Blog Archive

Wednesday, October 18, 2017

பயணங்கள் 4 ஆம் பாதம்

1956 பிளிமத் ஸ்டேஷன் வேகன். Google  உபயம் 
Add caption
இப்போதைய ஸ்ரீவைகுண்டம் சந்நிதித்தெரு 
ஸ்ரீவைகுண்டம் கோவில் கோபுரத்தில் ப்ரஹ்லாத வரதன் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
குறுங்குடியில் இருந்த ஐந்து நாட்களும் தினம்
நம்பியாற்றில் குளிக்கத் தாத்தா அழைத்துச் சென்றார். யாருக்கும் நீந்தத் தெரியாது. கரையோரமாகவே காக்காக் குளியல் தான். இருந்தும் ஓடும் தண்ணிரின் இன்பம் இன்னும் மறக்க முடியாது.

பாட்டி சாதம் கைகளில் போடும்போது கதை சொல்வார் என்று எழுதி
இருந்தேன்.அப்போது மகேந்திர மலைக் கதையும் சொல்வார்.  மகேந்திர மலைக்கு
மேலே ஏறினால்  பரமபதம் தெரியும். என்பார்.
 தென்கோடியில் திருக்குறுங்குடி இருப்பதால்
யமலோகம்  பக்கம். சர்வ ஜாக்கிரதையாக நடக்கணும் 
என்று மனத்தில் பதிய வைத்தார். தந்தை தாய்க்கு பணிந்து நடக்க வேண்டும்.
பொய் சொல்லக் கூடாது. சித்திரகுப்தன் கேட்டுக் கொண்டே இருப்பான்.
இப்படி எல்லாம் சொல்லிச் சொல்லி எங்களைத் தப்பு வழிக்குப் போகாமல்
 செய்ததில் பாட்டிக்குப்  பெரும்பங்கு உண்டு.
தினம் வீட்டுக்குப் பின்புறமும் வாசல் பக்கமும்
 தீபங்கள் தினம் ஏற்றப்படும்.
அம்மியில் எப்பொழுதும் இஞ்சிச் சாற்றுக்கு அரைத்து
 தண்ணிர்கலந்து தேனுடன் கொடுப்பார்.
வேப்பமரத்திலிருந்து கொழுந்து பறித்து
சாப்பிடச் சொல்வார்.  இந்தப் பழக்கம் மதுரை வந்த பிறகும் தொடர்ந்தது.
     அடுத்த நாள் திருச்செந்தூர் போவதாக ஏற்பாடு. கூடவே கன்யாகுமரியும்
 சேர்ந்து கொண்டது.
கன்யாகுமரிக்கு  சூர்யோதயம் பார்க்கவே சென்று விட்டோம்.
அந்த அலைகளுக்கு நடுவே சங்கிலிகளைப் பிடித்தபடி  அப்பா
நின்றுகொள்ள, பற்கள் கிடுகிடுக்கக் குளித்த நினைவு இருக்கிறது.
அலைகளுக்கு நடுவே சித்தப்பாவும் அப்பாவும் எங்களையும்,பாட்டி
அம்மா,சித்தி  அனைவரையும் கவனித்துக் கொண்டார்கள். மாலை திருச்செந்தூர்.

18 comments:

நெல்லைத் தமிழன் said...

பழைய பயண நினைவுகள், அதிலும் சிறு வயது.... மறக்கமுடியுமா? இந்தத் தீபாவளி உங்களனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வைகுண்டம் சன்னதித்தெருவினைப் பார்த்தபோது கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி கோயில் சன்னதித்தெரு நினைவிற்கு வந்தது. அத்தெருவும் கிட்டத்தட்ட இப்படியே இருக்கும்.

ராஜி said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் வல்லிம்மா..

இப்ப கதை சொல்லி வளர்க்க பாட்டிங்க இல்லாததால் குற்றங்கள் பெருகி போச்சு

ஸ்ரீராம். said...

கதைகளுடன் நல்ல எண்ணங்களையும் ஊட்டினார் அந்நாளில். இப்போது அந்த வாய்ப்பை இன்றைய குழந்தைகள் மிஸ் செய்கிறார்கள்.

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.​

Geetha Sambasivam said...

கதை சொல்லிப் பாட்டிகள் இருந்தாலும் பேத்திகள், பேரன்கள் பொறுமையாய் உட்கார்ந்து கேட்பதில்லை! :) எல்லாம் தொலைக்காட்சி மயம்.

பூ விழி said...

அன்று உடலுக்கும் மனதிற்கும் நலம்பயிற்று இருக்கிறார்கள் முன்னோர்கள் இன்று இறக்கையை இயற்கையாய் ஏற்று கொள்ளாமல் இன்று செயர்கைபூச்சுடன் கொடுக்க வேண்டிய காலமாகிவிட்டது சிஸ்

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவுகள்.

தீபத் திருநாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறை வாழ்த்துகளும் நன்றியும் அன்பு ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே பூவிழி. எதுவும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் மன நிலை அகன்று விட்டது.
சரியாகச் சொன்னீர்கள் சகோதரி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். அவர்களுக்கு ஆங்கிலம் மொழியாகிவிட்டது. சின்னப் பேரனுக்குக் கதை சொல்ல அவன் ஓரிடத்தில் உட்கார வைப்பதே கடினம். இங்கே லைப்ரரிகளில்
ஸ்டோரி டெல்லிங்க் டைம் என்று வைத்திருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்,
அப்பா,தாத்தா எல்லோருமே புத்திமதி சொல்வதை
ஒரு கடமையாகவே வைத்திருந்தார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி,
குழந்தைகளுக்குப் படிப்புத்தொல்லை. சினிமா மோகம்.
இத்தனை தொந்தரவுகளுக்கு நடுவில்
அறிவுரை என்று ஏதாவது வந்தால் ஓடிவிடுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.
அனேகமாக நம் ஊர் கோவில்,அதை ஒட்டிய
தெருக்கள் ஒரே மாதிரி இருக்கும். நானும்
நினைத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெ.தமிழன்.
மீண்டும் அது போலக் காலம் வரலாம்.

'பரிவை' சே.குமார் said...

பயணம்-
படங்களுடன் சிறப்பாய்...
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உறவுக்கும் நட்புக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

இனிதான பயணம். எத்தனை மகிழ்ச்சியாக இருந்திருக்கும் உங்களுக்கு அதுவும் அத்தனைப் பேருடனும்...நினைக்கவே இன்பமாகத்தான் இருக்கிறது வல்லிம்மா இனிய நினைவுகளைச் சுமந்து இங்கும் பதிகின்றீர்கள்!! அருமை..தீப ஒளி இனிதே ஒளிர்ந்து எல்லா நன்மைகளையும் நல்கட்டும்..

---துளசிதரன், கீதா

கீதா: என் அப்பா வழி தாத்தா பாட்டி என்னை மடியில் உட்கார்த்தி வைத்து நல்ல நல்ல கதைகள், பாட்டி சாதம் ஊட்டும் போது கதைகள் பல சொல்லுவார். தாத்தா எனக்குத் துருவ நட்சத்திரக் கதை சொல்லியிருக்கார். பாட்டி எனக்கு திருப்பாவை அப்போதே மனப்பாடம் செய்ய வைத்தார். அத்தைகள் சின்னச் சின்ன தமிழ் க்ருதிகள் சொல்லிக் கொடுத்தனர். பெரிய அத்தை நடனம் கற்றுக் கொடுத்து என்று சந்தோஷமான நாட்கள் அவை. உங்கள் பாட்டி தாத்தா எனது சிறிய நாட்கள் நினைவுகளை மீட்டிவிட்டது. இப்போதெல்லாம் நல்ல கதைகள் சொல்ல யார் இருக்கிறார்கள். என் மகன் வரை நிறைவேறியது. தொடர்கிறோம் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிவை.குமார், வாழ்த்துகளுக்கு நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, அன்பு கீதா,

தாத்தா பகவானிடம் சேர்ந்தே அறுபது வருடங்கள் ஆகிறது.
யாருக்கும் நினைவு இருக்குமோ என்னவோ. உங்களுக்கெல்லாம்
அங்கே தொடர்பு இருக்குன்னு கேட்கவே எனக்கு சந்தோஷமா இருக்கு.
கீதாமா, அன்பான குடும்பம் கடவுள் கிருபையால் அமைவதே ஒரு பெரிய பாக்கியம்.
தாத்தாவும் அப்பாவும் சொன்ன பிரஹ்லாத, துருவன்,அரிச்சந்திர மஹராஜா கதைகள் எங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
தாத்தா, கலைமகளும் மஞ்சரியும் வாங்குவார்.
டூ யூ know புத்தகங்கள் நிறைய வாங்கிக் கொடுப்பார்.
காலங்கள் ஓடிவிட்டன. என் குழந்தைகளுக்கு நான் சொன்னேன்.
இப்பொழுது பேரன் பேத்திகள் வளர்ந்த நிலையில்
கதை கேட்கப் பொறுமை இல்லை. ஹாரி பாட்டரும் ம், நார்னியா புஸ்தகங்களும்
மெயினாகப் போய் விட்டன. மிக நன்றிமா. இரண்டு பேரும் வந்து
கருத்து சொல்வது மகிழ்ச்சியா இருக்குமா.