ஆலமரத்துக்கு, அடையாறுக்கு ஆலாப் பறந்தாலும் பார்க்க முடியவில்லை.
நேரங்கள் மாறிவிட்டன.
பக்கத்தில் போக முடியாதபடி கயிறுகள் வேறு கட்டி வைத்திருக்கிறார்கள்.
20 வருடத்துக்கு முன் பார்த்த மரம் கண்கொள்ளாத
அளவில் ... பெரிய மேடையில் உட்கார்ந்து நிழலில் காற்றையும், பறவைகள் ஒலியோடு அனுபவித்துக் கொண்டு
அளவில் ... பெரிய அளவில் நிழல்களுடன் பேசியபடி இருப்போம்.:)
இருந்த விழுதுகளை மட்டும் படங்கள் எடுத்து இந்தப் பதிவில்
இட்டிருக்கிறேன்.
21 comments:
மரம் பார்க்கவில்லை
உ(ன்)ம் மனம் பார்த்தேன்.
இதென்னடா இது கல்லைக் கண்டா நாயைக் காணோம் மாதிரி இருக்கே. மரத்தில் மறைந்தது மாமத யானை கணக்கா:)
மரம் மனம். புரியலை. இருந்தாலும் புரிஞ்சா மாதிரி சிரிப்பான் போட்டுக்கறேன்.
ThuLasi
oru veLai
veRa ethaanalum sollidunggo:)))
சின்ன வயசுல பள்ளியில கூட்டிக்கிட்டு போனாங்க...ம்ம்ம்...இப்போ உங்க புண்ணியத்துல விழுதுகளையும் பார்த்தாச்சு ;)
//20 வருடத்துக்கு முன் பார்த்த மரம் கண்கொள்ளாத அளவில் ... பெரிய மேடையில் உட்கார்ந்து நிழலில் காற்றையும், பறவைகள் ஒலியோடு அனுபவித்துக் கொண்டு அளவில்... பெரிய அளவில் நிழல்களுடன் பேசியபடி இருப்போம்.:)//
‘சிரிப்பான்’ போட்டு முடித்திருந்தாலும், அதன் பின்னால் உங்க 'மனம்' பழைய கணங்களுக்காக ஏங்குவதைக் குறிப்பிட்டிருப்பார்களோ துளசி மேடம்?
பூக்கள் அருமை. நுழைவாயில் மற்றும் அந்தக் கடைசிப் படத்தில் நிழல்களுடன் பேச ஓடி வரும் அலைகள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா!
உண்மைதான் ராமலக்ஷ்மி.
பழைய நேரங்கள் வீட்டில் பேச நேரம் இருக்காது. இந்திரா நகரில் அம்மா வீடு. அங்கே போத் திரும்பும்போது
சில நேரம் சொசைட்டிக்குள் நுழைந்து இனிமையான அமைதியை நானும் சிங்கமும் அனுபவிப்போம்.
நிழலாடும் கணங்கள்:)))
கடற்கரை நிழல்கள் நங்கள்தான் .பெண்,நான்,கணவர்.
விழுதுகள் விழுதுகளைப் பார்ப்பதுதான் யதார்த்தம் கோபி.:)
நல்ல பதிவு வல்லி, மலரும் நினைவுகள்! மற்றுமொரு மாபெரும் ஆலமரம் இங்கு சென்று பாருங்கள் http://sankriti.blogspot.com/2009/07/banyan-cluster.html
Shobha
landmarks போட்டிக்காக அடையாறு ஆலமரம் பார்க்கச் செல்லலாம் என்ரு நினைத்திருந்தேன் .என் அலைச்சலை குறைத்து விட்டீர்கள் நன்றி வல்லிசிம்ஹன்
வரணும் ஷோபா.நீங்கள் கொடுத்த லின்க் போய்ப் பார்க்கிறேன். நன்றிம்மா..
கோமா, நீங்க மெயின் கேட் வழியாப் போய்ப் பார்க்க முயற்சி செய்யுங்களேன்.8.30 டு 10.30 காலைல பார்க்கலாம்.
உங்க அதிர்ஷ்டம் வேற மாதிரி இருக்கலாம். சான்ஸ் பார்க்கலாமே.
அடையாறு ஆலமரத்தப் பத்திப் புத்தகத்துல படிச்சதோட சரி. சென்னையில பல நாள் இருந்தாலும் போய்ப் பாத்ததில்லை. இப்பதான் படத்துல பாக்கிறேன். நன்றி.
அந்த (ஆல) மரத்தைப் பார்க்கவில்லை ( இன்னும்)
ஆனால் உங்கள் மனத்தைப்ப்பார்த்துவிட்டோம் இந்த பதிவில்.. எல்லாரும் வாழவேண்டும் என்ற வரியில்.. :))
வாங்கப்பா முத்து.
என்ன இருந்தாலும் ஆலமரம் அழகுதான்.
அதோட விழுது நுனிகளைப் பறித்து அரைத்துத் தலையில் பூசிக்கொண்டால் தலை முடி வளரும் என்று நிறைய பேர் விழுதுகளைப் பாழ் செய்துவிட்டார்களாம். பாவம் அந்த மரம். அதுதான் பாதுகாப்பாகக் கயிறு கட்டி வைத்திருக்கிறார்கள்
பிட் டுக்காக எடுத்தீங்களா?
இது வரை பாத்ததில்லே இதை.
பிட்டுக்காக எடுக்கலைம்மா.
இது குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய்க் காண்பிக்கணும் என்று போனோம். 15 நிமிஷத்தில் என்ன பார்க்க முடியும். நீங்களும் சென்னை வரும்போது போய்ப் பாருங்கோ.
தங்கள் தளமும் பதிவுகளும் அருமை...
என் முதல் பதிவை காண அன்புடன் அழைகிறேன்..
ஆலமரம் மாதிரி உங்க மனசும்னு சொல்லி இருப்பாங்க போல துளசி அம்மா? :) அழகான படங்களுக்கு நன்றி அம்மா.
வாங்க கோதை சூரியா,உங்க பதிவுக்கும் வந்தேன்.
முதல் வருகைக்கு நன்றி..thaisurya,
ஆஹா கவிக்கு ஏற்ற நயமான மனசு கவிநயாவுக்கு. சரி அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
ஆலமரம் போல அளவும் சுற்றும் எனக்குச் சரியாகத்தான் இருக்கும்:))))
Post a Comment