Blog Archive

Tuesday, December 12, 2017

ராதையின் நெஞ்சம் கேசவனிடமா 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

  கோதையின் மனம் சமாதானம் அடைய மறுத்தது.
இரண்டு நாட்களில் 14 வயது முதல் தன்னுடன்
வாழ்க்கை நடத்திய கணவர் ஏன் இப்படிச் சட்டென்று
 உலகைவிட்டுக் கிளம்பினார்.
அவரைவிட்டு இன்னும் எத்தனை வருடங்கள் நான் இங்கே இருப்பேன்.

என்னென்னவோ எண்ணங்கள் அவர் உள்ளத்தில்
அலைமோதின. அவரது பிறந்தக மனிதர்கள் எல்லோரும் நன்றாகவே
இருக்கிறார்கள்.
எல்லோரும் எழுபது எண்பது தொண்ணூறு என்று
ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.
கோதையின் அம்மா 70 வயதில் ,மகளின் வீட்டு
வேலைகளைப் பார்த்துக் கொண்டு துணைக்கு இருக்க வந்திருக்கிறார்.

இருக்கும் கவலை போதாது போல இந்த ராதை வேறு
இங்கு வந்து இருக்க மறுக்கிறாள்.
அவர்களுக்குள் என்ன மனஸ்தாபமோ தெரியவில்லை.
அவனுடனும் போகவில்லை.
குழந்தைகளையும் பார்க்க முடியவில்லை. என்ன விவகாரமோ தெரியவில்லையே
  என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தாள்.
கோவிந்தனைக் கூப்பிட்டு விசாரித்தால்
கேசவன் ரொம்ப மூடியா இருக்காம்மா. பழைய படி இல்லை. நான் விசாரிக்கிறேன். நீ வருத்தப்படாதே என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தான்.
அடுத்து வருவது ஆறாம்  மாதம். ஒரு வார லீவில் கேசவன் வரவேண்டும்.
அப்போது இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டியது
அவசியம் என்று நினைத்தான் கோவிந்தன்.
அடுத்த நாள் ராதையைப் பார்க்க அவனும் மாலாவும் சென்றார்கள்.
வீடே கலகலப்பாக இருந்தது.
 நிறைய நட்புகளுடன் உட்கார்ந்திருந்த ராதா
இவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து அடுத்த கூடத்துள் அழைத்துச் சென்றாள்.
ஏதாவது அவசர விஷயமா,இருவருமாக வந்திருக்கிறீர்களே
என்று வினவியபடி
உட்கார்ந்தாள்.
குழந்தைகளைக் காணோமே  என்ற மாலாவிடம் இருவரும்
 தனி ஆசிரியரிடம் பாடங்கள் கற்றுக் கொள்வதாகச் சொன்னவளைத் தயக்கத்துடன்
பார்த்தான் கோவிந்தன். கேசவன் ஆறாம் மாத  திதிகள் கொடுக்க
வருவதாகவும்
அம்மா குழந்தைகளை அப்போது அழைத்து வரச் சொன்னதாகவும்
அவளிடம் தெரிவித்தான்.
குழந்தைகளுக்கு அந்தப் புகையும், சூழ்னிலையும்
 அவர்களைப் பயப்படுத்துகிறது. அவர்களுக்கு ஒன்றும் புரியவும் இல்லை.
இன்னோரு சமயம் பார்க்கலாமே .
 என்னுடைய நடனக் குழு காத்திருக்கிறது.
அம்மாவுக்கு என் நமஸ்காரங்களைச் சொல்லுங்கள்.
என்று எழுந்தவளைப் பார்த்துப் பிரமிக்கத்தான்
முடிந்தது மாலாவுக்கும் கோவிந்தனுக்கும்.
நீங்கள் பாம்பே போவது எப்போது  என்று கேட்டபோது,
இப்போதைக்கு இல்லை ,அவரிடம் சொல்லிவிட்டேனே என்றாள்.
அதற்கு மேல் நிற முடியாமல் இருவரும் வாசல் நோக்கி நடந்தனர்.
வழியில் வித விதமான வேடங்களில் ஆண்களும்
பெண்களும்  சிரித்து உரையாடிக் கொண்டிருக்க ,ஒரு இளைஞன்
மட்டும் ராதையின் கைகளைக்  கோர்த்துக் கொள்வதைப்
பார்த்து வியர்த்து விட்டது மாலாவுக்கு. என்ன இது என்று தொண்டை வரை வந்த
கேள்வியை விழுங்கியபடிக் கணவனைப் பார்த்தாள்....தொடரும்.

15 comments:

ஸ்ரீராம். said...

துணுக்குற வைக்கும் மாற்றங்கள் ராதையிடம்.

வல்லிசிம்ஹன் said...

விரும்பக் கூடாத நிகழ்வுகள் தான் ஸ்ரீராம்.
காலம் மாறியதும் உண்மை.

Geetha Sambasivam said...

நடனத்தில் ருசி இருப்பது என்பது வேறு. ஆனால் இப்படியான மாற்றங்கள் தேவை தானா என்றே தோன்றுகிறது. உறவை ஒதுக்கலாமா?

வல்லிசிம்ஹன் said...

நடனத்தில் ருசி அதிகமானதே கேசவன் வேண்டாம்
என்று சொன்னதால் ஏற்பட்டதுதான். கீதாமா.
உள் விஷயங்கள் அதிகம் எனக்குத் தெரியவில்லை.
நடந்ததில் பாதிக்கு மேல்,உறவுகள் வழியாக வந்த செய்திகள்.
நாடகம் போல நடந்தேறிய வாழ்க்கைப் பாதிப்பு.
என் பாட்டி நேரே பார்த்ததும் தீவிரம் புரிந்தது.

நெல்லைத் தமிழன் said...

ராதைகள் இப்போதும் நிறையவே இருக்கின்றனர்.

இதுக்கெல்லாம் அடிநாதம் என்பது சுயநலம்தான். 'தான் தன் சுகம்' என்பதுதான் இரண்டு பக்கத்திலும் பிரச்சனைக்கு அடிப்படை. நீங்கள் சொல்லும் காலத்திலும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும், திருமணம் என்பது, வயதாகும் பெற்றோருக்கு உதவியாகவும், சந்ததியைப் பெருக்கவும், அது பெருகும்போது அவைகளை வளர்க்கவும் என்று வாழ்க்கை போனது.

ராதை செய்ய நினைத்தது, தன்னுடைய நலம், தன்னுடைய பொழுதுபோக்கு என்று. இதை நாம யாரும் நேரடியா குற்றம் சாட்ட முடியாது. காரணம், 'இது என் வாழ்க்கை... நான் ஏன் மற்றவர்களுக்காக அதை விட்டுக்கொடுக்கணும்? 50 வயதானா, நானென்ன நாட்டியம் ஆடமுடியுமா அல்லது நண்பர்கள்/நண்பிகளோடு இனிமையாக பொழுதுபோக்கமுடியுமா' என்று கேட்டால், அதற்கு என்ன பதில் இருக்கு? 'நானெல்லாம் நீ சின்னப்பிள்ளையாக இருந்தபோது, உனக்காக.... 'என்றெல்லாம் பதில் சொன்னால், 'அது நீ தேர்ந்தெடுத்தது. அதற்கு நானென்ன செய்வது' என்ற பதிலும் வரும்.

இன்றைய காலகட்டத்திலும், 'பசங்களை வளர்க்கும்' காலம் முழுவதும், பெண்ணிற்கு, தன்னுடைய நலம், ஆசை, முழுவதுமாகத் துறக்க நேரிடுகிறது. அவங்க வேலை, திருமணம் என்று ஆகும்போது, வாழ்க்கையை பெற்றோர்களால் எஞ்சாய் செய்ய இயலாமல் போய்விடுகிறது.

சட்டுனு கதை படிக்கும்போது ராதைமேல் கோபம் வருவது உண்மை. ஓரளவு விட்டுக்கொடுத்து கேசவன் இன்னும் இனிமையாகவே பாம்பேயில் வாழ்ந்திருக்கலாமே என்று தோன்றுகிறது. எப்போதும் எது நல்லன அல்லாததோ, அதனுடைய ருசியை நிச்சயம் காண்பிக்கக்கூடாது. ருசி கண்டுவிட்டால், அதை விடுவது கடினம். இதுதான் ராதாவின் விஷயத்தில் நடந்துவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக உண்மை நெல்லைத்தமிழன்.
புரிதல் இல்லாத திருமண வாழ்வில் நேரக்கூடிய அபாயங்கள்.
அன்னியன் ஒருவனை நேசிக்கும் அளவிற்குக் கொண்டு போய் விட்டுவிட்டது.

எத்தனையோ ஏக்கங்கள் இருந்தாலும்
வடிகால் தேடும் எண்ணம் பலருக்கு வந்ததில்லை.
எங்கள் வாழ்விலும் நிறைய விட்டுக்கொடுத்தல் தேவைப்பட்டது.
கணவர் மீது நிஜமான காதல்
இருக்குமானால் தவறுவதற்கு வழியே இல்லை.

இழந்ததை எண்ணி வருந்துவதை விட இருக்கும் காலம்
மகிழ்ச்சியாகப் போக வேண்டும் என்ற
எண்ணம் தீர்மானம் வேண்டும்.
60களில் நடந்த சம்பவம்
இப்பொழுதைய சூழ்னிலைகளில் எந்தப் பரிமாணங்களில்
வெளிப்படுமோ தெரியவில்லை.
அன்பும் காதலும் மட்டுமே தாம்பத்யத்தைக் காப்பாற்றும்.
ராதை ஒரு தனிப் பிறவி. அவளால் திருமணத்துக்கு வெளியே
உறவு கொள்ள எப்படி முடிந்தது என்பதே
எல்லோருக்கும் அதிர்ச்சி. மிக நன்றி நெல்லைத்தமிழன்.
சிலருக்குக் கசப்பாகத் தோன்றலாம்.
இது நடந்த உண்மை.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக உண்மை நெல்லைத்தமிழன்.
புரிதல் இல்லாத திருமண வாழ்வில் நேரக்கூடிய அபாயங்கள்.
அன்னியன் ஒருவனை நேசிக்கும் அளவிற்குக் கொண்டு போய் விட்டுவிட்டது.

எத்தனையோ ஏக்கங்கள் இருந்தாலும்
வடிகால் தேடும் எண்ணம் பலருக்கு வந்ததில்லை.
எங்கள் வாழ்விலும் நிறைய விட்டுக்கொடுத்தல் தேவைப்பட்டது.
கணவர் மீது நிஜமான காதல்
இருக்குமானால் தவறுவதற்கு வழியே இல்லை.

இழந்ததை எண்ணி வருந்துவதை விட இருக்கும் காலம்
மகிழ்ச்சியாகப் போக வேண்டும் என்ற
எண்ணம் தீர்மானம் வேண்டும்.
60களில் நடந்த சம்பவம்
இப்பொழுதைய சூழ்னிலைகளில் எந்தப் பரிமாணங்களில்
வெளிப்படுமோ தெரியவில்லை.
அன்பும் காதலும் மட்டுமே தாம்பத்யத்தைக் காப்பாற்றும்.
ராதை ஒரு தனிப் பிறவி. அவளால் திருமணத்துக்கு வெளியே
உறவு கொள்ள எப்படி முடிந்தது என்பதே
எல்லோருக்கும் அதிர்ச்சி. மிக நன்றி நெல்லைத்தமிழன்.
சிலருக்குக் கசப்பாகத் தோன்றலாம்.
இது நடந்த உண்மை.

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை...
புரிதல் இல்லாத திருமணங்களின் பின்னே நிகழும் நிகழ்வுகள் கசப்பானவையே....

Angel said...

சில பெண்கள் ராதை போலதான்மா ..பிடிவாதம் கொஞ்சம் இரத்தத்தில் ஊறிவிட்டது அதனால் சின்ன ஏமாற்றத்தையும் தானாக முடியாதது .இப்படிப்பட்டவங்க கேசவன் போன்ற மிகவும் அமைதியான குடும்பத்தில் வாழ்க்கைப்படும்போது நிறைய விஷயங்களை காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி வரும் ,இதில் இருவருமே .
படிக்கும்போது ராதை மேல் கோபம் வரவில்லை ஆனால் பயமும் பரிதாபமும் தான தோணுது .
இவர் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாய் ..அந்த புது நட்பு எப்படியோ :( என்னாகப்போகுதோ ராதையின் நிலை .

தொடர்கிறேன்

பூ விழி said...

Valima virivana vimarsanam koduka mudiyalai opportunity piragu thirumavu varukiren suer

வல்லிசிம்ஹன் said...

உண்மை பரிவை குமார். மிக சோகமான
தாம்பத்தியம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததுதான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சலின். நன்றி கண்ணா.
கடைசிகாலத்தில் உண்மையான அன்பைப் புரிந்த கொண்ட
ராதை வழி தவறி இருக்க வேண்டாம்.
ஆனால் பிள்ளைகள் அவர்கள் ஒன்று சேரக் காரண்மாக இருந்தார்கள் என்பதே
உண்மை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி, மெதுவே வாருங்கள். இந்தக் கதை இங்கே தான் இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆ!!!! தன் கலையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில் தவறு இல்லை. ஆனால் ராதை இப்படியா ஆக வேண்டும்?!!!!!!! ஆனால் ஒரு சிலர் இப்படி ஆகியும் விடுகிறார்கள்தான்...ஆனால் சிலருக்கு அது தவறான முடிவாகவும் ஆகும் அப்போது அவர்கள் உணரும் போது வாழ்க்க்கை பல மைல்களைக் கடந்து சென்றிருக்கும்....புரிதல்கள் இல்லை என்றால் இப்படித்தான் யாரேனும் ஒருவர் வழி மாறிப் போக முயற்சிப்பது...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
நடந்த விஷயம் என்றாலும் எழுதும்போது மனம்
ஏற்க மறுக்கிறது. விதி வலியது.