கிளியே
எங்கள் வீட்டு அக்கார வடிசில்
காத்திருந்து பார்த்தேன்.
எல்லாத்தேரும் தொலைக்காட்சியில் வலம் வருகிறதே ஆண்டாளும் வருவாளோ என்று. எனக்குக் காணக்கிடைக்கவில்லை.
அவள் கையில் தொற்றிக் கொள்ளும் கிளி செய்யும் முறை மட்டும் தினமலரில் வெளியிட்டிருந்தார்கள்.
1954 ஆம் வருடம் அவளைக் கடைசியாகப் பார்த்த போது இருந்த அழகே இன்னும் கண்ணில் இருக்கிறது
ஆறு வயதில் என்ன புரிந்திருக்கும்!!
பார்க்கலாம். எப்போது அழைக்கிறாள் என்று;))
ஆண்டாளைப் பதிவிட்ட ரவி கண்ணபிரான், ராகவ் இவர்களுக்கு மிகுந்த நன்றி. காணக்கிடைக்காத அற்புதக் காட்சிகளைப் படங்களாகக் காணும் பாக்கியம் தந்தார்கள்.
ராகவின் அத்தை தான் என்ன அழகு.
அவர்கள் குரலும் ஆண்டாள் கோலமும் மனதை நிறைத்தது. நன்றி.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
8 comments:
எல்லோரும் வாழ வேண்டும்.
நாட்டில் எல்லோரும் சீரோடும், சிறப்போடும் மகிழ்ச்சியோடும் என்றென்றும் நன்றாக வாழ வேண்டும்.
நன்றி துபாய் ராஜா. அடுத்த தடவை நாங்கள் அங்கு வரும் நேரம் சந்திக்க முயற்சிக்கலாம்.
ஆண்டாளின் கைக் கிளிக்குச் சுகம் என்று பெயராம்.
அதை மரவள்ளிக் கிழங்கு இலை கொண்டும் ,குச்சிகள் கொண்டும்
செய்வார்கள். மூக்கு சிவப்புக்கு என்ன செய்வார்களோ தெரியவில்லை.
தினம் ஒரு கிளி ஆண்டாளுக்கு:)
சுகமோ சுகம்!!!!
ஒரு அஞ்சுமாசம் முன்புதான் பார்த்துட்டு வந்தேன். தினக்கிளியைக் கவனிக்காமப் பராக்கு பார்த்துக்கிட்டு இருந்தேன். முகத்தைவிட்டுக் கண்ணை எடுக்க முடியலைப்பா.
ஆஹா.... அக்காரவடிசலை மிஸ் பண்ணிட்டேனே..... ஒரு தடான்னதும் ஓசைப்படாம இருந்துட்டீங்களா? :-))))
வழக்கம் போல அருமையான பதிவு.
விருதாஜலம் சென்றிருந்தேன்...அங்கே கோதை கோபாலனுடன் ஆடும் ஊஞ்சல் பார்க்க கிடைத்தது...இங்கு உங்கள் பதிவிலும் கோபாலனூடன் சேர்ந்த நாச்சியார் அருமை.
வாங்கப்பா துளசி.
தூது போச்சோ என்னவோ.;)
வீட்டு வேலைல மூழ்கிட்டே பதிவும் போட்டதுக்கு நன்னின்ங்கோவ்.
தடா சொல்லலியே
வரணும் மௌலி.
விருத்தசலம் போனீங்களா.
அந்தப் படங்கள் பதிவில் வருமா..போடுங்கள் படிக்கிறேன் பார்க்கிறேன்.
எங்கள் ஊரில் மதுரையிலிருந்து வரும்
வைகை டீவி மூலம் ஆண்டாள் தேர்
பார்த்தோம், ரங்கமன்னாருடன் ஆண்டாள்
வந்தது கண்கொள்ளாக் காட்சி.
Post a Comment