Friday, January 12, 2018

மார்கழிப் பாவை 28 ஆம் நாள் பாசுரம் கறவைகள் பின் சென்று

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
   அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்துன் தன்னைப்
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது,
  அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.//
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே  சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 27 ஆம் நாள் சர்க்கரைப் பொங்கல் செய்து கண்ணனுக்கு அமுது
படைத்துக் களித்த கையோடு,
அடுத்த நாள் கண்ணனோடு கானகம் செல்ல
ஆவல் தெரிவிக்கிறாள்.
கண்ணனிடம் தன் பிரார்த்தனை செய்கிறாள்.
கண்ணா, நீயும் ஆய்க்குலத்தில் பிறந்தவன்.
நாங்களும் ஆய்க்குலத்துப் பெண்கள்,இடம் வலம் தெரியாதவர்கள்.
ஆனால் உன்னை எங்களுடன் இருக்கச் செய்த பாக்கியம்
பெற்றவர்கள். 
குறையே இல்லாத கோவிந்தா, உன்னால் நாங்கள் நிறைவு 
பெறுகிறோம்.
அறியாமையால் உன்னை அழைக்கத்தெரியாமல் ஏதோ 
சிறு பேர் சொல்லிக் கூப்பிடுகிறோம்.
 நீதான் எங்களுக்குப் பறையான பரிசைத்தரவேண்டும். 
மோக்ஷ சாம்ராஜ்யத்தைக் கொடுக்கவேண்டும்.

இன்றைய அமுது,கண்ணனுக்கு உகந்த தயிரன்னம்.
அதுவும் எப்படி செய்ய வேண்டுமாம் தெரியுமா.
பாலில் சமைத்த அன்னத்தில் துளித் தயிரால் 
உறைகுத்தி, மூன்று மணி நேரத்தில் 
அது தயிரன்னமாக ஆகிவிடுமாம்.
அதில் பழங்களை நறுக்கிச் சேர்த்து, பாதாம்,முந்திரிபருப்பு ,திராட்சை
 சேர்க்க வேண்டுமாம். எவ்வளவு சாதம் இருக்கிறதோ
அவ்வளவு வெண்ணெய் சேர்த்துப் பிசைய வேண்டுமாம்.
 எல்லோரூம்  ததியன்னம் படைத்துப் பெருமை பெறுவோம்.
..

6 comments:

ஸ்ரீராம். said...

//அறியாமையால் உன்னை அழைக்கத்தெரியாமல் ஏதோ
சிறு பேர் சொல்லிக் கூப்பிடுகிறோம்.
நீதான் எங்களுக்குப் பறையான பரிசைத்தரவேண்டும். ​//​

தாங்கள் அறியாமல் செய்யும் பிழையைப் பொறுக்கக் கண்ணனை வேண்டும் கோதை, தன்னைத் தவறாய் பேசியவர்களையும் கட்டாயம் மனதில் வைக்க மாட்டார்!

ஸ்ரீராம். said...

கோலம் அழகு. தயிரன்னம் பற்றிய வர்ணனை காலை ஆறேகால் மணிதான் ஆகிறது எகிற நிலையையும் மீறி சுவைக்க ஆவல் வருகிறது!

Anuradha Premkumar said...

ஆஹா..ஆஹா...அருமை...அம்மா..

ததியன்ன செய்யும் முறை அழகு...

இன்றைக்கு எழுத்தும் பெரிதாக..இடைவெளி அதிகமாக...படிக்க மிக ஏதுவாக இருந்தது அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அவள் பெயரே தயா தேவி. பூமிப் பிராட்டியின் அம்சம். அவள் குழந்தை ஏதோ
சொல்லிவிட்டது. மன்னிப்போம் என்றே தள்ளிவிடுவாள்.
ஹிரண்ய குடும்பத்திலிருந்து,ராவணன்,கம்சன் வரை அவர்
மன்னித்தவர்கள் எத்தனை நபர்கள். அஸுரர்கள் இருப்பார்கள்.
அவர்களிடமிருந்து நாம் விலகி விடலாம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். கொலஸ்ட்ரால் என்ன ஆகும்.ஆஹா.
ததியன்னம்னால் அதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா, எவ்வளவு இனிமையா இருக்கு இந்த வைபவம்.
அதுவும் கல்யாணபுரம் ஆராவமுதன் ஐய்யாவின் பிரவசனம் ஒரு தடவை கேட்டு
அப்படியே செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டென். பசங்க ஒத்துக் கொள்ளவில்லை.
நன்றி ராஜா.