்கிறார்.
அசரவில்லையே. அம்பிமாமாவைத் தன் அரவணைப்பினாலேயே
துணை நின்று,வாழ்க்கையை நடத்தியவர்.
ஒரு சமயம் நினைவுக்கு வருகிறது.
தி.நகர் தபால் அலுவலகத்தில் தன் பென்ஷனைப் பெற்றுக் கொண்டு, பெருங்களத்தூர்
திரும்பிய,மாமாவின் மொத்தப் பணமும்
பறி போனது.
மாமாவுக்கு இருந்த அசதி,அதிர்ச்சி கூட மன்னி, பாதித்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.
இதுக்கு மேல ஒண்ணும் நடக்கலை.
அதுதான் பெரிய விஷயம்.
சம்சாரம் தானே நடக்கும் என்றார்.
இந்த உறுதுணை தந்த ஆறுதலில் அம்பிமாமாவின் குடும்பம் நடந்தது.
அம்பி மாமா ஒரு சொந்தத்தையும் விட்டுவிட்டார் என்ற சொல்லே கிடையாது.
அவருடன் நான் பேசும்போது எல்லோரையும் பற்றி விசாரிப்பேன்.
தில்லியில் அவர் செய்த பத்ரி பயணங்கள் எண்ணிலடங்காதவை.
என் அம்மா அப்பா தில்லி சென்றபோது, அவர்களையும்
அழைத்துக் கொண்டு பயணித்ததை அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார்.
மறக்க முடியாத பயணம் அது அப்பாவுக்கும்.
அம்பி மாதிரி யார் பத்ரி விஷால் சொல்ல முடியும்
என்று வியப்பார்.

6 comments:
சம்சாரம் எனும் மின்சாரம் ஷாக்கும் அடிக்கும். மன்னி மாதிரி ஒளியும் கொடுக்கும்.
பெருங்களத்தூரும் எங்க ஊருதான். தாம்பரம் தாண்டியது. அவர் அங்கயா இருந்தார்?
ஆமாம் ஸ்ரீராம். ஒளி கொடுக்கவே வந்த உத்தமமான
மனுஷி.
மனமெல்லாம் மன்னின்னு சொன்னாலே இனிக்கும்.
அன்பு நெல்லைத்தமிழன்,
அவர்கள் பெருங்களத்தூரில் சில காலமே இருந்தார்கள். பிறகு குரோம்பேட்டை ஸ்டேஷன் அருகில் குடி வந்துவிட்டார்கள். 1999 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.
உங்கள் மன்னியும்(மாமி) வியக்க வைக்கிறார்...உங்களைச் சுற்றி அன்பு நிறைந்த மனிதர்கள்...நம் உள்ளம் போல் வாழ்க்கை என்பது போல் உங்கள் அன்பும் சுற்றத்தாரின் அன்பும் கூடி அங்கு அன்பு ஒன்றே நிறைந்திருந்தது என்பதை அறிய முடிகிறது...
கீதா
அன்பு கீதா.
இது போல ஜோடி அமைவது மிக அபூர்வம்.
என் தாயார் தந்தை போல.
என் அம்மாவுக்கு வெளிப்பட அன்பு செலுத்துவது அவ்வளவாக முடியாது.
மன்னி கண்களாலும் கைகளாலும்
பேசியும்,அணைத்தும்
நலம் பெறச் செய்வார்.நான் கொடுத்துவைத்தவள். தொடர்ந்து அலுக்காமல்
கருத்து சொல்வதற்கு மிக நன்றி அம்மா.
Post a Comment