Thursday, January 11, 2018

அம்பி,மன்னி எங்கள் குடும்பம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   அம்பி,மன்னி எங்கள் குடும்பம் 5
+++++++++++++++++++++++++++++++++++++++++++
1965 இல் என் சென்னை படிப்பு பியுசியுடன் நின்றது.
மதுரைக்கு வந்துவிட்டேன். என் நாட்கள் கடிதங்கள் எழுதுவதிலும், படிக்க
விட்டுப்போன புத்தகங்கள்  படிப்பதிலும் கழிந்தன.
என் தோழமை குழுவில் அம்பி மாமாவும் ஒருவர்.
தபால் அலுவலகத்தோடு வீடு இருந்ததால்
இன்லாண்ட் கடிதம் வாங்குவது எளிதாக இருந்தது. தில்லிக்குப் பறக்கும்
கடிதங்கள் என் விருப்பங்கள்,படிப்பு இவற்றைச் சுற்றி இருக்கும். மன்னியும் அம்பியும்
என்னை உற்சாகப் படுத்தி  இன்னும் எழுதத் தூண்டுவார்கள்.

அவர்தான் என்னை மும்பையிலிருந்த ஒரு கல்விக்கூடத்துக்கு

எழுதிபோட்டு ஜர்னலிசம் படிக்கும்படி  அறிவுறுத்தினார்.
அதற்குப் பின்னர் நடந்தது எல்லாம் கடவுள் எண்ணம்.
திருமணத்துக்கு வந்த அம்பி மன்னிக்கு 6 வயது மகனும்,
மூன்று வயது பெண்குழந்தையும் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டனர்.
சின்னப் பெண் இந்து அந்த நாளைய செலுலாய்ட் பொம்மை
போல இருப்பாள். மழலையில் குப் சிப்,குப் சிப் என்று ரயில்
போகும் சப்தத்தை, இரண்டு குட்டிக் கைகளைக் குவித்து வைத்துக் கொண்டு,
இளம் ரோஜா போல வாயைக் குவித்து சொல்வது இன்னும் மனதில்
 இருக்கிறது. திருமண ஆல்பத்தில் கூட அந்தப் படம் இருக்கும்.

மன்னிதான் என் திருமணத்தோழி.
சிங்கத்துடன் பேச அவருக்கு மட்டும் சலுகை இருந்தது.
எங்களகத்து  Fairlady ,inimEl unga Fairlady என்று அவரிடம் சொன்னார்.
சிங்கமும் சிரித்துக் கொண்டது. உங்கள் வீட்டுக்கு நீ ரொம்பச் செல்லமோ
 அன்று மாலை வரவேற்பின் போது கேட்டார். அதிலென்ன சந்தேகம் என்று
பெருமைப் பட்டுக் கொண்டேன்.
அன்று என்னை என் வருங்கால வீட்டில் கொண்டு விடும்போது,
மன்னி,அம்மா,அம்பி எல்லோர் கண்களிலும் நீர்.
  1968இல் சேலத்தில் எங்கள் இரண்டாவது பெண் பிறக்கும்போது அம்மா
உதவிக்கு வந்திருந்தார்.
கோவைக்குத்தன் சித்தி பெண்,மாப்பிள்ளையைப் பார்த்த கையோடு ,மாமா
 திடீரென்று சேலத்துக்கும் வந்தார்.
வெறும் கைகளொடு வர அவருக்குத் தெரியாது.
அருமையான கடாவ் வாயில் புடவை, ஏகப்பட்ட பழங்கள் பூ எல்லாம் கொண்டு வந்து என் மாமியாரை
அசத்திவிட்டார். ஒரே ஒரு வேளை இருந்து, சாப்பிட்டு விட்டு அக்காவுடன் வேண்டும் அளவு பேசிவிட்டுக் கிளம்பி விட்டார். தன் மூன்றாவது மகள் பற்றி ஒரே பெருமை.
 அதே போல எனக்கு மூன்றாவது மகன் பிறக்கும்போது காரைக்குடிக்கும் வந்தார்.
அவன் பிறந்த 7,8 நாட்களில் மாமா,மன்னிக்கு நான்காவதாகப்  பெண் பிறந்தது.
எங்கள் அனைவருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம்.
இந்த இரண்டு பெண்குழந்தைகளும் இப்போது என் உயிர் நாடிகள் போல அன்பு வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
கனிவுள்ளம் படைத்த பெற்றோருக்குப் பிறந்தவர்கள் அல்லவா.
இருவரின் வருத்தத்தைத் துடைப்பது முடியாத காரியமாக இருக்கிறது.
மறக்க முடியாத அங்கமாக அம்பி மாமா,மாறிய நேரம் ,என் தம்பி திடீரென
இறைவனடி சேர்ந்த போது.   அதைப்பிறகு பார்க்கலாம்.

5 comments:

ஸ்ரீராம். said...

காலம் தன்போக்கில் நல்லவற்றையும், அல்லனவற்றையும் காட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது நினைவுகள் மட்டுமே நமக்கு மிச்சமாகின்றன. நல்ல மனிதர்கள் பற்றி தெரிந்து கொள்கிறோம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனம் வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஸ்ரீராம். இந்த நான்கு சகோதரர்களின்
ஒற்றுமையைச் சொல்லி முடியாது. கருத்து வேறுபாடுகள் வந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

Thank you Venkat.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா விட்டுப் போய்விட்டது உங்கள் அம்பிமாமா நினைவுகள்..இதோ தொடர்கிறோம்...

வல்லிம்மா உங்களுக்கு நினைவுகள் அப்படியே மனதில் இருப்பது அதுவும் சிறிய விஷயங்கள் கூட இருப்பது உங்களின் மனதைக் காட்டுகிறது. நல்ல மனிதர்கள்...நல்லதும் சரி கெட்டதும் சரி ஒன்றொன்று மாறி மாறித்தானெ வரும்... அருமை வல்லிம்மா தொடர்கிறோம்...

கீதா