குடும்பம் இனிதாகச் சென்றது. மூன்று வருடங்களில் ஆண் ஒன்று பெண் ஒன்றாக குழந்தைகள் பிறந்தன.
சென்னையில் அம்மா அப்பாவுடன் தங்கி பிரசவம் பார்த்துக் கொண்ட ராதா திரும்பி வரும்போதுத் துணைக்கு ஒரு பெண்ணையும் அழைத்து வந்தாள் .
கேசவன் உடன் பிறப்பு கோவிந்தனுக்கும்
நல்ல குடும்பத்தில் பெண் பார்த்து கோதை அருமையாகத்
திருமணம் செய்து வைத்தாள் .
கோவிந்தன் மனைவி மாலா.
சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவள்.
பாட்டு, நாட்டியம் ஒன்றும் தெரியாது.
முதலில் கோவிந்தனுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஆனால் அவளுடைய அடக்கமும் ,அம்மாவிடம் அவள் காட்டிய மரியாதையும்
அவன் மனதை முழுவதும் மாற்றி விட்டது.
வாரக்கடைசி சுற்றலுக்கு எல்லாம் ஈடு கொடுத்து
வீட்டு நிர்வாகத்திலும் மாமியாருக்கு உதவியாக இருந்தாள் .
இருவரும் மும்பைக்கும் ஒரு வாரம் போய் இருந்து விட்டு வந்தார்கள் .
இரண்டு குழந்தைகளோடு ராதைக்கு நேரம் சரியாக இருந்தது.
துணையாக வந்த சரஸ்வதி ,குழந்தைகளை பார்த்துக் கொள்ள நால்வரும் மும்பையில் எல்லா இடங்களையும்
பார்த்து மகிழ்ந்தார்கள்.
மச்சினன் ஓரப்படி சுதந்திரமாக வலம் வருவது ராதைக்கு கொஞ்சம் மனத்தாங்கல் தான்.
சிறு சிறு தாபங்கள் அவளுள் வளர்ந்தன.
தன் நாட்டியத்தைத் தொடர முடியவில்லை.
கணவனுடன் ஊர் சுற்ற முடியவில்லை. அவனோ, அலுவலகம் வீடு,குழந்தைகள் என்று இருந்தான்.
வேலையின் பளு குழந்தைகளோடு இருக்கையில் குறைவதாக உணர்ந்தான்.
இவர்கள் வளரட்டும் மா. நாம் எல்லா இடங்களும் போகலாம் என்று அவளுக்கு சமாதானம் சொல்லுவான்.
ஒரு வருட டிசம்பர் மாத இசை விழாவுக்குப் போய் வந்தவளுக்கு தன தோழிகள் ஆடிய கச்சேரிகளைப பார்த்து மனம் மிக வருந்தியது. தன் வாழ்க்கையே
வீணாகப் போவதாகத் தோன்றியது.
மாதுங்காவிலும் சபாக்கள் இருந்தன.
கேசவனை வீட்டில் விட்டு விட்டு, சபாக்களுக்குப் போய் வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள் .
அங்கேயே தன நடனத்தைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு ஆசிரியரையும் அடையாளம் கண்டு, அந்த வகுப்புகளுக்குப்
போக ஆரம்பித்தாள். குழந்தைகள் சரஸ்வதியோடு நெருங்கி சமாதானம் அடைந்தன.
இந்த இடைக்கால வசந்தம் தடைப்பட்டது.
சரஸ்வதிக்குத் திருமணம் நிச்சயம் செய்வதாகக் கடிதம் வந்த போது .
ராதைக்கு வந்த கோபம் சொல்லி முடியாது.
அடுத்து அவள் எடுத்த முடிவு கேசவனுக்கு
அளவில்லாத வருத்தம் கொடுத்தது.
குழந்தைகளைத் தன் அம்மா வீட்டில் விடப் போவதில்
உறுதியாக இருந்தாள் .
சென்னையில் படிப்பைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.
வீட்டு வண்டியில் போய் இறங்கித் திரும்பி வரலாம்.
நல்ல கான்வெண்டுகள் இருக்கின்றன.
தன்னைப் போலவே பெண்ணையும் அம்மா வளர்த்து விடுவாள்.
பையனுக்கும் டான் பாஸ்க்கோவில் இடம் கிடைத்து விடும்.
என்று அவள் திட்டங்கள் வளர்ந்தன.
கேசவனுக்குத் தன் உலகமே இருளுவது போல் தோன்றியது .
குழந்தைகள் இல்லாமல் என்ன குடும்பம் இருக்க முடியும் என்று கலக்கம் ஏற்பட்டது. தொடரும்.
16 comments:
ஒரு குடும்பத்தில் நிகழ்கின்ற செயல்கள்,மாற்றங்கள்.. தொடர்கிறேன்.
ராதையின் ஏமாற்றம் அறிந்து கேசவன் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் என்று தோன்றுகிறது. நாம் க்ளைமேக்ஸ் அறிந்தவர்கள். முன்னர் தீர்வு சொல்ல முடியும்!
ஆமாம், நாணயத்தின் இரு பக்கங்களாகச் செயல் படுவதை விட்டு, இருவரின்
சுவைகளும் மாறுபடுவதால் வரும் மாற்றங்கள் ஐயா. கருத்துக்கு மிக நன்றி திரு ஜம்புலிங்கம் சார்.
அப்படி எல்லாம் கணவர்கள் யோசிப்பதில்லையே ஸ்ரீராம். அதுவும் 60 களில்
நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
அது இயல்பாக அமைவது சிலரிடமே.
ஒவ்வொருவர் வாழ்க்கையுமே வித்தியாசமான செய்திகளைச் சொல்கிறது. ராதையின் குணம் தற்போதைய காலகட்டத்தில் சாதாரணம். அப்போதைய காலகட்டத்தில் அபூர்வம் என்றே நினைக்கிறேன். பொதுவா "தான், தன் சுகம், தன் பெருமை, தன் உயர்வு" என்று நினைக்கும் யாருமே, அதை அடையும் வழியில் பெரிய விலையைக் கொடுத்தாகவேண்டும். ஒன்றை இழக்காமல் இன்னொன்றைப் பெற முடியாது. அதிலும் அந்தக் காலத்தில் அத்தகைய சுதந்திரத்துக்கு மிகவும் போராடவேண்டியதிருந்திருக்கும். ஆனாலும் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இவை எவற்றிற்க்கும் மதிப்பு இல்லை என்பதும் புரிபட்டிருக்கும்.
வல்லிம்மா பொதுவாக நல்ல திறமை உள்ள பெண்கள் அதுவும் கலையில் ஈடுபாடு உள்ள பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுவார்கள் தான். அதுவும் வெளியில் செல்ல ஏக்கங்கள் இருக்கும் தான். கேசவன் அதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் ராதைக்கு விட்டுக் கொடுக்கலாமோ...ஆனால் பல கணவர்கள் அப்படி இல்லை. வெகு சிலரே மனைவிக்கும் நேரம் ஒதுக்குவது. ஒரு சில பெண்கள் இப்படித் தங்கள் திறமைகளை இளம் வ்யதில் குடும்பம் என்று அதில் மனதை செலுத்துவதில் ஒதுக்கி வைத்து மன வருத்தங்கள் இல்லாதது போல் வெளியில் தோன்றினாலும் உள்ளே அது ஆழ்மனதில் இருக்கும் ஆனால் பொறுப்புகளில் அது வாலைச் சுருட்டிக் கொண்டு இருக்கும். பொறுப்புகள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி குழந்தைகள் வேலை என்று போகும் போது அப்போது பெண்களுக்கு 40, 45 ஆகிட இந்த மெனோபாஸ் வேறு தொல்லைப் படுத்த அப்போது மருத்துவர்களும் "பெண்களே உங்களுக்கு என்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். சிறு வயதிலிருந்தே பொறுப்புகள் இருந்தாலும் உங்களுக்கு என்ற நேரத்தைச் செலவிடுங்கள்" என்று சொல்வதை எல்லாம் காதில் விழும் போது அந்தச் சுருண்டு கிடந்த பாம்பு வெளியில் படம் எடுக்கும். ஹையோ இத்தனை வருடங்கள் நம் திறமைகள் எல்லாம் வீணாய்விட்டதே என்று ஒரு காம்ப்ளெக்ஸ் தோன்றத் தொடங்கும்..ஒரு சிலருக்கு அது பாதிக்கவே செய்கிறது...
ராதையின் மனது புரிந்து கொள்ள முடிகிறது. கேசவன் கொஞ்சம் புரிந்து கொண்டால் போதும் குழந்தைகளைப் பிரியாமல் ராதையும் தன் திறமைகளைத் தொடரவும், கேசவனும் குடும்பத்தை எஞ்சாய் செய்யவும் முடியும்...
வல்லிம்மா அடுத்து என்ன கொண்டு வரப் போகிறார் என்பதை அறியத்தொடர்கிறோம்
கீதா
வல்லிம்மா நீங்கள் சொல்லியிருப்பதைப் போல் இருவரின் சுவைகளும் மாறுபடுவதால் நிச்சயமாகப் பிரச்சனைகள் எழும். அப்போது ஒருவருக்கொருவர் மற்றவரது திறமைகளுக்கு, ஆர்வங்களுக்கு மதிப்புக் கொடுத்தால் பிரச்சனைகள் தோன்றாது...தோன்றினாலும் புரிதலில் சுமூகமான தீர்வுகள் கிடைக்கும்...இல்லையா வல்லிம்மா
கீதா
அன்பு நெல்லைத்தமிழன்,
தாயைப் பார்த்தே வளர்ந்த மகன்களுக்குப்
பெண்டாட்டியைப் புரிந்து கொள்ள வருடங்கள்
ஆகும்..... நானே இந்தப் போட்டியில் ஜெயித்தது இல்லை ஹாஹா.
கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் முன்னால்
நாகரீகக் குடும்பங்களும் இருந்தன. கொஞ்சம்
கன்சர்வேடிவ் மனப்பான்மையும் இருந்தது.
சென்னையிலிருந்து மும்பை மருமகளைக் கட்டுப்படுத்தும்
மாமியார்களும் இருந்தார்கள்.
வினோதம் தான்.
உண்மைதான் கீதாமா. எங்கள் திருமணம்
ஆன போதில் எங்களுக்கு முதல் ஒரு மாதம் தான்
ஹனிமூன் பீரியட். அதற்கப்புறம் அவர் ,அவரது வேலை. தினசரி
11 மணி ஆகும்.
மதிய சாப்பாட்டுக்கு வந்துவிடுவார்.
பிறகு குழந்தைகளும் நானும்.
அவர் வெளியே செல்லலாம் என்னும் போது குழந்தைகளை விட்டு
வரமாட்டேன் என்பேன். வீட்டோடு ஆள் இருந்தான்.
இப்போது கழிவிரக்கம் மிகுகிறது. இரண்டு ஆண்டுகளில்
குழந்தைகளோடு வெளியே செல்ல ஆரம்பித்தோம்.
கேசவனுக்கு புரிபடவில்லை.ராதையின் ஆசைகளைக் கவனித்திருக்கலாம்.
சம்பவம் நடந்ததற்கு இதெல்லாம் அஸ்திவாரம்.
ஆராய்ந்து முடிவெடுக்க இருவரும் பேசி இருக்க வேண்டும்.
அருமை.
தொடர்கிறேன் அக்கா..
ம்ம்ம்ம்.
என்ன நடந்தது என தெரிந்து கொள்ள தொடர்கிறேன் மா...
அன்பு குமார்,
மிக நன்றி மா. அரிய நிகழ்வு என்று சொல்ல மாட்டேன்.நடந்தது
அவ்வளவுதான்.
அன்பு வெங்கட்,
அகல்யா காலத்திலிருந்து நடப்பது தான்.
உங்களை எல்லாம் அசௌகர்யப்படுத்துகிறோனோ என்று சந்தேகம்
வருகிறது.
இதைப் படிக்கையில் குடும்பம், குழந்தைகளுக்கென நேரத்தைச் செலவிட்ட பின்னர் தன் கச்சேரிகளை ஆரம்பித்துக் கொண்ட அருணா சாயிராம் நினைவில் வருகிறார். இது போல் பல பெண்கள் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த உடன் தங்கள் பழைய திறமைகளைப் புதுப்பித்துக் கொள்வதைப் பார்த்தது உண்டு. நாம் சமூகத்துக்குச் செய்யும் சிறந்த சேவையே நம் குழந்தைகளை முதல்தரக் குடிமகனாக, குடிமகளாக வளர்க்க வேண்டும் என்பது என் கருத்து. நாம், நம் திறமை, நம் ஆசை என இருந்தால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது/ அல்லது குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது. ஷோபனா மாதிரியோ அல்லது சித்ரா விஸ்வேஸ்வரன் மாதிரியோ இருந்திருக்கணும்.
உண்மைதான் கீதாமா. அருணா சாயிராம் மிகச் சிறந்த உதாரணம்.
கலை,குடும்பம் என்று அல்லாடுபவர்கள்,மிகச் சாமர்த்தியமாகக் குடும்பத்தைக் கையாளணும்.
அதற்குக் குடும்பத்தில் இருப்பவர்களும் முயற்சி எடுத்தால் சரியாக இருக்கும்.
எங்கள் குடும்பம் வரை செய்திகள் வரும்போது
அவர்களின் அதிர்ச்சியைப் புரிந்து கொள்ளமுடிந்தது.
என் வரை வராது.
இருந்தாலும் பாட்டி, ,அம்மா எல்லோரும்
பெரிதாகப் பாதிக்கப் பட்டது புரிந்தது. தூரத்து சொந்தம்
அதனால் கோதைப் பாட்டி இங்கே வந்தால்
அழுவது மட்டும் மனசைச் சங்கடப் படுத்தும்.
நன்றி குமார். வாழ்க வளமுடன்.
Post a Comment