கோதை ஏமாந்தார்.
தொலைபேசியில் விசாரித்த போது உடல் நலம் சரியில்லை என்று ராதையின் அம்மா
சொல்லிவிட்டார்.
கேசவனைப் பார்த்துக் கலங்கத்தான் முடிந்தது கோதையால்.
நான் உன்னுடன் வரட்டுமாடா என்று கேட்டதற்கும் சரியான சொல்லவில்லை.
இயல்பை விடக் கறுத்து இளைத்துக் காணும் மக்னைக் கண்டு கண்ணீர் வந்தது.
நான் அங்கே
போய்க் கேட்பேன்.
ஒரு வருடத்துக்குள் போவது நல்லதில்லை என்று இருக்கிறேன்.
என்றவளைப் பார்த்து ,அலுப்புடன் சொன்னான். அம்மா,நான் அவளுடன் நேரம் செலவழிப்பதில்லையாம்,.
பாம்பே வரும் எண்ணம் இல்லையாம்.
முடிந்தால் இந்த ஊருக்கு மாற்றி வரச் சொல்கிறாள்.
என்னால் முடியாத காரியம் அது.
இந்த ஊர்க் கொண்டாட்டம் அவளுக்குப் பிடித்திருக்கிறது.
என்னுடன் முடியுமானால் நீ வா. அங்கேயே
அப்பாவின் மற்றத்திதிகளையும் கொடுக்கலாம் என்றான்.
விசேஷங்களுக்கு வந்திருந்த அம்மாவின் தங்கை
தனியாகப் பேசுவதைக் கவனித்தான்.
இனம் புரியாத சினம் வந்தது.
என்ன சித்தி,புதிதா ஏதாவது வம்பா என்ற கேட்ட கேசவனை அதிர்ச்சியுடன்
பார்த்தாள் சித்தி.
யாரைப் பத்தியும் இல்லடா கேசவா. உன் பெண்டாட்டி ராதையின்
பட்டணப் பிரவேசத்தைச் சொல்கிறேன்.
எப்போது பார்த்தாலும் ஒரு கல்கத்தாப் பையன் அவள் வீட்டில்
இருக்கிறான். வேலை முடிந்து இரவு வருகிறான்.
காலயில் செல்கிறான்.
அவள் அம்மா அப்பா கண்டு கொள்வதாகக் காணோம்.
நீயாவது கேட்கக் கூடாதோடின்னு
இவளைக் கேட்க வந்தேன்.
ஊரே பேச ஆரம்பித்தாச்சு.
முற்ற விடாதே .குழந்தைகளையாவது உன்னோடு அழைத்துப் போ என்றாள்.
இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டான் கேசவன்.
நான் அங்கே போய்ப் பார்த்ததைத் தான் சொல்கிறேன்.
ஒரே அறையில் அடைந்து கிடக்கிறார்கள்.
சனி ஞாயிறு, காரில் ஊர்வலம்.
ராதை அம்மாவிடம் கேட்டால் என்னவோ நடனத்துக்காக வந்தவன். நல்ல சினேதன்.
அவ கணவன் சரியாக இருந்தால் இவள் மாறி இருக்க மாட்டாள்
என்று பெண்ணை சப்போர்ட் பண்றா.
இது என்ன குடும்பம் என்று எரிச்சல் வந்து நேரே இங்கே வந்தேன் என்றாள்.
மயான அமைதி வீட்டில் நிரம்பியது.. அடுத்த இரு மாதங்களில் கேசவன் சென்னையோடு வந்து சேர்ந்தான்.
அடுத்து இரு பகுதிகளில் முடித்துவிடுகிறேன் நண்பர்களே.
12 comments:
முடிப்பதற்கு அவசரப்படவேண்டாம் அம்மா. அடுத்து என்ன என்று அறிய ஆவலாகக் காத்திருக்கிறேன். பொருத்தமான பாடல் இணைத்திருக்கிறீர்கள்.
உங்கள் கருத்து உற்சாகம் தருகிறது ஸ்ரீராம்.
நடந்ததை அப்படியே எழுதுவதால் சுருக்கவும் முடியவில்லை.
படிப்பவர்களுக்கு அலுத்துப் போகக் கூடாது இல்லையா மா.
நன்றி ராஜா.
கதை அலுக்கலை. ஆனால் சுருக்கமாகச் சொல்வதாகத் தெரிகிறது. தொடருங்கள். அவசர அவசரமாக முடிக்காதீர்கள்.
இதனை ஒட்டி ஒன்று எழுதலாம்.
நல்ல குடும்பத்தைச் சேர்ந்த மிக நல்ல புத்திசாலி பையன் இருந்தான். (கண்ணன் என்று வைத்துக்கொள்வோம்) சௌதியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு நண்பன் உண்டு (அங்கு சேர்ந்த நண்பந்தான்). அவனும் வீட்டில் தங்கியிருந்தான். கண்ணனுக்கு ஒரே ஒரு கெட்ட குணம், கோபம். அதைத்தவிர மிக நல்ல சுபாவம். நல்ல வேலை, நிறைய பணம். அவன் பெற்றோர் பெங்களூரில், மிகவும் நல்லவர்கள், அமைதியானவர்கள். கண்ணனுக்கு திருமணம் ஆகி மனைவியை சௌதிக்குக் கூட்டிக்கொண்டு சென்றான். ஆனாலும் நண்பனை தன் வீட்டில் ஒரு அறையிலேயே தங்கச் சொன்னான். சில பல வாரங்களில் மனைவி மெதுவாக, நண்பனை அனுப்பிவிடுங்கள் என்று பேச்சை ஆரம்பித்தாலே, அவன் என் நண்பன், நல்லவன், அவனைப்பற்றி எதுவும் சொல்லாதே என்று சொல்லிவிடுவான். மனைவி மீண்டும் மீண்டும் ஜாடையாகச் சொன்னபோது, கண்ணனுக்கு பயங்கர கோபம் வந்துவிடும்.. சில மாதங்களின் மனைவி கர்ப்பவதியானாள். ஒரு நாள் மதியம் திடீரென்று கண்ணன் வீட்டுக்கு வந்தபோது இருவரையும் சேர்ந்து கண்டுவிட்டான். (எனக்குத் தோன்றியது, அந்த நண்பன், கண்ணனின் நல்ல மனதை உபயோகப்படுத்தி, அவன் மனைவியை வசப்படுத்தியிருப்பான் என்று) பிறகு அவளை ஊருக்கு அனுப்பி, பிறகு விவாகரத்தும் ஆச்சு. இந்த மாதிரி விஷயங்கள் பொதுவா வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நடக்காது. வாழ்க்கையில் கண்ணன் பாடம் படித்துக்கொண்டானா என்பது தெரியாது, ஆனால் அவன் மனைவியும் குழந்தையும் அவனைவிட்டுப் போனதுதான் மிச்சம்.
கஷ்டமான மனநிலை...
விரைந்து முடிக்க வேண்டாம்.
உண்மைக்கதை எனும்போது இன்னும் அத்தியாயங்கள் சென்றாலும் பரவாயில்லை.
நல்லா நகர்கிறது கதை.
வாழ்த்துக்கள் அம்மா.
ம்ம்ம்ம்ம் மனச் திக் திக் என அடித்துக் கொண்டது என்ன ஆகப் போகிறதோ என! :( ஆனாலும் இப்படிப் புத்தி போக வேண்டாம்.
அன்பு நெல்லைத்தமிழன்,
இப்படியும் நடந்திருக்கிறதா. அடப் பாவமே.
யாரை யார் மனம் மாற்றினார்கள். அவர்களாகவே மாறினார்களா
என்பதெல்லாம் கேள்வியாகிறது.
இயல்பாகவே துர்க்குணம் அமைந்து விட்டால்
கடவுளே வந்தாலும் குணப்படுத்த முடியாது.
நடந்ததை எழுதுகிறேன் அப்பா.
எங்க காலத்தில் நடந்தது ,முன்னாலும் நடந்திருக்கிறது .
பின்னாலும் நடந்திருக்கிறது என்பதே இங்கே உண்மை
நிரூபணம். எழுதும்போதே,அந்தக் குடும்பமும்
எனது பாட்டியும்
அனுபவித்த சிரமங்கள் நினைவுக்கு வருகிறது.
நன்றி மா.
அன்பு பரிவை குமார்,
நல்ல விஷயங்களை எழுதும்போது வரும் உற்சாகம்
இந்தக் கதையில் எனக்கு வரவில்லை.
இருந்தாலும் எழுதிவிட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்
எழுதுகிறேன்.மிக நன்றி மா.
ரொம்ப நல்லவர்களுக்கே இப்படி சோதனைகள் வரும் பாவம் கேசவன் அவ்னது குடும்பத்தார் அதைவிட பாவம் குழப்பத்தில் வளரும் கேசவனின் குழந்தைகள் ..
இதில் ராதையின் பெற்றோரும் கண்டனத்துக்குரியவர்கள் ..அவர்கள் மகளின் பிடிவாத குணத்திற்கும் தவறுக்கும் துணை போவது மிகவும் மோசமான தவறு .தொடர்கிறேன் வல்லிம்மா
அதுதான் உண்மையான பரிதாபம் ஏஞ்சல்.
சம்பந்தம் இல்லாத எனக்கே கோபம் வந்தது என்றால்
அந்தக் குழந்தைகளின் கதியை நினைத்து வருத்தப் பட்டேன்.
காலம் மாறட்டும். பெற்றோர் ஆதரவு இல்லாவிட்டால்
இந்த முடிவிற்கு அவள் போக சந்தர்ப்பம் இல்லை.
அன்பு கீதா மா. நம் வாழ்க்கை வேறு. அந்தப் பெண்ணின் மனம் வேறு.
எங்கயோ தப்பு நிகழ்ந்திருக்கிறது.
பார்க்கலாம் இறைவன் அருள்வான்.
வல்லிம்மா கேசவனையும் சரி ராதையையும் சரி குற்றப்படுத்திப் பார்க்க முடியவில்லை. ஏதோ மிகவும் பாதிக்கும் நிகழ்வு நடந்திருக்குமோ? ஏனென்றால் பெண் மனது ஒரு சிலரின் மனது மிகவும் சென்ஸிட்டிவ்...ஆழ் கடல் வேறு...இப்போது கேசவனும் சென்னை வந்துவிட்டான் ஒரு வேளை ராதையின் மனம் கொஞ்சம் மாறுகிறதா ?
அம்மா நாங்கள் எல்லோருமே கதை வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தான். சட்டென்று முடிக்க வேண்டாம். எழுதுங்கள்...போரா கதையை வாசிப்பதில் போரா...அதெல்லாம் இல்லை...
தொடர்கிறோம்..
கீதா
எல்லா பகுதிகளையும் சேர்த்து என் தள நண்பர் துளசிக்கு அனுப்புகிறேன்..எல்லாம் சேர்த்து வாசித்துவிட்டுக் கருத்துச் சொல்வதாக....அவர் இதைச் சொல்லச் சொன்னார்...
அன்பு கீதா மா,
இது காலக் கொடுமை.
நடந்ததை நினைத்துப் பார்க்கக் கூட நாம் அஞ்சுவோம்.
திரு. துளசிக்கு நேரம் இருக்கும் போது படிக்கட்டும். கருத்துகளை விரும்பி வரவேற்கிறேன்.
Flu and pNimoniya shots போட்டுக் கொண்டிருப்பதால்
எழுத முடியவில்லை. நன்றி மா.
Post a Comment