Wednesday, September 19, 2012

மணிவிழா காணும் தம்பதியர் துளசி,கோபால்!வாழ்த்துகள்.













நிகழும் நந்தன  ஆண்டு புரட்டாசித் திங்கள்  நான்காம் நாள்

அன்புத் தோழி திருமதி துளசியும் அவரது துணைவர் திருவாளர் கோபால் அவர்களும்
மணிவிழாக் காணுகிறார்கள்.

இரு நல்ல இதயங்கள்.

இளகிய மனம் கொண்ட ஜோடி.
மற்றவர் துயர் காணப் பொறுக்காதவர்கள்

எந்நாளும் நந்நாளாக இணை பிரியாமல் இதே அந்நியோன்யத்தோடு  வளத்தோடு  வாழ வேண்டும்.

இறைவன் எல்லா நலங்களையும் அருள்வான்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

23 comments:

பாச மலர் / Paasa Malar said...

மணிவிழாக் காணும் தம்பதியருக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்..பகிர்வுக்கு நன்றி வல்லிமா..

வரலாற்று சுவடுகள் said...

இந்த சிரியவனின் வாழ்த்துக்களையும் அவர்களிடம் சேர்ப்பித்துவிடுங்கள்!

Unknown said...

மணிவிழா தம்பதியரை வணங்கி வாழ்த்துகிறோம் அம்மா.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
sury siva said...



அறுபது விழாவினையே
ஆசையாய் கொண்டாடும்
இனிய தம்பதியர் இருவருக்கும்
ஈசன் அருள் என்றும் கிட்ட
உளமாற வாழ்த்துகிறோம்

ஊரனைத்தும் உலகனைத்தும்
எத்திக்கும் தித்திக்கும்
ஏற்றமிகு நன்னாள். அந்த
ஒரு நாள் அத்திரு நாளில்
ஓடோடி வந்திடுவோம்
அஃதே எம் விருப்பமாம்.

நாளாம் நாளாம் திருநாளாம்
நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்


http://youtu.be/fZg-s_ndyNA
சுப்பு ரத்தினம்
மீனாட்சி பாட்டி.

ஸ்ரீராம். said...

எங்கள் வாழ்த்துகளும் இணைகின்றன. இன்று போல என்றும், எல்லா நலனும் பெற்று வாழ அந்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

Angel said...

துளசி அக்கா கோபால் அண்ணா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் வல்லிம்மா

கோபிநாத் said...

மணிவிழா தம்பதியருக்கு என்னோட பணிவான வணக்கங்கள் ;)

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாசமலர். நாளை அவர்கள் இருவரிடமும் வாழ்த்துகளைச் சேர்ப்பிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வரலாற்று சுவடுகள்.வாழ்த்துகள் அவர்களைச் சேரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இந்திரா ,
அவர்கள் சார்பாக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நாளை உங்களையும் மீனாட்சி அம்மாவையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். இந்த விழாவிலாவது உங்களைப் பார்க்க முடியுமா:)

வல்லிசிம்ஹன் said...

ஹலொ கோபிநாத் ,வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

அப்பாதுரை said...

வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் இங்கேயே சேர்க்கிறேன். தகவலுக்கு நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துகளை இங்கேயும் சொல்லிக் கொள்கிறேன். மணிவிழா முடிந்ததும் அதுகுறித்தும் நீங்கள் பகிர்ந்திடக் காத்திருக்கிறோம்.

கோமதி அரசு said...

மணிவிழாக் காணும் தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்.
இருவருக்கும் இறைவன்அருளால் எல்லா வளங்களும் , நலங்களும் சேர வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.

உங்களுக்கு நன்றி வல்லி அக்கா.
உங்கள் பதிவின் மூலம் அவர்களை வாழ்த்த வாய்ப்பளித்தற்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சலின், இருவரிடமும் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லிவிடுகிறேன்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை உங்கள் ,
வாழ்த்துகளையும் அங்கே சேர்த்துவிடுகிறேன்.

மாதேவி said...

துளசி கோபால் தம்பதியினருக்கு இனிய வாழ்த்துகள்.

நல்இதயங்கள் இன்றுபோல் என்றும் சிறப்பாக வாழ வாழ்த்துகின்றேன்.

Geetha Sambasivam said...

எங்கள் வாழ்த்துகளையும் தாமதமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...

Kavinaya said...

மணிவிழாத் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பணிவான வணக்கங்களும் அம்மா. பகிர்வுக்கு நன்றி.

மதுரை மீளும் 1957 பயணம் 8

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் கூகிள் படம்:)         தம்பி முரளியும் பேத்தியும் தம்பி ரங்கன். கோவில் பிரகாரம். மதுரையை நெருங்கும்...