ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ராமானுஜர்
3,
3,கள்ளழகர் சுந்தரராஜன்
4,
ஸ்ரீ விஷ்ணுசித்தர்
ஸ்ரீ விஷ்ணுசித்தர்
ஆடி வந்துவிட்டது,. அதை அடுத்து
மயிலையில் உள்ள அத்தனை அம்மன் சன்னிதானங்களிலும்,
அலங்கார வளைவுகள்,பாலபிஷேகங்கள், ஞயிறு, செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மனை வேண்டிப் பொங்கல் இடுவதும், தீமிதி நடப்பதும்,அம்மன் அலங்காரங்கள் செய்து கொண்டு அழகான அருள் புன்னகையோடு வீதி வலம் அழகும்,
எங்கள் திண்டுக்கல்லில் நான் இளவயதில் பார்த்த ரசித்த அனுபவங்களை
நினைக்க வைக்கின்றன.
அதுவல்ல இந்தப் பதிவு. பயப்பட வேண்டாம்.;;;;;)))))
இது நம் ஆண்டாள்,கோதை,சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,அரங்கனின் அந்தரங்கத்தைக் கண்டவள், பெரியாழ்வார் பெற்றுக்கொண்ட பொக்கிஷம், பெரும்பூதூர் மாமுனி ஸ்ரீராமானுஜர்,உடையவர்,எம்பெருமானார்
இரூவரையும் பற்றிய பழைய செய்தி.
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தனம்,
கல்பவல்லி,
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம்.
சாக்ஷாத் க்ஷமாம் கருணயாம் கமலாபி வான்யாம்
கோதாம் அனன்ய சரண்ய:சரணம் பிரபத்யே.//
ஸ்வாமி தேசிகன் கோதையை உணர்ந்து உருகும் பாடல்.
அவளெ கருணை.
அவளே மன்னிப்பவள்,
அவளெ ரட்சிப்பவள்.
ஹரியின் அன்பான இதயத்தில் இடம் பிடித்தவள் (கொஞ்ச பாடா பட்டாள்.:(( )
அவளைச் சரண் புகுவதில் சந்தோஷத்தத் தவிர வேறு என்ன கிடைக்கும்!!
இதெல்லாம் ஆண்டாளை நினைக்க ஆரம்பிக்கும் போதே வரும் நினைவுகள்.
இந்தப் பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் //இந்த வரி மிகவும் பிடித்தது.
ஆண்டாள் ஜீயர் என்றழைக்கப் பட்ட எம்பெருமான்,உடையவர் ஸ்ரிராமானுஜர்,
ஆண்டாள் நேர்ந்து கொண்ட நூறு தடா சர்க்கரைப் பொங்கலையும் வெண்ணெய் ஒழுக,அழகர்மலைக் கண்ணனுக்கு,கள்வனுக்குச் செய்து சம்ர்ப்பித்தார் அல்லவா.
இன்று காலைத் திடிரென்று ஒரு நினைவு.
இந்த ராமானுஜர் அந்த ராமானுஜன் தானே.
அந்த இலக்குவனின் அவதாரம் தானே.
அதே ஆதிசேஷன் அம்சம்தானே.
ஆண்டாளுக்காக இந்த நற்செயலை அவர் மேற்கொண்டார் என்றால், அவர்களுக்குள் பூர்வ ஜன்ம பந்தம் இருந்திருக்கிறது.
அவளோ பூமாதேவி.
ராமனின் மனைவியாகவும் இருந்தவள்.
அவனோ திருமால் தொண்டன், இலக்குவனாக வந்து ராமனான அண்ணணுக்கும் , சீதையான அண்ணன் மனைவிக்கும் தொண்டனாக இருந்த கைங்கர்யபரன்.
அதனால் ஸ்ரீராமானுஜர் தனக்கு முன் பிறந்த ஸ்ரீகோதையின் வாக்கைக் காத்ததில் அதிசயமே இல்லை. அதுவும் தாயாரிடம் கேட்ட சொல்லைத்
தயங்காமல் நிறைவேற்றித்
தந்தையிடம் கொடுத்து வேண்டுதலைப் பூர்த்தி செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
வரும் 25 ஆம் தேதி ஆடிப்பூரம் கண்டருளும் தேவிக்கும்,
அவளால் அண்ணா என்று விளிக்கப்பட்ட ஸ்ரீராமனுஜருக்கும்
அக்கார அடிசலைச் சுவீகரித்த அழகனுக்கும்,
அடியார்களுக்கும் பல்லாண்டு பாடுவோமா.
15 comments:
எனக்கு ஒரே ஒரு தடா அக்காரவடிசில் போதும்ப்பா:-)
ஆமாம்....மணவாளமுனிகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஆஹா.. எங்க கோதை நாச்சியார் பற்றிய பதிவா.. பிரமாதம்.. அதிலும் ஆண்டாள் உருகி உருகிப் பாடிய அழகர்மலையான் (போட்டோ எந்த ஊர் அழகர் ?), ஸ்வாமி இராமானுசர்.. பட்டர்பிரான், மற்றும் ஆண்டாளின் திருப்பாவையைப் போல் ஆனால் அவள் பாடியதை விட ஒரு பாடல் குறைவாக 29 பாடல் பாடிய ஸ்ரீமத் நிகமாந்த மஹா தேசிகர் என அனைவரையும் ஒரே பதிவில் கொண்டு வந்துட்டீங்க..
நன்றி.
துளசி,
அவர் பெரிய சமுத்திரமாச்சே. ஸ்ரீமன் நாராயணன் ஆரம்பித்து
மணவாளமாமுனியுடன் ஆச்சார்யர்கள் பரம்பரை.
அதற்கப்புறம் வைஷ்ணவத்தைப் பரப்பிய
ஸ்ரீராமானுஜர் அவர்கள் எல்லோரும்.
முனிகள் ரங்கநாதனுக்கே குரு என்று அங்கிகரிக்கப்பட்டு, ஸ்ரீரங்கநாதரே அவர் மேல் ஒரு தனியன் சொல்லி இருக்கிறார்.
தனியன் என்பது அந்த அந்த ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் சிறப்பித்துச் சொல்லும் பாடல்கள் என்பது என் நினைப்பு.
வரணும் ராகவ்,
அவள் பெருமை சொல்லி மாளுமா. ஒரு சின்ன நினைப்பு, நன்றியுடன் பதிவிடலாம்,
எப்பேர்ப்பட்ட தாய் அவள்.
படங்கள் வரிசைப்படி,
கோதையும்,
ராமானுஜரும்,
தோளழகன் சுந்தரபாஹூ அழகர் மலைக் கள்வன்,
அடுத்தபடி இருப்பவர் ஸ்ரீரங்கநாதனின் மாம்னார் நம் விஷ்ணுசித்தர். பெர்ர்ர்ர்ர்ர்ரிய்ய ஆழ்வார்:)
மிக நன்றி ராகவ் வருகைக்கு
//தோளழகன் சுந்தரபாஹூ அழகர் மலைக் கள்வன்,//
போட்டோல உள்ளவர் எந்த ஊர் அழகர்னு கேட்டேன்மா.. கண்டிப்பாக திருமாலிருஞ்சோலை அழகன் அல்ல :)
//மணவாளமாமுனியுடன் ஆச்சார்யர்கள் பரம்பரை.
அதற்கப்புறம் வைஷ்ணவத்தைப் பரப்பிய
ஸ்ரீராமானுஜர் அவர்கள் எல்லோரும்.//
இராமானுசருக்கு அடுத்து தான் மணவாளமாமுனிகள். வைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் கடைசி ஆசார்யர் மணவாளமாமுனிகள். முதல் ஆசார்யர் நாதமுனிகள்.
அழகிய படங்களுடன் நினைவுபடுத்தினீர்கள்...மிக்க நன்றி.
போன வருஷம் பதிவு போட்டேன். இந்த வருஷம் ஏற்கனவே ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். நேரம் கிடைக்குமான்னு தெரியல்ல, முயற்சிக்கிறேன்.
மணவாள மாமுனிகள் கடைசி ஆச்சாரியர் .
இதை எழுதி விட்டு,மற்றதை காப்பி,பேஸ்ட் செய்யும்போது தவறு நிகழ்ந்துவிட்டதப்பா .
அழகன் படம் கூகிளில் எடுக்கப்பட்டது. அதைத் ''திருமால் இருஞ்சோலை அழகன்'' என்று தேடியே ,
எடுத்தேன்.
சுட்டியதற்கு நன்றி,.
நேரம் இருக்கிறதே மௌலி. கட்டாயம் பதிவு போட்டு விடுங்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு,சென்று ஆண்டாளைத் தரிசித்த உணர்வு ஏற்பட்டது.உங்களுக்கு எங்கள் நன்றி.
வாங்க கோமதி அரசு. நீங்களும் நெல்லையா???
மிக்க நன்றிம்மா. இதைவிட அழகாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள் அவர்களை 25ஆம் தேதி
தமிழ்மணத்தில் பார்க்கலாம்
கண்ணபிரான் ரவிசங்கர் தான் ஆடிப்பூரத்துக்கு பதிவு போடுவானு நினைச்சேன். அவர் என்னடான்னா சூரிய கிரகணத்துக்கு தாவிட்டாரு. நீங்களாவது அக்காரவடிசில் குடுத்தீங்களே, நன்றி :)
ஒரு தடா கூட வேணாம், ஒரு கிண்ணம் சக்கரை பொங்கல் போதும். (கிண்ணம் சைசை நான் தான் முடிவு செய்வேன்). :))
படங்கள் ரொம்ப அருமையா இருக்கு.
வாங்கப்பா அம்மணி.
ரவி கண்ணபிரான் பதிவு போடாமல் இருப்பாரா. என்னால்தான் அவர் பதிவைத் திறக்க முடியவில்லை.
24ஆம்தேதி இரவு கட்டாயம் போட்டு விடுவார்.
அம்பி வாங்கப்பா. எத்தனை நாளாச்சு பார்த்து.!!!
தடா எங்க விட்டிலியும் இருக்கு. அதைப் பார்த்துட்டுச் சொல்லுங்க போறுமா போறாதான்னு.:)
Post a Comment