Blog Archive

Monday, April 04, 2016

மாங்காய் எண்ணெய் மாங்காய்

 எண்ணெய் மாங்காய்  .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++இந்த ஊறுகாய்க்கு   எந்த மாங்காயும் பொருத்தம். ஊறு காய் போட்டபிறகு
 வெய்யிலில் எடுத்து   வைத்து வைத்து எடுக்கவேண்டும்.

கொஞ்சம் இளசு  கொஞ்சம் முத்தின வகையாக இருக்கும் மாங்காய்கள் ஆறு எடுத்துக் கொள்ளணும்.

நன்றாக அலம்பித் துடைத்துக் கொண்டு பிறகு துண்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
கையளவு தான் இதுக்கு.
ஐந்து அளவு மாங்காய்த் துண்டுகளுக்கு   ஒரு அளவு உப்பு பொடித்தது.
உப்பு அளவிற்கு ஒன்றேகால் அளவு மிளகாய்ப்   பொடி
முதலில் மாங்காய்த்துண்டுகளையும் உப்பு பொடியையும் கலந்து வைத்து விடவேண்டும்.
இரண்டு நாட்களில்   ஊறித் தண்ணீர்   விட்டு விடும் .

அடுத்து  அரைக் கிலோ எண்ணெய் அடுப்பில் வைத்துக் கடுகை
வெடித்ததும்,மிளகாய்ப் பொடி , வறுத்துப் பொடி  செய்த   மெந்தியப் பொடி
பெருங்காயம் வறுத்துப் பொடி  செய்தது, மஞ்சள் பொடி  6 ஸ்பூன் எல்லாவற்றையும் கொதிக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
அதே சூட்டோட , மாங்காயில் இருந்த உப்பு ஜலத்தை சேர்க்கவேண்டும்.மீண்டும் அடுப்பை ஏற்றி, சிறிய  உஷ்ணத்தில் பதினைந்து நிமிஷங்கள் வைத்திருந்து    தண்ணிர்  வற்றியவுடன்
அதில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு இறக்கிவிடவேண்டும்.
ஆறினவுடன் ஜாடியில்  சேர்த்துவிடவேண்டும்.
ஜாடி குளிர்ந்தவுடன் வேடுகட்ட வேண்டியது தான்.

இதற்குப் பராமரிப்பு கவனம் வேண்டும். நல்ல வெய்யில் வந்தவுடன் ,கிணத்து மேட்டிலோ இல்லை பால்கனியிலோ வேடுகட்டின துணியோடு வைக்க வேண்டும் .
நான் கு  நாட்களில் எண்ணெய் மாங்காய் ரெடி.


















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

9 comments:

வல்லிசிம்ஹன் said...

2012இல் போட்டது. படம் கூகிளாரே கொடுத்தார்.

ஸ்ரீராம். said...

ஒரு பிடி மோர்சாதத்துடன் அமர்ந்து விடத் தோன்றுகிறது படத்தைப் பார்க்க. பொடி எல்லாம் போடி ஆகி விட்டது!

வல்லிசிம்ஹன் said...

ஹ ஹ ஹஹா ஹா. போடி எல்லாவற்றையும் பொடி செய்துவிட்டேன் ஸ்ரீராம். மிக நன்றி.
ஏற்கனவே சொன்னது போல என் கணினிக்கு காப்பிடல் தெரியாது. காப்பிடல் ஸ்டேட்டில் இருந்தாலும். சுட்டிக் காட்டியதற்கு மிக நன்றி. இனிமேல் சாப்பிடலாம்.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.....

கோமதி அரசு said...

”மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும் ”என்பார்கள். மாங்காய் ஊறுகாய் அருமை.

நெல்லைத் தமிழன் said...

எண்ணைச் சூட்டில் மிளகாய்ப்பொடி கறுத்துப்போகாதா? நான் மாங்காய் ஊறுகாய் பண்ணும்போதெல்லாம், சூட்டினால் மிளகாய்ப்பொடி கரியாகிவிடுகிறது. இல்லாட்டா பச்சைப் பொடிமாதிரி இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் கருத்துக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, மதுரையில் மாங்காய் வந்துவிட்டதா,. பெரியகுளம் மாவடு மிக
நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நெல்லைத்தமிழன்.
நல்ல அரக்குக் கலரில் வரும். கஷ்மீரி மிளகாய்த்தூள்
உபயோகித்தால் சிகப்பாகவே இருக்கும். சென்னையில் பாம்பே ஸ்டோர்ஸ் என்ற கடையில் தி.நகரில்
இந்தப் பொடி சுத்தமானதாகக் கிடைக்கும். செய்து பாருங்கள். மிளகாய்த்தூள் போட்டதும் அடுப்பை அணைத்துவிடவேண்டும்.