Blog Archive

Friday, October 10, 2008

விளம்பரமோ விளம்பரம்..PIT OCTOBER

இதுல எழுதின வாக்கியமெல்லாம் வரவில்லை. அதுக்கு என்ன செய்யணுமோ???

ரொம்பக் குடச்சல் எடுத்தா எடுக்க வேண்டிய் ஆயுதம்:)


பச்சைக் கலர்ல ஒண்ணு, மஞ்சக் கலர்ல ஒண்ணு இந்த துடைப்பான்கள் இல்லாமல் இவங்க வீட்டில ஒண்ணும் துலங்காது:)



மகளொட படக்கருவி. என்னுதை விட அழகா இருக்கிறதுனால போட்டேன்.





சோப் இவங்க ஊரில திரவமாத்தான் இருக்கு.
அது பாதி தண்ணீர்ல போயிடும்.
நம்ம ஊரு லைஃப்பாய் போல வருமா:)














Posted by Picasaநவராத்திரிக்கு வாங்கின பைகள். வண்ணம் அழகா இருக்கு இல்ல??

23 comments:

சதங்கா (Sathanga) said...

மீ த ஃபர்ஸ்ட் :)))

கடைசி படம் அருமை. இத போட்டிக்கு அனுப்பிடலாம். வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையாவாப்பா??
சதங்கா எப்ப வந்தீங்க.

அப்படியே அனுப்பிட்டாப் போச்சு. பங்கெடுக்கிறதுல என்ன நஷ்டம்:))

துளசி கோபால் said...

பைகள்தான்ப்பா சூப்பர்.

வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.

Deepa said...

எனக்கு ஜாண்சண் பேபி - குடைச்சல் குச்சி தான் ரொம்ப பிடிக்கும்...

அழாம குடஞ்சுப்பேன்.
ஆழமா குடஞ்சுப்பேன்

Geetha Sambasivam said...

band aid எல்லாம் பத்தாது நமக்கு! :D அதனாலே பெரிய கட்டாப் போட்டுண்டாச்சு! இப்போ கொஞ்சம் கொஞ்சமா இடது சாரியா மாறிட்டு இருக்கேன். சும்மா உட்கார முடியலை!
படங்கள் எல்லாமே நல்லா இருக்கு வல்லி!

ஆயில்யன் said...

மீ த மூணு :))


கடைசி பை படத்தை பார்சல் பண்ணி பிஐடிக்கு அனுப்பிடுங்க!

:))

அந்த பைகளில் வைக்கிறதுக்காக வைச்சிருக்கற ஐட்டங்களை எனக்கு பார்சல் பண்ணிடுங்க :)))

துளசி கோபால் said...

தீபா,

//அழாம குடஞ்சுப்பேன்.
ஆழமா குடஞ்சுப்பேன்//


எதுக்கு இந்த விபரீத ஆசை?



இதைக் கொஞ்சம் பாருங்க.

இங்கே பாருங்க

வல்லிசிம்ஹன் said...

வாசகம் எழுதி முடித்தேன் துளசி.

அப்லோட் செய்யும் போது காணாமல் போயிடுத்து.

கடைசிப் பையையே அனுப்பறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா தப்புப்பா தீபா.
காது குடைந்து அவஸ்தப்பட்டவங்க பாடு எனக்குத் தெரியும். இது வெறுமனே ஒத்தி எடுக்கத்தானே:))

வல்லிசிம்ஹன் said...

கீதா என்ன ஆச்சு.:(

காலில் என்ன தொந்தரவாயிருந்தாலும்

சீக்கிரம் விடுபட்டுவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அப்படியே ஆயில்யன்.

பைகளை அனுப்பிட்டேன்.
உள்ள இருக்கிற பழம்,மஞ்சள் குங்குமம், ஒரு சைனா கிண்ணம் எல்லாம் வச்சு இருக்கேன்.
எதுவேணுமோ எடுத்துக்கலாம்.:)))

நானானி said...

ஓகே..!வல்லி! தாம்பூலப் பைகளே என்னோட சாய்ஸ். உள்ளிருக்கும் சாமாச்சாரமும் தெரிந்தால் நல்லாருக்கும். எனக்கு வேண்டியதை எடுத்துக்கலாமில்ல? வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

நானானி,
நலமாப்பா.

பைக்குள்ள தாம்பூலம், ரெண்டு ஹர்ஷீஸ் சாக்கலேட்,

ஒரு சைனா கிண்ணம். வண்ணம் சிவப்புப்பூ, இல்லாட்ட மஞ்சப்பூ:)
போன தடவையே உங்களை நல்லா உபசாரம் செய்யலை. :(

cheena (சீனா) said...

aakaa படங்கள் அத்தனையும் அருமை - போட்டிக்கு அனுப்புங்க - நல்வாழ்த்துகள் - ஆயில்யன், நானானிக்க்கு கொடுக்கறதெ எங்களுக்கும் கொடுங்க - என்னா சேரியா

வல்லிசிம்ஹன் said...

கொடுத்து வச்சிருக்கணுமே சீனா சார்.
நீங்கள் தம்பதி சமேதராக எங்க வீட்டுக்கு வரணும்.
போட்டி விதிமுறை மீறி இரு படங்கள் அனுப்பிட்டேன். பார்க்கலாம் எந்தப் படத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கறதுன்னு:)

ராமலக்ஷ்மி said...

கடைசிப் படம் வித்தியாசமாக இருக்கிறது. அதுதான் எனது சாய்ஸும். வெற்றி பெற என் வாழ்த்துக்கள் வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

வரணும்ம்ம்பா ராமலக்ஷ்மி,எல்லோருடய வோட்டும் பைகளூக்கே:)
அனுப்பிட்டேன் போட்டிக்கு..
பொறுத்திருந்து பார்க்கலாம்
.::)
நன்றிம்மா.

திவாண்ணா said...

அட எததான் அனுப்பினீங்க?
நானா இருந்தா முன் பதிவுல இருக்கிற முத படத்தை (சின்ன பெண்களுக்கு வளையல்கள்) கைவினை பொருட்களுக்கு விளம்பரமா அனுப்பிடுவேன்!

ambi said...

நவராத்திரி பைகள் தான் என் பேவரிட். கொஞ்சம் டாப் ஆங்கிளில் எடுத்து இருக்கலாமோ? :)

ஜான்சனை பாத்ததும் என்னடா இங்கயும் டையப்பரா?னு ஒரு நிமிஷம் கண்ண கட்டிடுடுச்சு. :)))

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//உண்மையாவாப்பா??//

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, எல்லோரும் சொல்லப்போறத முன்னாடியே சொல்லிட்டனே :)))

//சதங்கா எப்ப வந்தீங்க.//

வந்து பத்து நாட்களுக்கும் மேல ஆச்சு. வந்த ஜோரோட இந்தியா பத்தி சில பதிவுகளும் போட்டிருக்கேன் 'வழக்கம் போல்' தளத்தில். நேரம் இருக்கும்போது வந்து வாசிச்சுப் பாருங்க. கருத்துக்கள் சொல்லுங்க.

அப்புறம், 'சித்திரம் பேசுதடி' தளத்தில் ஒரு லைன் ட்ராயிங் படம். நீங்க அவசியம் பார்க்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வாசுதேவன் ஒரு வைத்தியராமே. அப்படியா. ஹ்ம்ம் ஒண்ணுமே தெரிய மாட்டேங்கறது இந்த உலகத்தில:)).

கடோசிப் படம் ,அந்தப் பைகள் படத்தத் தான் அனுப்பி இருக்கேன்.
முன்னாலியே சொல்லி இருந்தா அந்த
வளையல்களை அனுப்பி இருப்பேன்.
வளையல் கடைக்கு விளம்பரம் தேடத் தெரியாம இருந்துட்டேன் பாருங்களேன்:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி இங்க இப்பவும் சின்னவனுக்கு வெளில போகும்போது டையப்பர் உண்டு.

இல்லாட்ட அது வேணும்னே நடுக்கூடத்தில வேலை காட்டும்.
அப்புறம் கார்ப்பெட்டை சுத்தம் செய்யற வேலை யாரு செய்வா??
:)
அதனால டையப்பர் அப்பர் உங்களுடன் இன்னும் 15 மாதத்துக்காவது இருப்பார். சல்லிசா வரும்போது வாங்கிப் போடுங்கோ:)

வல்லிசிம்ஹன் said...

சதங்கா , கட்டாயம் பார்க்கிறேன்.

ரொம்ப நன்றி சொன்னதுக்கு.
எனக்கு ஒரு மெயில் போட்டுடுங்களேன் நீங்க பதிவு போட்டதும்...