Blog Archive

Thursday, December 07, 2017

கேசவன் ராதையின் குடும்பம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


https://youtu.be/e3RiMIAZ1vY

1960 களில் மும்பையில் அழகான குடித்தனமாக ஆரம்பித்தது
கேசவன் ராதையின் குடும்பம்.
28 வயது கேசவன் 20 வயது ராதையைப் பெண் பார்த்து
மனம் ஒப்பி சரி சொன்னதும் திருமணம் நடைபெற்றது
அவர்களது மாம்பலம் பங்களாவில்.
மூன்று நாள் கல்யாணம். அப்போது ஒரு நாள் கச்சேரிக்கு எம்.எல்.வசந்தகுமாரி.
மறு நாள் நாட்டியக் கச்சேரி ராதா வசந்தி பிரபல நாட்டியக் கலைஞர்கள்.
மூன்றாம் நாள்  அனந்தராம தீக்ஷிதரின் சுந்தர காண்டம் பிரவசனம்.
திருமண ஜோடியைப் பார்த்து வியக்காதவர்களே  இல்லை.
அவ்வளவு பொருத்தம்.
பெயருக்கேற்ற மாதிரி கேசவன் களையான முகம் . ஆண்மையோடு கலந்த கம்பீரம்.
மா நிறம். எப்போதும் சிரித்த முகம்.ராதை பால்வண்ணம். .படித்த களை, நாட்டியம்
கற்றுக்கொண்டு மெருகேறிய உடல் வாகு என்று அழகாக இருப்பாள்.
கேசவனுக்கு மும்பையில்  ஆங்கிலேயர்கள் கம்பெனி ஒன்றில்
சேல்ஸ் மானேஜர் வேலை. தினம் தன்னுடைய ஃபியட் வண்டியில் சர்ச்கேட்
போய்வருவான். காலை எட்டு மணி மாலை 5 மணி அவனுடைய வேலை நேரம்.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் கேசவனின்  அம்மா கோதை மணமக்களுடன்
மும்பை வந்தாள்.
   இவர்களை மாடுங்காவில்
குடி வைத்துவிட்டு,கோவில்,கடை கண்ணி எல்லாம் சுற்றி
ராதைக்குத் தன வழியில், சில உறவினர்களையும் அடையாளம்,அறிமுகம்
செய்து வைத்தார்.
ரத்தன்BAAG  என்ற பெயருக்கேற்ற அழகான் மூன்றடுக்கு மாடிகள்
கொண்ட கட்டிடத்தில் பெரிய விசாலமான அபார்ட்மெண்ட்.
நான்கு  பெரிய பெரிய அறைகள். காற்றோட்டமான பால்கனி, சமையலறை ஒரே ஒரு வேளை,
உதவிக்கு வரும் தாயி என்று அமைப்பாக ஆரம்பமானது வாழ்க்கை.



கேசவனுடைய  இரட்டையான கோவிந்தனுக்கு  வெள்ளைக்காரனைப் போல
ஒரு வண்ணம். சரியான அரட்டை மன்னன்.
அவன் சென்னையில் அப்பாவுடன் தங்கி
அவருடைய புத்தகக் கம்பெனியில்  , விளம்பரங்கள்,விற்பனை,
ஆசிரியர்களைச் சந்திப்பது போன்ற சுற்று வேலைகளைக் கவனித்துக் கொண்டான்..
அவனுக்கும் திருமணத்திற்காகப் பெண் தேடும் படலம் தொடங்க வேண்டும்.

ஒரு மாதம் இருந்த கோதை ,,
இருவரின் ஒற்றுமையும் குடும்பம் நடத்தும் பாங்கும் கண்டு
மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினாள். புது வருடம் பிறந்து தைமாத ஆரம்பத்தில்
கோவிந்தனுக்கு ஜாதகம் எடுத்துப் பெண் பார்க்கும் வேலை
ஆரம்பிக்க வேண்டும் ,. இப்போது புரட்டாசி ஆரம்பம்.
வீட்டைப் புதுப்பிக்கும் வேலை நடக்கிறது.
ஐந்து மாத இடைவெளியில் உறவுகளில்  சொல்லி வைத்து
நல்லதொரு பெண் தேட வேண்டியது.
 கோவில், நவராத்திரி சமயம் என்று கண்ணில் படும்
பெண்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து,
தையில் ஆரம்பித்தால் சித்திரையில்  திருமணம்
நடத்தலாம் என்று  சிந்தனைகளோடு சென்னை வீட்டிற்கு
வந்து சேர்ந்தாள் கோதை.........தொடரும்.

16 comments:

Geetha Sambasivam said...

காத்திருக்கேன். விறுவிறு!

ஸ்ரீராம். said...

இப்போதெல்லாம் வயது வித்தியாசம் இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் இருந்தால் பெற்றோரும் சரி, ஜோடிகளும் சரி ஒப்புக்கொள்வதில்லை.

தொடர்கிறேன் அம்மா (கோவிந்தன் வில்லனாக இருக்கக் கூடாதே என்கிற பிரார்த்தனையுடன்)

வல்லிசிம்ஹன் said...

குழந்தைகள் பிறக்கட்டும். இன்னும் சுருக்கப் போகும் கீதா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். நாங்களும் அப்படித்தான்.
கதை வேறு விதம். பயம் வேண்டாம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தொடக்கம். மேலே நடக்கப் போகிறதோ என்ற பதைபதைப்புடன்.....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அடுத்து...? ஆவலோடு காத்திருக்கிறேன்.

பூ விழி said...

படித்தேன் ஜோடி சேர்ந்தாச்சு அடுத்து

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
வாழ்க்கையின் உண்மை சில நேரம் இப்படி.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி,
ஆரம்பம் அழகு. போகப் போகப் பார்க்கலாம்.
எல்லாம் நன்மைக்கே.

வல்லிசிம்ஹன் said...

இன்று முடிந்தால் எழுதிவிடுகிறேன் ஐயா. வணக்கம் திரு .ஜம்புலிங்கம் சார். நன்றி.

Angel said...

ஆரம்பமே அழகும் இனிமையும் கலந்து விறுவிறுப்பா இருக்கு.. சம்பவங்கள் காட்ச்சிகளாய் கண்ணில் தோன்றின பொருத்தமான லதா மங்கேஸ்கரின் பாட்டும் சூப்பர்ப்//தொடர்கிறேன் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
அருமையான வார்த்தைகளுக்கு நன்றி.

எத்தனையோ நடக்கிறது. ஒருத்தருக்குக் குடும்பத்தில் அக்கறை போய்விட்டால் இருவருக்கும்
நிம்மதி இல்லை. கடவுள்
எல்லோரையும் நலமாக வைக்கட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

அட! ஆரம்பமே அசத்தல்...என்னவோ நடக்க இருக்கிறது என்று அனுமானிக்கத் தோன்றுகிறது இருந்தாலும் வல்லிம்மா எனும் ஆசிரியரின் எழுத்தில் என்ன வரப் போகிறது என்று காத்திருத்தல்...தொடர்கிறது..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சொல்ல மறந்துட்டேனே....முகப்புப் படம் ரொம்ப அழகா இருக்கு வல்லிம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி கீதா மா.
வெகு நாட்களாக என் மனதில் தைத்த முள் இது.
சம்பந்தப் பட்டவர்கள் அவர்களது குடும்பம்
இப்போது தொடர்பில் இல்லை. நாயகனும் நாயகியும்
மறைந்தார்கள். அதனால் எழுதத் துணிந்தேன்
தொடர்ந்து நல்ல எண்ணங்களைச் சொல்லுங்கள். என் எழுத்துக்கு
அது உரம் அளிக்கும். வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

Yes Geethaa, . taken in London. Thames river. taamS enbaarkaL. Thanks kaNNA