m
Blog Archive
Friday, July 31, 2009
Saturday, July 25, 2009
கொண்டாடுவோம் ஆடிப்பூரம்!
கிளியே
எங்கள் வீட்டு அக்கார வடிசில்
காத்திருந்து பார்த்தேன்.
எல்லாத்தேரும் தொலைக்காட்சியில் வலம் வருகிறதே ஆண்டாளும் வருவாளோ என்று. எனக்குக் காணக்கிடைக்கவில்லை.
அவள் கையில் தொற்றிக் கொள்ளும் கிளி செய்யும் முறை மட்டும் தினமலரில் வெளியிட்டிருந்தார்கள்.
1954 ஆம் வருடம் அவளைக் கடைசியாகப் பார்த்த போது இருந்த அழகே இன்னும் கண்ணில் இருக்கிறது
ஆறு வயதில் என்ன புரிந்திருக்கும்!!
பார்க்கலாம். எப்போது அழைக்கிறாள் என்று;))
ஆண்டாளைப் பதிவிட்ட ரவி கண்ணபிரான், ராகவ் இவர்களுக்கு மிகுந்த நன்றி. காணக்கிடைக்காத அற்புதக் காட்சிகளைப் படங்களாகக் காணும் பாக்கியம் தந்தார்கள்.
ராகவின் அத்தை தான் என்ன அழகு.
அவர்கள் குரலும் ஆண்டாள் கோலமும் மனதை நிறைத்தது. நன்றி.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Tuesday, July 21, 2009
ஆண்டவளும் மாமுனியும்
ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ராமானுஜர்
3,
3,கள்ளழகர் சுந்தரராஜன்
4,
ஸ்ரீ விஷ்ணுசித்தர்
ஸ்ரீ விஷ்ணுசித்தர்
ஆடி வந்துவிட்டது,. அதை அடுத்து
மயிலையில் உள்ள அத்தனை அம்மன் சன்னிதானங்களிலும்,
அலங்கார வளைவுகள்,பாலபிஷேகங்கள், ஞயிறு, செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மனை வேண்டிப் பொங்கல் இடுவதும், தீமிதி நடப்பதும்,அம்மன் அலங்காரங்கள் செய்து கொண்டு அழகான அருள் புன்னகையோடு வீதி வலம் அழகும்,
எங்கள் திண்டுக்கல்லில் நான் இளவயதில் பார்த்த ரசித்த அனுபவங்களை
நினைக்க வைக்கின்றன.
அதுவல்ல இந்தப் பதிவு. பயப்பட வேண்டாம்.;;;;;)))))
இது நம் ஆண்டாள்,கோதை,சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,அரங்கனின் அந்தரங்கத்தைக் கண்டவள், பெரியாழ்வார் பெற்றுக்கொண்ட பொக்கிஷம், பெரும்பூதூர் மாமுனி ஸ்ரீராமானுஜர்,உடையவர்,எம்பெருமானார்
இரூவரையும் பற்றிய பழைய செய்தி.
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தனம்,
கல்பவல்லி,
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம்.
சாக்ஷாத் க்ஷமாம் கருணயாம் கமலாபி வான்யாம்
கோதாம் அனன்ய சரண்ய:சரணம் பிரபத்யே.//
ஸ்வாமி தேசிகன் கோதையை உணர்ந்து உருகும் பாடல்.
அவளெ கருணை.
அவளே மன்னிப்பவள்,
அவளெ ரட்சிப்பவள்.
ஹரியின் அன்பான இதயத்தில் இடம் பிடித்தவள் (கொஞ்ச பாடா பட்டாள்.:(( )
அவளைச் சரண் புகுவதில் சந்தோஷத்தத் தவிர வேறு என்ன கிடைக்கும்!!
இதெல்லாம் ஆண்டாளை நினைக்க ஆரம்பிக்கும் போதே வரும் நினைவுகள்.
இந்தப் பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் //இந்த வரி மிகவும் பிடித்தது.
ஆண்டாள் ஜீயர் என்றழைக்கப் பட்ட எம்பெருமான்,உடையவர் ஸ்ரிராமானுஜர்,
ஆண்டாள் நேர்ந்து கொண்ட நூறு தடா சர்க்கரைப் பொங்கலையும் வெண்ணெய் ஒழுக,அழகர்மலைக் கண்ணனுக்கு,கள்வனுக்குச் செய்து சம்ர்ப்பித்தார் அல்லவா.
இன்று காலைத் திடிரென்று ஒரு நினைவு.
இந்த ராமானுஜர் அந்த ராமானுஜன் தானே.
அந்த இலக்குவனின் அவதாரம் தானே.
அதே ஆதிசேஷன் அம்சம்தானே.
ஆண்டாளுக்காக இந்த நற்செயலை அவர் மேற்கொண்டார் என்றால், அவர்களுக்குள் பூர்வ ஜன்ம பந்தம் இருந்திருக்கிறது.
அவளோ பூமாதேவி.
ராமனின் மனைவியாகவும் இருந்தவள்.
அவனோ திருமால் தொண்டன், இலக்குவனாக வந்து ராமனான அண்ணணுக்கும் , சீதையான அண்ணன் மனைவிக்கும் தொண்டனாக இருந்த கைங்கர்யபரன்.
அதனால் ஸ்ரீராமானுஜர் தனக்கு முன் பிறந்த ஸ்ரீகோதையின் வாக்கைக் காத்ததில் அதிசயமே இல்லை. அதுவும் தாயாரிடம் கேட்ட சொல்லைத்
தயங்காமல் நிறைவேற்றித்
தந்தையிடம் கொடுத்து வேண்டுதலைப் பூர்த்தி செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
வரும் 25 ஆம் தேதி ஆடிப்பூரம் கண்டருளும் தேவிக்கும்,
அவளால் அண்ணா என்று விளிக்கப்பட்ட ஸ்ரீராமனுஜருக்கும்
அக்கார அடிசலைச் சுவீகரித்த அழகனுக்கும்,
அடியார்களுக்கும் பல்லாண்டு பாடுவோமா.
Sunday, July 12, 2009
அணுகமுடியாத ஆலமரம்.
ஆலமரத்துக்கு, அடையாறுக்கு ஆலாப் பறந்தாலும் பார்க்க முடியவில்லை.
நேரங்கள் மாறிவிட்டன.
பக்கத்தில் போக முடியாதபடி கயிறுகள் வேறு கட்டி வைத்திருக்கிறார்கள்.
20 வருடத்துக்கு முன் பார்த்த மரம் கண்கொள்ளாத
அளவில் ... பெரிய மேடையில் உட்கார்ந்து நிழலில் காற்றையும், பறவைகள் ஒலியோடு அனுபவித்துக் கொண்டு
அளவில் ... பெரிய அளவில் நிழல்களுடன் பேசியபடி இருப்போம்.:)
இருந்த விழுதுகளை மட்டும் படங்கள் எடுத்து இந்தப் பதிவில்
இட்டிருக்கிறேன்.
Thursday, July 02, 2009
சில காட்சிகள்..தெற்கு வாழும் சித்திரம்
கிளிகள் வந்து குவிந்தது போல மழலைப் பட்டளம் ஒன்று வீட்டில் இறங்கி இருக்கிறது,.
வெய்யில் தாளவில்லை. சில பல காட்சிகளையாவது அவர்களுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று,
ஒரு மாலை நேரம் கிழக்குக் கடற்கரைச் சாலைத் தக்ஷின் சித்ராவுக்கு அழைத்துச் சென்றோம்.
மாலை 6 மணிக்கு அந்தக் கண்காட்சி கிராமத்தை மூடி விடுவார்களாம்.
அதனால் எங்களுக்குக் காணக் கிடைத்தது, தமிழ்நாட்டு,கேரள,செட்டினாடு வீடுகளும் சுற்றுப் புறங்களும் தான்.
அதுவே மனம் நிறைந்த காட்சிகளாக இருந்தாலும் முழுவதும் பார்க்க முடியவில்லையே என்றும் வருத்தமாக இருந்தது.
சிறிய துண்டுதான் என்றாலும் அல்வாவின் இனிப்பு சிறப்புதானே.
அழகு வளையல்கள், பம்பரங்கள்,மண் சட்டிகள் எல்லாம் வாங்கிக் கொண்டோம்.
நிழலில் மணலில் விளையாடவும் நேரம் கிடைத்தது பேரனுக்கும் பேத்திக்கும்.
அங்கு எடுத்த சில துளி இன்பங்களைப் படங்களாகக் கொடுக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)