இப்பொழுது நாம் கேசவன்,ராதையின் வளர்ப்பு முறைகளைக் காணலாம்.
கோதையும் , வீட்டுக்காரரும் நிறைய பழையக் கலாசாரத்தில் மூழ்கியவர்கள்.
எந்த நிலையிலும் ஆசார அனுஷ்டானங்களை வீட்டுக் கொடுக்காதவர்கள்.
கேசவன், கோவிந்தன் இருவருமே ....... பெற்றோர் சொல் தப்பாத பிள்ளைகளாகவே வளர்ந்தார்கள்.
அதிகம் பெண்களுடன் பழகியதில்லை.
மகன்களின் நடத்தையில் பூரித்துப் போனவள் கோதைதான்.தன் பிசினஸில் குறியாக இருந்த
கோபாலன் ,இவர்கள் விஷயத்தில் தலையிட்டதில்லை.
முழுவதும் அம்மாவைப் பார்த்தே வளர்ந்த பிள்ளைகளிடம் நளினம்,மென்மையும், அதீத உணர்ச்சிகளுக்கு ஆளாகாத குணமும் இருந்தன.
அந்த சுபாவமே அவர்களது கம்பீரத்துக்குக் காரண்மாக இருந்தது.
ராதையின் பெற்றோர் சிறிது காலம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்தவர்கள்.
கட்டுப்பாடும் ,சுதந்திரமும் சேர்த்துக் கொடுத்தே பெண்ணை வளர்த்தார்கள்.
அவளூம் கல்லூரிக்காலத்தில் கூட சொல் மீறியவள் இல்லை.
பிடித்த பரதக் கலையில் நல்ல தேர்ச்சியும்,
அனேகரின் பாராட்டுகளில் மிக லயித்தவளாகவே இருந்து
விட்டாள். கேசவனையும் அவர்களது குடும்பமும்
பிடித்திருந்ததாலேயே திருமணத்துக்குச் சம்மதித்தாள்.
தனது கலையையும் அதன் கூடவே கிடைக்கும் கவனிப்பும் ,பாராட்டுகளும் அவளுக்கு
மிகத்தேவையாக இருந்தது.
அதன் விளைவே மும்பையில் அவள் எடுத்த முடிவு.
கேசவன் குணம் தான்,தன் குடும்பம்,வேலை,பெற்றோர்
இவர்களோடு அடங்கியது.
மனைவி மேடையில் ஆடுவது என்பது அவன் எதிர்பாராத நிகழ்வு.
குழந்தைகளைப் பிரிந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவனால் முடிந்த வரை ராதையிடம் பேசிப்பார்த்தான்.
அவள் தன் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை.
இதன் நடுவே அவன் தந்தைக்கு வந்த மாரடைப்பு பேரிடியாகக் குடும்பத்தை நொறுக்கியது.
குடும்பத்தோடு சென்னை வந்த கேசவனால் ,அடுத்து வந்த
அவர் மறைவைத் தாங்கவே முடியவில்லை.
நிலை குலைந்த தாயைப் பார்க்கவே மனம் பதைத்தது.
கோவிந்தனுடன் சேர்ந்து அப்பாவின் பிரசுர நிலைய வேலைகளைச் சீர் செய்தான்.
குழந்தைகளை அவர்களுடைய அம்மம்மா வீட்டில் இருக்கச் சொல்லி இருந்தார்கள்.
ராதை அவன் கூட இருந்து அப்பாவுக்கான பிதுர்க் காரியங்களில் ஈடுபட்டாலும்
மனம் ஏனோ பொருந்தவில்லை.
கோவிந்தனுக்குப் புதிதாகப் பிறந்திருந்த ஆண் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு
வெறித்த நோக்கோடு உட்கார்ந்திருந்த
தாயைப் பார்க்கச் சகோதரர்கள் இருவர் கண்ணிலும் நீர்.
எப்படி ஆச்சு இந்த நிகழ்வு. இன்னும் அறுபதுக்கு அறுபது கூட
நடக்கவில்லையே, மாதா மாதம்
கேசவன் சென்னை வந்து அப்பாவின் மாதாந்திரக்
காரியங்களைச் செய்வதாக முடிவெடுத்து அவன் கிளம்பத் தயாரானான்.
தான் சென்னையில் இருந்து கொள்வதாகவும்
பிறகு மும்பை வருவதாகவும் சொன்ன ராதையைக் கட்டாயப்படுத்த அவனுக்கு மனதில்
வலு இல்லை..தொடரும்.
16 comments:
ம்ம்ம். மும்பையிலிருந்து சென்னை... என்ன நடக்கப் போகிறது.
தொடர்கிறேன்.
ஒரு மரணம் பல தாக்கங்களை ஏற்படுத்துவது உண்மையே.
இத்தகைய நிகழ்வுகள் மனதை வருத்துவதென்னமோ நிஜம். விதியினால் இப்படி இரு கிட்டத்தட்ட வெவ்வேறு குணம், ஆசை உடையவர்கள் ஒன்று சேர நேரிடுகிறதா? ஒரே வீட்டில் வளரும் இருவருக்கு, வெவ்வேறு வகையான வாழ்க்கை கிடைத்துவிடுகிறதே. தொடர்கிறேன்.
அன்பு வெங்கட் .நல்ல படியா முடியும் .கவலை வேண்டாம்.நன்றி மா.
மிக உண்மை திரு .ஜம்புலிங்கம் ஐயா.
பலவகைகளில் தாக்கம் ஏற்படுத்தத்தான்
செய்கிறது.வாழ்வின் நிதர்சனம்.நன்றி.
அன்பு நெல்லைத்தமிழன்,
அந்தக் காலக் கதைகளில் சாண்டில்யன் படிக்கக் கூடாது என்று தடை
போடும் அப்பாக்கள் இருந்தகாலம்.
இது போல வேறு பட்ட நிகழ்வுகள் காதில் விழாமல் பாதுகாப்பார்.
Only decent things should be talked about,especially in front of kids.
என்னவோ நடக்கிறது மா. நம்பவே முடியாத நிகழ்ச்சி இது.
ஒரே வீட்டில் இரட்டையர் வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றம்.
காத்திருக்கிறேன் மேலும் என்ன வரபோகிறதோ
ராதை போன்ற சிலர் இருக்கத்தான் செய்கிறாரகள் ..எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகம் இவர் போன்றோரிடம் .. பாவம் கேசவன் ரிஸர்வ்ட் டைப் அதனால்தான் அவரால் தாங்க முடியலை ..அடுத்தது என்ன நடக்குமோன்னு மனம் பதைபதைக்குது .
குழந்தைகளை அம்மா வீட்டில் விடுவாரா ராதை ?
கேசவன் தந்தையின் sudden மரணத்திற்கு என்ன காரணமாயிருக்கும் ..தொடர்கிறேன் அம்மா
அன்பு பூவிழி,
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் தான் மா.
அன்பு ஏஞ்சல்,
உண்மைதான். எனக்கு ராதையை நினைக்கும் போது
என்னுடன் கல்லூரியில் படிக்க வந்த பத்மினி
என்ற நடிகை நினைவுக்கு வந்தார். சினிமாவில் நடிப்பதை விட்டுக் கல்லூரியில் படிக்க வந்தார்.
வயதில் ஓரிரு வயதே பெரியவர். 13 வயதிலிருந்து சினிமாவில் நடித்தவராம். சகோதரி என்றொரு படம் வந்தது. அதில் சந்திர பாபுவின் அக்கா மகளாக வருவார். நடனம் அவருடைய மெயின்
ரோலாக வரும். நானொரு முட்டாளுங்க பாட்டைப் போட்டுப் பார்த்தால் தெரியும்.
ஏனோ பார்க்கப் பார்க்க இரக்கமாக இருக்கும்.
இதெல்லாம் அந்தந்த வயதில் ஏற்படும் ஆசைகள்.
விபரீதமாக சிலசமயம் முடியும்.
இரட்டையர்களே ஆனாலும் ஒவ்வொருவரின் விதியும் அதன் பலாபலன்களும் தனித்தனியாகத் தான் இருக்கிறது. அதே போல் இருவருக்கும் ஒரே சமயம் திருமணம் ஆவதும் இல்லை. வேலை போன்றவை கூட ஒரே சமயங்களில் கிடைப்பதில்லை. ஏற்றத் தாழ்வுகளும் இருக்கும். இங்கே மலை, மடு போல! போகப் போகப் பார்க்கலாம்.
ராதையைப் பொறுத்த மட்டில் அவள் எதிர்பார்ப்பில் நியாயம் உண்டு! ஆனால் அந்தக் கால கட்டத்தில் இது பெரிய செய்தியாக ஆகி இருக்கும். :(
சட்சட்டென நிகழ்வுகள்.. தொடர்கிறேன். மாமனாரின் பிதுர்க்காரியங்களில் ராதை மனம் ஒட்டவில்லை என்பது சோகம்.
இணைத்திருக்கும் பாடல் இதுவரை கேட்டதில்லை.
உண்மையாக அதுதான் நடந்தது கீதாமா.
எத்தனையோ நபர்கள் கோதை பாட்டியை வற்புறுத்தியும்
அவர் இரட்டையர் திருமணத்தை ஒன்றாக நடத்தவில்லை.
ராதையின் சுவாவம்
எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது
இந்த செய்தி. பார்த்தவர்கள் பேசினார்கள். 1965க்கு அது
பெரிய விஷயம். சுலபமாகக் கேசவன் விட்டுக் கொடுத்திருக்கலாம்.
அது போல நடக்கவில்லை என்பதுதான் வருத்தம்.
நீட்டிக் கொண்டு போக விருப்பம் இல்லை ஸ்ரீராம். நடந்த விஷயங்களைக்
குறித்துக் கொண்டு எழுதுகிறேன்.
மீனாகுமாரி பாடல்கள் தொகுப்பில் தேந்தெடுத்தேன்.
வல்லிம்மா உங்க பின்னூட்டம் பார்த்து அந்த பாட்டை தேடி பார்த்தேன்
முழு பெயர் பத்மினி பிரியதர்ஷினி .
சிலர் விட்டில்பூச்சிகளாய் மாட்டிக்கொள்கிறாங்க ..சிலர் புத்திசாலித்தனமா விழுந்தாலும் அதிலிருந்து மீண்டுடுவாங்க
எங்க வீட்டுக்கு ரொம்ப அருகில் ஒரு குட்டி பெண் இருந்தா இப்போ அவரும் ஒரு நடிகையாம் .நல்லா படிப்பா பாடுவா ..எனக்கும் கஷ்டமாயிருக்கும் .இப்படிப்பட்டவர்களை நினைக்கும்போது
என்னதான் பணம் பெயர் புகழ் மன நிம்மதியை தராதே :(
முன்னாடியே வாசித்தாயிற்று வல்லிம்மா....இப்பகுதியை. ஆனால் முந்தா நாள் கருத்திட முடியாமல் போனது. கணினி படுத்தியதால்...
இருவரின் வளர்ப்பு முறையும் புரிகிறது. நீங்கள் இதற்கு ம்ந்தைய பகுதியில் கொடுத்த பதில் கோதைப் பாட்டியைபற்றியும் புரிந்தது.
ஆம் அருணா சாயிராம் சிறந்த உதாரணம்..
தொடர்கிறோம்
கீதா
Post a Comment