தாயார் என்ற பெயருக்குப் பெருமை சேர்த்த எங்கள் அம்மா பிறந்த நாள் |
எங்க வீட்டுக்காரருக்கு, 47 வருடங்கள் என்னுடன் நல்லகுப்பை கொட்டியதற்காக:) பெப்ரவரி 4ஆம் தேதிக்கு இன்றே வாழ்த்துகள் நன்றி சிங்கமே. |
நாச்சியார் பதிவரின் திருமணநாள் இனி எல்லாம் சுகமே!!! | உறவுகள் தொடர்கதை . | பிரிவுகள் சிறுகதை. |
Add caption |
Add caption |
31 comments:
பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துகள்..
கடைசி படத்தை ரொம்ப ரசிச்சேன்.. அழகான பொம்மை மாதிரி இருக்கீங்க வல்லிம்மா :-)))
வாங்கப்பா சாரல். அப்போ 44கேஜி தாஜ் மஹால். இப்ப 74 கெஜி பிர்லா மந்திர்.:)
ரொம்ப நன்றி மா.
கண்கள் பனித்தன. இதயம் நிறைந்தது.
வாய் பேச முடியாமல்................ நன்றியில்.......
அப்பா, அம்மாவுக்கு வணக்கங்கள்.
துளசி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், சாருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.
Very many happy returns !!
துளசிமா, இதுல என்ன இருக்கு.
இது நாம் மனசால செய்யற நல்ல காரியம்.
ஆனா ஒண்ணு பதிவர்களையும் தப்பா விகடன்ல எழுதினாங்களே யாரோ ஒருத்தர்.அதான்பா வருத்தம்.
நன்றி கோமதி.உங்கள் குடும்பமும் வளமுடன் வாழ என் வாழ்த்துகள்.
தான்க்ஸ் ஜயஷ்ரீ:)
பாட்டிக்கு (உங்கள் அம்மாவிற்கு) பிறந்த நாள் வணக்கங்கள்!
தாத்தாவிற்கு (உங்கள் அப்பாவிற்கு) வணக்கங்கள்!
துளசி அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
சிங்கம் ஐயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
உங்கள் இருவருக்கும் மணநாள் வாழ்த்துகள்!
:-)
அடடா வரணும் குமரன். அம்மாவுக்குக் கல்யாண நாள் என்றதும் பிள்ளை வந்தாச்சு..!!
உங்கள் வாழ்த்துகளை தாத்தாவும் பாட்டியும் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள்.
இந்தத் தாத்தா பாட்டியின் ஆசிகளை எங்கள் பேத்திக்கும் பேரனுக்கும் அனுப்புகிறோம்.
பிறந்த நாள் திருமண நாள் வாழ்த்துக்கள் அனைவர்க்கும்..:))
நன்றி அம்மா.
வாங்க தேன். பிறந்த நாள் வாழ்த்துகளை அவங்க அவங்களுக்கு அனுப்பிட்டேன். திருமண நாள் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டாச்சு.:)
அன்புக்கு மிக மிக நன்றி மா.
பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துகள்... Lovely pictures, thanks for sharing வல்லிம்மா...
அம்மா படம் அருமை...அவருக்கு என் வணக்கங்கள்.
தாத்தாவுக்கும் வணக்கங்கள்.
துள்சிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
சிங்கத்துக்கும் சிங்கிக்கும் அன்பான மணநாள் வாழ்த்துக்கள்!!!!
ஹப்பா!!!ஒரே மாதத்தில் எத்தனை
வணங்கும் வாழ்த்தும் வைபவங்கள்!!!
வாழ்த்துகளும் வணக்கங்களும், அனைவருக்கும், வல்லிம்மா.
வரணும் புவனா. வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி.
எல்லோருடைய வாழ்வும் வளமா இருக்கணும்.
வாங்கப்பா நானானி.
ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப எ ரொம்ப நன்றி மா.
வாங்க மீனா.
இந்த வாழ்த்துகளைப் பொக்கிஷமாகப் போற்றுகிறேன்,.
உளமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் அம்மாவின் முகத்தில் திகைக்க வைக்கும் களை! அருமையான புகைப்படம். வாய் திறவா புன்னகையில் முகம் முழுதும் பிரகாசிக்கிறது. உதடுகளின் நுனியில் புன்னகை தெரியுது பாருங்கள் - அதனால் முகத்தில் ஒளியும் தன்னம்பிக்கையும் தெரிகிறது பாருங்கள். இந்தக் கலை மறைந்துவிட்டதோ? ஒரு வேளை உண்மையிலேயே அவர்களுக்கு உள்ளுக்குள் புன்னகைக்கத் தெரிந்திருந்ததோ? இன்றைக்கு நான் பல் எல்லாம் காட்டிச் சிரித்தாலும் பல சமயம் வெளிப்புன்னகை போலி போல் தோன்றுகிறது.
என்ன.. பெப் மாசம் மொத்தமும் குடும்பத்துல குத்தகை எடுத்திட்டீங்களா? (அது என்ன, நல்ல குப்பை?)
பின்னூட்ட அரசியா? சொல்றதோ சொல்றோம், நாளைய முதல்வர்னு சொல்லியிருக்கக் கூடாதோ? (அப்பல்லாம் கொஞ்சம் ஏமாந்தா நாளைய முதல்வர்னு கோஷம் போட்டுறுவாங்க - கலைஞர் அதையெல்லாம் ஒடுக்கிட்டாரோ?) துளசி கோபாலுக்கும் வாழ்த்துக்கள்!
துளசி டீச்சருக்கும்,தங்களின் சிங்கத்துக்கும் பிறந்த்தநாள் வாழ்த்துக்கள்,தங்களுக்கு,சாருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் மற்றும் தாத்தா, பாட்டிக்கு வணக்கங்கள் வல்லிம்மா:))))
அன்பு துரை ,இன்னிக்கு நீங்க அம்மாவை விவரித்த விதம் என்னை அப்படியே ஆழ்த்திவிட்டது உணர்ச்சிக்கடலில்.
உண்மையிலியே அதிர்ந்து பேசாத லக்ஷ்மி அவர். எல்லா முடிவும் எடுக்கத்தெரியும், இருந்தாலும் அப்பா சொல்லித்தான் செய்வார். நல்ல வேளையாக அப்பா முந்திக் கொண்டார். அம்மா அவரிக் கவனித்துக் கொண்டது போல யாராலும் பார்த்துக் கொள்ளமுடியாது. இப்பொழுது இருவரும் நான் எழுதும் வார்த்தைகளை ரசித்துச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
துளசி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பதிவுலக ராணிதான்.:) நன்றிம்மா.உங்கள் எழுத்தின் லாவண்யம் எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது.!
அனைவருக்கும் வாழ்த்துகள் வல்லிம்மாவுக்கும் வாழ்த்துகள்
//அப்போ 44கேஜி தாஜ் மஹால். இப்ப 74 கெஜி பிர்லா மந்திர்.:)//
ஹஹஹா சுவாரஸ்யமான பதிலை ரசித்தேன்..!
சுமதி வாங்கப்பா. துளசிக்கு ஐந்தாம் தேதி வாழ்த்துகள் தனி மடலில் வந்து சேரும்னு நினைக்கிறேன்.
எங்களுக்கும் வாழ்த்துகள் உரிய நாளில் வந்துவிட்டது . மிகவும் நன்றிப்பா.
அன்பு துரை, நல்ல குப்பைன்னால்
பூமிக்குக் கேடில்லாத குப்பை.
மத்தவா மனசுக்கு(அதிகம்) துன்பம் தராத குப்பை.
45 வருஷம் வந்துட்டோம். சண்டையும் உண்டு சமாதானமும் உண்டு.அவர் தப்பா ஒரு வார்த்தை பேச மாட்டார். நான் பேசத் தெரியாமல் சொல்ல வந்ததை நேரச் சொல்லாமல் உளறுவேன்.
அவ்வளவுதான்.:)
அன்பு வசந்த், தான்க்ஸ் பா.
நேரம் கிடைத்தா நாமளும் கவி பாடுவோம் இல்லையா:)
இனிய வாழ்த்துக்கள்!!!
திருமண நாள் வாழ்த்துக்கள்.
துளசி மேடத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
ம்ம்ம்ம், இதுவும் மீள் பதிவா> இது போட்டதும் தெரியலை. அனைவருக்கும் வாழ்த்துகள். உங்கள் அபார ஞாபக சக்தியைப் பாராட்டியே ஆகணும். இந்தப் படங்கள் அனைத்தும் ஏற்கெனவே பார்த்திருக்கேன். :)
Post a Comment