|
Add caption |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
https://youtu.be/ibrOG5KG8_0
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா/உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினில் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
|
பாசுரம் 26 இல் மோக்ஷத்தை நீ எங்களுக்குத் தரப் போகிறாய்
என்றூ வேண்டிக்கொண்டவள்,
27 ஆம் பாசுரத்தில் கண்ணன் அருகாமையில் அனுபவிக்கிறேன் என்று சொல்லுகிறாள்.
அவள் கேட்பதெல்லாம் கண்ணன் தருவதோடு மட்டுமல்லாமல்
அவனும் நப்பின்னையும் , இவர்களுக்கு நீராட்டம் செய்வித்து, அவர்கள்
உடுத்திகளைந்த பீதக ஆடைகளை
இவர்களுக்கு உடுத்திவிட்டு, காதுக்குத் தோடும் செவிப்பூவும், கால்களுக்குப்
பாடகமும்,கைகளுக்கு வளயல்களும் அணிவித்து விடவேண்டுமாம்.
அதன் பின் அவனுடன் அனுபவிக்கும் ஆனந்தமான
பாற் சோறு.
அதில் கலந்த நெய் உருகிக் கைகளில் வாங்கும்போது
முழங்கை வரை வழிகிறதாம்.
இந்த அனுபவத்தை அவனுடன் கூடாதோர் அனுபவிக்க
முடியாது.
இவர்கள் அவனுடன் கூடி இருந்து குளிரக் குளிர அனுபவிக்கப் போகிறார்கள்.
பாவை இரண்டாம் பாசுரத்தில் எல்லாவற்றையும் விலக்கியவள்,
27 ஆம் பாசுரத்தில் கண்ணன் தரிசனம் பெற்றதும் அத்தனையையும் அனுபவிக்க
அவன் கூட இருக்கும்போது மகிழ்கிறாள்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
|
3 comments:
அழகிய அண்டாள் படம்..
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்..
அதுவரையிலும் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும் தினத் திருப்பாவை பாராயணம், சிறுவர்களான எங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் தினம் 'கூடாரவல்லி'. அன்றைக்குத்தான் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம். 'கறவை'களுக்கு தயிர்சாதம்தானே.
முழங்கை வரை வழியவில்லை ஆயினும் உள்ளங்கையில் ஒட்டிக் கொள்ளும் அளவு நெய் சேர்த்து ஆண்டாளை நினைத்துக் கொண்டு நாங்கள் பொங்கல் சாப்டாச்!
:)))
Post a Comment