உலகம் எங்கள் கைகளில்:) |
ஆறுவது சினம்:) |
இருந்தது.அடுத்த நிமிடம் இல்லை.
பாட்ட்டி என் ஐபாட் வேலை செய்யலை. என் சாட்
கட் ஆயிடுத்து.
பாட்டி என் சோட்டா பீம் போச்சு இது சின்னவன்.
அவன் கணினியில் யூ டியூப். பார்த்துக் கொண்டிருந்தான்..
முதல் நாள் தான் என் கைபேசி தொலைந்திருந்தது..
சமர்த்து தொலைத்தால் தேடிக் கண்டு பிடிக்கும். அசடு தொலைத்தால்
ஞே'னு முழிக்கவேண்டியதுதான்:(
வோடஃபோன் கம்பனிக்குப் போன் செய்தால் ஸாரி வி ஆர் க்ளோஸ்ட்.
நாளைக்கு வாங்கன்னுட்டாங்க.
இனி வோடஃபோன் இணைப்பை வாங்குவதில்லை என்று தீர்மானித்தேன்.
நானும் ஏர்டெல்க்கு மாறிட்டேன்.:)
செவ்வாய் அன்று ஈபிக் காரங்க கோடி வீட்டுக்கு இணைப்புக் கொடுக்கும்போது வழியில் தெமேன்னு கிடந்த எங்கள் தொலைபேசி இணைப்பையும் துண்டித்துவிட்டார்கள்.
இது முதல் தடவை இல்லை. மூன்றாவது முறை இது போல நடக்கிறது.
தரை தொலைப்பேசிகளுக்கு இப்போது மவுசு இல்லை என்பது தெரிந்த விஷயம். பூக்காரம்மாகூட காதில கைபேசியைக் கொக்கி போட்டுக் கொண்டுதான் முழம் போடறாங்க.:)
இதோ துரத்தித் த்ரத்தி நேற்று இணைப்புக் கிடைத்தது.
இந்தத் தொந்தரவுக்கு விடிவே கிடையாதா. தெரியவில்லை.
அடுத்ததா நிறைய புலம்பல்கள் இருந்தாலும் இன்னிக்கு இது
போதும்:)
நன்மைகள்
1, வேங்கையின் மைந்தன் படிக்க ஆரம்பித்தாச்சு. பக்கத்தில
தில்லானா மோஹனாம்பாள், கூடவே தி.ஜானகிராமனின் சிறுகதைத்தொகுப்புகள்.
ஹலோ ஃஎப்.எம் ரேடியோல தீபா வெங்கட்டோட வாரத்தில மூன்றுதடவையாவது பேசினது.
வாழ்க்கை ஒண்ணும் நின்னு போயிடலை சார்.!!!!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
34 comments:
தற்காலிகமாகக் காணாமல் போகும்போதுதான் ஆசுவாசமாகி சுற்றும் முற்றும் பார்க்கிறோம்:)! Break தேவைதான்!!!
நடுநடுவிலே இப்படிப் போனா தானே, நாம பாக்காம இழந்த பலதை பார்க்குறோம்...
:)))
ஹ்ம்ம். வேங்கையின் மைந்தன் நல்ல கதைதான்
இந்த 'ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும்' பாங்களே அதானா இது?!! சுற்றி நடக்கும் மற்ற விஷயங்களில் நம் கவனம் பதிய இப்படி வலுக்கட்டாய 'கட்' தேவைப்படுகிறது!!
சரியாகச் சொன்னீர்கள்.காணாமல் போகும்போதுதான் புத்தகங்கள் அழைப்பது நமக்குத் தெரிகின்றது.
கணனிவேலைசெய்யாதபோதுதான் படிக்காமல் கிடந்த மாதஇதழ்கள் வாசித்து முடித்தேன்:))
ஆமாம் ராமலக்ஷ்மி.வாங்க்கி வைத்திருக்கும் புத்தகங்களும் அழைக்கக் காரணம்
குழந்தைகள் பங்களூரில் இருப்பதால் கிடைத்த நேரம்.
கண்டிப்பாக ப்ரேக் தேவை:)
படிக்கும் போது கிடைத்த இன்பம் அளவிட முடி
அதேதான் ஸ்ரீராம்.முன்பெல்லாம் தொலைபேசி இல்லை என்றால்
வெகுவாக அவஸ்தைப் படுவேன்.
இப்போது அப்படியில்லை.
ஏதாவது ஒரு வழியில் செய்தி உன்னை வந்து சேரும் என்று தம்பி
சொன்னதும் கொஞ்சம் உண்மை புரிந்தது.:)
வரணும் கார்த்திக்.அறுபதுகளில் வந்த அகிலனின் தொடர்.
அந்தக் கயல்விழிக்காக எவ்வளவு
வேதனைப் பட்டிருப்பேன்! இந்த மாதிரி திணிக்கப்பட்ட
ப்ரேக்.....வருந்தாத தடங்கல் இயந்திரத்தனமான
வாழ்விலிருந்து என்னை விடுவித்தது.
வருகைக்கு வனனறி மா.
ஆமாம் வெங்கட். .நன்றாக அனுபவித்தேன். இனிமேலும் தொடருவேன்.
வேங்கையின் மைந்தன் ! - சலிப்பூட்டாத நாவல் ! இப்போது Airtel Connection எவ்வாறு உள்ளது ?
வரணும் தனபாலன்.
ஏர்டெல் நன்றாகவே வேலை செய்கிறது.
ஆமாம் அது நல்ல நாவல்.இன்னும் கல்கியில் வந்த அட்டைப்படம் நினைவில் இருக்கிறது. நன்றிமா.
//அறுபதுகளில் வந்த அகிலனின் தொடர்.
அந்தக் கயல்விழிக்காக எவ்வளவு//
padichiruken. marubadiyum padikkanum
வேங்கையின் மைந்தன் - என்ன கதை?
எனக்குத் தெரிந்த ஒருவர் செல்போன் கார் டிவி கம்ப்யூடர் எதுவும் இல்லாம வருடத்தில் ஒரு வாரம் as a principle செலவழிக்கிறார்.
அப்பாதுரை, எம்ஜிஆர், மு.அ.ஆனதும் நடிச்ச கடைசிப் படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்," கதை இந்தக் கதை தான். :)))))))
கதையிலே கயல்விழிக்குத் தான் முன்னுரிமை; அதோடு மூலக்கதையில் கல்கியில் வந்தப்போ, கயல்விழி தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு செத்திருப்பாள். ஆனால் கதை புத்தகமாக வந்தபோது கயல்விழியையும் பாமினி இளவரசியையும் சேர்த்துக் கல்யாணம் பண்ணினதாச் சொல்லி இருந்தாங்க. அந்தப் பதிப்பு இப்போக் கிடைக்கிறதில்லை.
இப்போ லேடஸ்டா ஹூஸ்டனில் பெப்ரவரி மாதம் மீனாக்ஷி கோயில் நூலகத்திலிருந்து எடுத்து வந்து படிச்சதில், கயல்விழி, தீ வைத்துக்கொண்டதையும், இறந்ததையும் கொஞ்சம் மறைமுகமாச் சொல்லி இருந்தாங்க. சில பத்திகள் எடிட்டிங் என்ற பெயரிலே நீக்கப் பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.
ஹிஹிஹி, இப்போ வல்லிக்கு,
வேங்கையின் மைந்தன், கல்கி பைன்டிங்கா? வாங்கினதா? ம்ம்ம்ம்ம்ம்ம், ஒரு காலத்தில் அகிலன், ஜெகசிற்பியன், சான்டில்யன் என விழுந்து விழுந்து படிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். இப்போவும் ஹூஸ்டனில் கயல்விழி படிச்சேன். வாரம் ஒரு நாள் கணினி இல்லாமல் இருக்கப் பழகிண்டால் எல்லாம் சரியாப் போயிடும். நான் சில சமயம் மின்சாரம், இணையம் எல்லாம் இருந்தாலும் கணினிப் பக்கம் போகாமல் அன்னிக்கு முழுதும் புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பதுனு வைச்சுப்பேன்.
வேங்கையின் மைந்தன் தொடர் வேற. கயல் விழி நாவல் வேற. தப்பாக எழுதிவிட்டேன். கார்த்திக்.
வேங்கையின் மைந்தன், இப்போது படிக்க ஆரம்பித்ததும் தான் நினைவுக்கு வநது.:(
ஹிஹிஹி, ஆமா இல்ல?? நானும் பின்னூட்டத்தைப் பார்த்துட்டுக் கயல்விழிக்குக் கதை எழுதிட்டு, இப்போ அ.வ.சி. மூஞ்சியை மூடிக்க என்ன இருக்குனு தேடிட்டு இருக்கேன். அதனால் என்ன? வேங்கையின் மைந்தன் கதையையும் எழுதிட்டாப் போச்சு!
ராஜேந்திர சோழனின் காலத்து நாவல். வந்தியத் தேவன் இதிலே வயசான தாத்தாவாக வரதாலே, அவ்வளவாப் பிடிக்காது. :))))) இதிலேயும் வழக்கமான அகிலன் கதைகளைப் போல் இரு கதாநாயகிகள். கடைசியில் ஜெயிப்பது யார்னு சொல்லணுமா? இலங்கை இளவரசி ரோகிணி செத்துப் போக, குந்தவையால் வளர்க்கப்பட்ட ராஜேந்திர சோழனின் பெண் கதாநாயகனை மணந்து கொள்வாள். கதாநாயகன் கொடும்பாளூர் இளவரசனோ?? மதுரையிலிருந்து வரச்சே திருச்சி பேருந்து கொடும்பாளூர் வழியா வரச்சே, வேங்கையின் மைந்தனையும், பொன்னியின் செல்வனையும் தான் நினைச்சுண்டேன். :)))) முக்கியமா வானதி.
வானதிராஜபுரமா? அல்லது வாணாதிராஜபுரமானு எனக்குள்ளே பட்டிமன்றமும் நடந்தது! :))))
/குழந்தைகள் பங்களூரில் இருப்பதால் /
நீங்கள் வரவில்லையா?
வரணும் துரை. பழைய வாட்களில் மாதத்துக்கு ஒரு முறை விளக்கெண்ணெய்
குடிக்கக் கொடுப்பார்கள்.
வயிற்று சுத்தம் ஆகும். அதுபோல உங்கள் நண்பர் செய்வதும் நல்லதே
நான் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன் பா.
வேங்கையின் மைந்தன் அகிலனின் சாஹித்ய அகாடமி விருது பெற்ற நாவல்.
கயல்விழி வேறு கதை. அதில் இரண்டு கதானாயகிகளில் ஒருத்தி கயல்விழி.
காதலில் வெற்றி பெறுவது இன்னொருவர்..
இல்லைமா ராமலக்ஷ்மி. எங்கள் இருவர் டிக்கட்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டோம். என்
உடல் நிலை அத்தனை பயணங்களையும் தாங்கும் படி இல்லை.
ரத்த அழுத்தம் மேல கீழே என்று விளையாடுகிறது:)
இன்னோரு தடவை பார்க்கலாம்னு சிங்கம் உத்தரவு போட்டுவிட்டார்.:)
வரணும் மாதேவி. அப்படியே உண்மை நீங்கள் சொல்வது.
எவ்வளவு படிப்பேன் முன்னால்.!!! இப்போது இணையமும் , தொலைக்காட்சியும் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
இப்போது மோஹனாம்பாள் மனதில் இடம் பிடித்துவிட்டாள்.:)
உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். ‘இன்னொரு’ தடவை சீக்கிரமா வரட்டும்:)!
சரியாகிவிடும். நன்றி மா.
வீட்டில் சீர்திருத்தும் கட்டுமானம் நடந்து முடிந்துவிட்டது. இனி நிம்மதியாக இருக்கலாம்.(!)
என்ன சர்க்கரை மட்டும் விட்டிருந்தேன். இனி உப்பையும் விடவேண்டியதுதான். விட்டாச்சு:)
நலம்பெற பெருமாளை பிரார்த்திக்கிறேன் அம்மா நன்றாக ஓய்வு எடுத்து உடல்நலனைப் பார்த்துக்கோங்க அம்மா.
வல்லி, என்னோட பின்னூட்டங்கள் எல்லாம் வரலை போலிருக்கே? முடிஞ்சப்போ உடம்பு சரியானதும் மெதுவாப் பதிவை ஒரு குலுக்கு குலுக்கிப் பாருங்க. அசடு வழிஞ்சிருப்பேன். :)))))
ஆனால் பாருங்க, ஃபாலோ அப் கமெண்ட்ஸ் மட்டும் வருது. :)))))
இப்படிக் கிடைக்கும் நேரங்கள் பாலைவனத்துப் பசுஞ்சோலைகள்!!!!!
மனசு அலையாம இருக்கக் கொஞ்சநேரம் ஆகும்தான். ஆனால்..... லயிப்போடு வேற விஷயத்தில் ஈடுபடலாம்:-)))))
வரணும் இந்திரா.சரியாகிவிடுமம்மா.
வெளியில் இத்தனை தொந்தரவுகள் வரும்போது அழுத்தம் தானே ஏறுகிறது.
நிவர்த்தி கண்ல பட்டதும் தானே சரியாகிவிடுகிறது.
இத்தனைக்கும் இவர் நிறைய வீட்டு விஷயங்களைப் பார்த்துக் கொள்வார்.
மிக மிக நன்றி மா.
வரணும்பா துளசி.கண்டிப்பா சோலை தான்.பதிப்பு பழசாகிவிட்டதால் எழுத்துகள் சரியாகப் புலப்படாவிட்டாலும் விடாமல் படித்துவிட்டேன். இன்னோரு பாகம் பாக்கி இருக்கிறது. மோஹனா கஷ்டப்படுவாளேன்னு அதைப் படிக்கப் பயமாக இருக்கிறது:(
//மோஹனா கஷ்டப்படுவாளேன்னு அதைப் படிக்கப் பயமாக இருக்கிறது:(//
ஏற்கெனவே படித்த கதைகளில் இது ஒரு சௌகர்யம் என்றும் சொல்லலாம். மீள்படிப்பின்போது விரும்பும் பகுதிகளை மட்டும் படிக்கலாம்! நான் அப்படிச் செய்வேன். :))
அன்பு கீதா. இப்போதுதான் உங்கள் பின்னூட்டங்கள் வந்தன.
நன்றி நன்றி. அந்தக் கயல் விழி நெருப்பில் விழுந்ததுதான் ஒரிஜினல் கதை.
இந்த வேங்கையின் மைந்தன் இளங்கோ இருவரையும் மணக்கிறான். அருண்மொழி மங்கை+ரோஹிணி. எனக்கும் வந்தியத்தேவர் தாத்தாவாக வருவது எனக்கும் ஜீரணிக்க முடியவில்லை:(
கயல்விழி பைண்ட் செய்த புத்தகம் யாரோ எடுத்துப் போய்விட்டார்கள்.
ஆமாம் ஸ்ரீராம். எனக்கும் அதேதான். அதுவும் இந்தக் கொத்தமங்கலம் இருக்காரே....டூ மச். எழுத்திலியே அழ வைத்துவிடுவார். என்ன தமிழ்ப்பா இது.
நலம்தானே அம்மா மீண்டும் உங்கள் பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
இணையமும், தொலைகாட்சியும் தான் புத்தகம் படிப்பதை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டன. இன்னும் படிப்பதில் ஆர்வம் குறையவில்லை.
இடைஇடையே படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
Post a Comment