உயிரும் உடலும் கொடுத்தது ஒரு அம்மா.
அதன் பின்
பாதுகாத்தது இந்த அம்மாதான்.
இவரை விடப் பக்தியான,
உறுதியான,உழைப்பு மிகுந்த
பெண்மணி இதுவரை என் கண்ணில் படவில்லை.
அம்மாவாகவே இருந்து மறைந்த கமலம்மாவிற்கு
இந்த வருடம் தொண்ணூறு வயது ஆகியிருக்கும்.
இந்தக் கார்த்திகை நன்னாளில்
பிறந்த வீட்டை நினைப்பதைப் போலவே
புகுந்தவீட்டாரையும் நினைக்கவேண்டும்
என்று சொல்லுவார்.
மறக்கவில்லை. நினைக்கிறேன்.
நமஸ்காரங்கள் அம்மா.
6 comments:
புகுந்த வீட்டிலும் உங்களுக்கு ஒரு அம்மா!
அவர்களை இந்தக் குளிரிலும் மறக்காமல் நினைத்த உங்களை எப்படி வாழ்த்துவது என்று சொல்லுங்கள் வல்லியம்மா!
கமலாம்மாவிற்கு அடியேன் வணக்கங்கள்!
குளிர் வேளியிலேதானே ரவி.
மனசு எங்கே போனாலும்
எதையும்மறப்பது இல்லை..
அதுவும் பண்டிகைக்காலங்களில்
நம்முடன் இருந்தவர்களை நாம் மறக்க முடியுமா.
நன்றி. கார்த்திகைத் திருநாள்
நல் வாழ்த்துகள்.
வல்லிசிம்ஹன்
புகுந்த வீடு என்ன பக்கத்து வீடு என்ன?பழகும் விதம் மக்களை வித்தியாசமாக காட்டுகிறது.அன்பாக பேசி பழகுபவர்கள் என்றால் எல்லோரும்க்கும் பிடிக்கும் தான்.அவர்கள் உங்கள் புகுந்த வீட்டில் கிடைத்தது "உங்கள் அதிஷ்டம்"
சிறியவனின் நமஸ்காரங்கள் உங்கள் அம்மாவுக்கு
குமார், ஆமாம் வாய் வார்த்தை நல்லதாக இருந்தால் வையத்தையே வெல்லலாம்னு மாமியார் சொல்லுவாங்க.
ரொம்பப் புத்திசாலி.
அடக்கம்.அவங்க ஆசீர்வாதங்கள்
எல்லோருக்கும் எப்பவும் கிடைக்கும்.
படத்தைப் பார்க்கும் போதே விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது அம்மா. அதிலும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது மானசீகமான நமஸ்காரங்கள் செய்து கொண்டேன்.
கட்டாயம் உங்களை அவருக்குப் பிடித்து இருக்கும்.
சுந்தரகாண்டம் சமஸ்கிருதத்தில்
மனப்பாடமாகச் சொல்லுவார்.
நேரம் இல்லாததால் நான் அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள முடியாமல் போச்சு.
நன்றி குமரன்
Post a Comment