Blog Archive

Thursday, July 02, 2009

சில காட்சிகள்..தெற்கு வாழும் சித்திரம்







































































































































































































































































கிளிகள் வந்து குவிந்தது போல மழலைப் பட்டளம் ஒன்று வீட்டில் இறங்கி இருக்கிறது,.
வெய்யில் தாளவில்லை. சில பல காட்சிகளையாவது அவர்களுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று,
ஒரு மாலை நேரம் கிழக்குக் கடற்கரைச் சாலைத் தக்ஷின் சித்ராவுக்கு அழைத்துச் சென்றோம்.
மாலை 6 மணிக்கு அந்தக் கண்காட்சி கிராமத்தை மூடி விடுவார்களாம்.
அதனால் எங்களுக்குக் காணக் கிடைத்தது, தமிழ்நாட்டு,கேரள,செட்டினாடு வீடுகளும் சுற்றுப் புறங்களும் தான்.
அதுவே மனம் நிறைந்த காட்சிகளாக இருந்தாலும் முழுவதும் பார்க்க முடியவில்லையே என்றும் வருத்தமாக இருந்தது.
சிறிய துண்டுதான் என்றாலும் அல்வாவின் இனிப்பு சிறப்புதானே.
அழகு வளையல்கள், பம்பரங்கள்,மண் சட்டிகள் எல்லாம் வாங்கிக் கொண்டோம்.
 
நிழலில் மணலில் விளையாடவும் நேரம் கிடைத்தது பேரனுக்கும் பேத்திக்கும்.
அங்கு எடுத்த சில துளி இன்பங்களைப் படங்களாகக் கொடுக்கிறேன்.














































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

33 comments:

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//சிறிய துண்டுதான் என்றாலும் அல்வாவின் இனிப்பு சிறப்புதானே.//

அளவிற் சிறியதாயினும் அழகான வரிகள். அருமையான படங்கள்.

KarthigaVasudevan said...

ஹை...நானும் இதெல்லாம் பார்த்திருக்கேனே...So Cute எல்லா போட்டோசும் .

அப்புறம் ...ரொம்ப நாள் விடுமுறை கொண்டாடியாச்சு ,எப்படி இருக்கீங்க வல்லிம்மா ?

நலம் தானே?

Anonymous said...

வல்லிம்மா, சென்னைலதான் இருக்கீங்களா, அப்படீன்னா மறுபடி ஒருதரம் கூட போலாமே.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சதங்கா. கவிதையை இனிமேதான் படிக்கணும். குட்டிப் புயல்கள் படு வேகமாகச் சுற்றி வருவதால் வீடெங்கும் அதகளமாகி இருக்கிறது.

பாராட்டுக்கு நன்றி.:)

வல்லிசிம்ஹன் said...

விடுமுறை எப்படிக் கழிந்ததுன்னு, கட்டுரை போட வேணாமா மிஸஸ் தேவ்!!!எப்படி இருக்கீங்க.
ரொம்ப நாளாச்சு எல்லாரையும் பார்த்து.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சின்ன அம்மிணி. இன்னிக்குத்தான் உங்களை நினைச்சுக்கிட்டேன். பெரிய அம்மிணி சின்ன அம்மிணின்னு தலைப்ப்போட ஒரு பதிவு பார்த்தேன்.
சென்னைல தான் இருக்கேன்மா. இவங்கள்ளாம் வந்தாதான் எனக்கு வெளில வரச் சான்ஸ்:))))
இந்த இடத்தத் தாண்டி கோவில்களுக்கெல்லாம் போவேன். ஆனா இங்க போக மட்டும் காலு வராது. தனியாப் போகப் பிடிக்காது.

கோபிநாத் said...

நன்றாக இருக்கிறது புகைப்படங்கள். இந்த முறை வரும் போது கண்டிப்பாக போக வேண்டும் ;)

துளசி கோபால் said...

சூப்பர் படங்கள் & சூப்பர் இடங்கள்.

இன்னொருமுறை ஆறுதலாகப் போகலாம்:-)

பேசாம பதிவர் சந்திப்பு ஒன்னு அங்கே நடத்திடலாம் வல்லி.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் சென்று வரணும் கோபிநாத். நெடு நாளைக்கு அப்புறம் அந்த தூளி, மரத்தொட்டில் எல்லாம் பார்த்து அதிசயமாகி விட்டது.


வரிசை வீடுகளில் எல்லோரும் உட்கார்ந்து காற்று வாங்கியபடி பேசி மகிழ்ந்திருப்பார்கள்.

திண்ணை, முற்றம் எல்லாம் இப்போதும் கட்டுகிறார்கள். பார்க்கிறேன். ஆனால் அந்தப் பழைய ஒற்றுமை வருமா என்று தெரியவில்லை

துளசி கோபால் said...

//ஆனால் அந்தப் பழைய ஒற்றுமை வருமா என்று தெரியவில்லை//

நோ ச்சான்ஸ். அதான் வீட்டுக்கூடத்துலே டிவிச்சனியன் வந்து உக்காந்துக்கிச்சே(-:

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி, ஒரு நாள் முழுவதும் அங்க இருந்து, அந்த உணவு விடுதியில் போண்டாவுடன் கூட,

இன்னும் பலப் பல உணவுகளோடுப் பதிவர் சந்திப்பு வைத்துக் கொள்ளலாம்:)

"உழவன்" "Uzhavan" said...

//சிறிய துண்டுதான் என்றாலும் அல்வாவின் இனிப்பு சிறப்புதானே//
 
அனைத்தும் இனிமை
 
அன்புடன்
உழவன

ஆயில்யன் said...

ஒவ்வொரு முறையும் இது போன்ற பதிவுகளையும் புகைப்படங்களையும் பார்க்க பார்க்க தக்‌ஷின்சிதராவினை பார்த்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் வலிமை பெறுகிறது :)))

வல்லிசிம்ஹன் said...

உங்க ஃப்ளைட் சென்னை வழியாகப் போனால் ,தக்ஷின் சித்ரா போக ஏது தடை????
ஆயில்யன்,
என் மனசுக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்தது. நீங்களும் பர்க்கணும்.

Anonymous said...

எனக்கும் ரொம்ப பிடிச்சது இந்த இடம். ஞாயித்துக் கிளமைல நிறைய ஆக்டிவிட்டீஸ் கூட வச்சிருக்காங்க! பஸ்ல போனா ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருந்தது - பக்கத்துல ஒரு பஸ் ஸ்டாப் வைக்கலாம்! எனக்கு சொந்த வீடு ஆசை வந்ததே அந்த வீடுகளைப் பாத்துதான்! (அது வரைக்கும் நாடோடி வாழ்கையே நலம்னு இருந்தது!) கனவு வீட்டுக்காக நிறைய ஃபோட்டோ எடுத்து வச்சிருக்கேன். (முன் முற்றம், பின் மூற்றம், திண்ணை, கூடம் எல்லாம்!)

எங்க பாப்பா இரண்டும் சேலைத்தொட்டில்ல தான் முதல் இரண்டு மாசம் :))) .. அப்புறம் ஒரு நாள் ஆணி தானா விழுந்து (இரும்பு உடையிற ரகசியம் என்னன்னு தெரியல!), தொட்டில் பாப்பாவோடு விழுந்து (ஒண்ணும் ஆகலை!) அமர்க்களம் வீட்டுல - கடைசியில எல்லாம் பெரியவங்களும் ஸ்ட்ரைக் பண்ணிட்டாங்க தொட்டில் இனிமே போடக்கூடாதுன்னு!

கூகிள்ல "Moby Wrap" "Sleepy Wrap" பாருங்களேன் - குறத்தி ஸ்டைல்ல குழந்தைய தூக்கிறது இப்ப ரொம்ப பாப்புலர்! :) பெரியவங்க விட மாட்டேங்கிறாங்க - பயப்படுறாங்க!!! :) பழைய கால சொகுசு இப்ப திரும்பி நிறைய வருது! :)

அதுலையும் அந்த பின் முற்றம் concept ரொம்ப பிடிச்சுது எனக்கு - ஒரு Garden நடுவுல, ஓரத்துல ஆட்டுக்கல்லுக்கு பதிலா Grinder வச்சிட்டா போச்சு, Washing Machine அங்கேயே வைக்கலாம் - சூரிய வெளிச்சம் - Simplicity - பெண்கள் தனியா கதையடிக்க (கதை படிக்க?) எடம் - எல்லாம் சூப்பர்...

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி உழவன். பழைய கிராமங்கள் பொலிவை இழக்க ஆரம்பிக்கும்போது இந்தக் கிராமம் புதிதாகக் கட்டியதாக இருந்தாலும், வீடுகள் உயிருடன் இருப்பதாத் தோன்றூகிறது.

வல்லிசிம்ஹன் said...

மதுரா, வாங்கப்பா. தூளி எப்படி அறுந்ததோ. பயங்கரமா இருக்கு நினைக்கவே.
குழந்தைகள் நலமாக இருப்பது பற்றி சந்தோஷம். இந்தக் குறத்தி பாக்கேஜ் என் பெண்ணும் வாங்கினாள். முதுகு வலிதான் வந்தது:)

எங்க பழைய வீட்டில் முன்கட்டு பின் கட்டு என்று முற்றங்கள் இருக்கும்.
எங்க வீட்டு மாமிகள் மதியம் கூடி கதை+வம்பு பேசுவது அங்கேதான். புளியிலிருந்து நார் உரிப்பது, யந்திரத்தில் உளுந்து உடைப்பது எல்லாம் அங்கெ தான் நடக்கும்.
இனிமையான நாட்கள்.
சீக்கிரம் வீடு கட்டுங்கள் மதுரா. நானும் வந்து பார்க்கிறேன்!!
வாஷிங் மெஷின், கதைப் புத்தகம் ரொம்பப் பிடித்திருக்கிறது:)

நானானி said...

அந்தக் குட்டிப் பானை நீங்களே செய்ததா, வல்லி? அழகாயிருக்கு.
நானும் ரொம்ப நாளா தட்க்ஷிண்சித்ரா போகணும் நினைச்சுக்கிட்டேயிருக்கேன். இன்னும் வாய்க்கலை.
இந்த அடையாறிலிருந்து எட்டிய தூரம்தான்...அடையாறிலிருந்து ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கெ இரு முறை போய் வந்துட்டேன்!
கோவிலுக்குப் போகணும்னா அந்த சாமி கூப்பிடணும், அது போல் இங்கே போக யார் கூப்பிடணுமென்னு தெரியலையே!!!

Anonymous said...

முதுகுவலியா? அய்யோ அப்பனா வாங்கவே வேண்டாம்! (உங்களுக்கு பேரன் பேத்தி எல்லாம் உலகம் புராம் இருக்காங்களா அதனால யாராவது ட்ரை பண்ணீருப்பாங்கன்ற ஒரு நம்பிக்கை இருந்தது ;) ... அதான் கேட்டுப் பாத்தேன்!!!) அப்படியே பௌன்ஸர்/bouncer-cradle நல்ல உபயோகமா, அப்புறம் ரப்பர் பேன்ட்ஸ் நல்லா யூஸ் ஆகுமா எல்லாம் கேக்கலாம்தான், ஆனா சம்பந்தமே இல்லாத பதிவுல கேக்குறேன்னு உதை கிடைக்குமோன்னு பயமா இருக்கு!!! :) அதனால எஸ்கேப்பு!

PS: தமிழ்ல பிள்ளை வளர்க்கும் கதை நிறைய எல்லாம் பேச மாட்டிக்காங்களே!!! :) நீங்க ஏதோ அங்க அங்க எழுதுன குறிப்பெல்லாம் (திராட்சை குடுத்தது ;))) ...) மனசில வச்சிருக்கேன்!

ராமலக்ஷ்மி said...

அருமையான் படங்கள். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி, அதானே இங்க!!
பக்கத்தில இருக்கிற எதையும் கண் திறந்து பார்ப்பதற்குள் நிறைய வருடங்கள் ஓடிவிடும்.:)

துள்சி சொன்ன மாதிரி ஒரு பதிவர் மீட்டிங் வச்சிடலாம் அங்க.

அந்த மண்குடுவையைச் செய்தவன் பேரன். கைகளும் அவனதே:)

நானானி said...

மண் குடுவை...சூப்பர்! செய்த கைகளுக்கு சுத்திப்போடுங்க, வல்லி!

வல்லிசிம்ஹன் said...

மதுரா, என்ன வேணாப் பேசலாம் என்பதற்குத்தானே பதிவே. நம்ம இடம் இது.
சாட்ல கேக்கறதுக்குப் பதில் இங்க எழுதுவது சுலபமாத்தானே இருக்கு.
பௌன்ஸர் க்ரேடில் அழுகை நிறுத்த நல்ல் பயன் படும்.
ஆனா பக்கத்தில யாராவது இருக்கணும்.

தூங்கினப்புறம், சேஃப்டி ஹார்னஸ் போட்டிருக்கும் இல்லையா. அதனால் வேலை செய்ய சௌகர்யம்.
ஒரு கண் வேலை, ஒரு கண் குழந்தை.
ரப்பர் பாண்ட்ஸ்னு நீங்க சொல்றது டயப்பர் பத்தியா.?

வேணாம்பா. கோடைகாலத்தில் அவஸ்தைப் படும்.இல்லை தலைக்குப் போடுகிறதைச் சொல்றீங்களா:)))

வல்லிசிம்ஹன் said...

நன்றி உழவன். ரசித்ததற்கு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. நீங்களும் வந்து பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

மாதேவி said...

ஆகா! இப்படி எல்லாம் மாதிரிக்கிராமமா ரொம்ப அழகு.

மகளும் நானும் சேர்ந்து ரசித்தோம்.

திவாண்ணா said...

அக்கா ப்ளாகுக்கு வரணும்ன்னா காலை ப்ரீ நேரத்திலேதான் வரணும் போல இருக்கு! எத்தனை படங்கள்!
:-))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மாதேவி. நீங்களும் குழந்தையுமா ஒரு விசிட் செய்யுங்களேன்.
ஞாயித்துக்கிழமை எல்லா விவரங்களும் தெளிவா எடுத்துச் சொல்லுவாங்களாம்

வல்லிசிம்ஹன் said...

ஆஹா தம்பி வாசுதேவன், வந்தது அல்லவோ அழகா இருக்கு.

உங்களுக்கு இருக்கும் வேலைக்கு நடுவில்

வந்து பார்ப்பதே சந்தோஷமா இருக்கு.
இன்னும் நிறையப் படங்கள் எடுத்தேன். குடும்ப போட்டோக்களாக இருப்பதால் போடவில்லை.:)

pudugaithendral said...

போட்டோஸ் சூப்பர்,

நாங்களும் அங்கே போயிருந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

ஹை! தென்றல்.

நீங்களும் பதிவிட்டு இருந்தீர்கள் இல்லையா. ஆகக் கூடி நாம் எல்லாம் சேர்ந்து தக்ஷின் சித்ராவுக்கு நிறைய விளம்பரம் கொடுத்துவிட்டோம்:))

pudugaithendral said...

ஆமாம் நம்மால அவங்களுக்கு விளம்பரம். ஆஷிஷ் அம்ருதா ப்ளாக்ல பதிவு இருக்கு.

ராமலக்ஷ்மி said...

நான் இன்னும் பார்த்ததில்லை. முதலில் முத்துலெட்சுமி பதிவிட்ட போதுதான் இந்த இடம் பற்றியே தெரியும். பிறகு புதுகைத் தென்றல், துளசி மேடம், இப்போது நீங்கள் எல்லோரும் பதிவிட்ட பார்க்கின்ற ஆவலை அதிகரித்து விட்டீர்கள்:)!