எனக்கு மிகவும் பிடித்த த்ற்கால(?) நட்சத்திரங்கள்.
அழைப்புக்கு முந்தின அழைப்பு:) ]]]]
இதே போல எம்.வி. ராஜம்மா படம் கிடைத்தும் பதிவில் ஏற்ற முடியவில்லை:(
நம்ம மோஹனாங்கி.விகடனில் இப்படி இருந்தார்கள்
எல்லோஒருக்கும் அம்மா வேஷம் போட்டாலும் வெகு அழகான் அம்மாவாகக் கடைசி வரை இருந்தார். என்ன தமிழ் உச்சரிப்பு!!!
எல்லோஒருக்கும் அம்மா வேஷம் போட்டாலும் வெகு அழகான் அம்மாவாகக் கடைசி வரை இருந்தார். என்ன தமிழ் உச்சரிப்பு!!!
இந்த ஜோடி சேவை செய்ய வந்த ஜோடி. சந்தோஷமாக இருந்துவிட்டு வருந்தி மறைந்தனர்.
இவர் தனி ஹீரோ.எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்தவர். ஜெய் சங்கர்.
அம்மா ஆகிவிட்ட ஜோ. இனிமை.
அவங்க வீட்டுக்காரர், சிவகுமாரின் புதல்வன் என்பதாலியே பிடிக்கும்:)
இவங்களைப் பற்றிச் சொல்லறத்துக்கு நிறையப் பேரு இருக்காங்க. அம்பியைத்தான் மறக்க முடியவில்லை:)
அந்த காந்த விழிகளை மறக்கவே முடியாது.
நாடோடி மன்னன்.அலுக்காமல் சலிக்காமல் சிரித்துவிட்டு வரலாம் இவர் படங்களில் அவ்வளவு அழுகையும் இருக்காது.
காதலித்து,மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கொண்டாடியவர்.
டி.எஸ் பாலையா..காதலிக்க நேரமில்லை,தூக்குத்தூக்கி,ஊட்டி வரை உறவு ,தில்லானா மோஹனாம்பாள், பாகப்பிரிவினை(அந்த சிங்ராம் பய)
இந்த சினிமாக்களில் எல்லாம் மிகவும் ரசித்தேன்.
விரசமில்லாத வசனங்களை எப்போது பார்க்க,கேட்கப் போகிறோம்:(
வார்த்தைகள் தான் வேறு. நாங்கள் அப்பொது ஜெய்ஷங்கரை ரசித்தது போல
இப்போது புதிதாக வரும் அனைவரையும் இருபதுகளில் இருப்பவர்கள் ரசிக்கிறார்கள்.
மக்களுக்கு பொழுதுபோக்காக வரும் அம்சங்களைத் தரும் விதத்தில் சினிமா மாறிவிட்டது.
மாற்றம்தானெ நிரந்தரம்.
அதனால சினிமா பற்றிப் பதிவுகளையும் நான் மாறிய பிறகு போடலாம் என்று நினைக்கிறேன்:0)
விடு ஜூட் மது. !!!
சுபம்,
THE END.
இவங்களுக்கு முதலில் தீபாவளி நல் வாழ்த்துகள் சொல்லிக்கறேன்.
18 comments:
படங்களைத் தேடியெடுத்துப் போட்டிருக்கிறீர்கள், பண்டரிபாய் முதல் ஜோதிகா வரை. என்.எஸ்.கிருஷ்ணன் முதல் சூர்யா வரை:)!
ந்நன்றி ராமலக்ஷ்மி,
ரீடர் வழியா வந்துட்டீங்க,
தமிழ்மணத்துக்கு என்ன ஆச்சு??
கொத்சும் தமிழ்மணம் தெரியவில்லை என்று சொன்னார்,.
ந்நன்றி ராமலக்ஷ்மி,
ரீடர் வழியா வந்துட்டீங்க,
தமிழ்மணத்துக்கு என்ன ஆச்சு??
கொத்சும் தமிழ்மணம் தெரியவில்லை என்று சொன்னார்,.
வல்லிம்மா இந்த லிங்க் குடுங்க:)
http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html
எனக்கு இன்னொரு தடவை எழுதணுமென்று விருப்பமாயிருக்கிறது ரேவா இதைப் பார்த்ததும். மறுபடி சினிமா பதிவு போட்டதுக்கு நன்றி படங்களும் விளக்கமுமாய்.
இவ்வளவு பொறுமையா உங்களுக்கு:)
வல்லிம்மா,
//படங்களைத் தேடியெடுத்துப் போட்டிருக்கிறீர்கள்//
இதே தான். இதுக்கே உங்களுக்கு பல பதக்கங்கள் கொடுக்கணும் :))
அமலா எனக்கும் பிடித்த நடிகை. 'சித்திரம் பேசுதடி'யில் சீக்கிரம் அவரது (எனது பள்ளி காலத்தில் வரைந்தது) ஓவியம் வலையேற்றி, அழைப்பு அனுப்புகிறேன்.
பாலையா போலவே ... வீ.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன் இவங்களை எல்லாம் விட்டுடீங்களே.
எங்க அம்மாவைப் போட்டதுக்கு நன்றிப்பா.
எவ்வளோ நாளாச்சு முகம் பார்த்து!!!!!
டூப்ளிகெட் கண்ணாம்பான்னு கலாட்டா செய்வோம்.
என்ன......... தமிழ் உச்சரிப்புதான் கொஞ்சம் தகராறு.... ஒரிஜனலுக்கு இல்லை.
பொறுத்தது போதும் பொங்கியெழுன்னு கூப்புடறாங்க!!!
மது, சினிமான்னா
இந்தப் பொறுமை வந்துடுது ..
படம் பார்க்க விடாம லூட்டியடிச்ச எங்க பசங்க தான் காரணம்னு நினைக்கிறேன்.
உங்க லின்க் வந்திடுச்சுப்பா:)
அட, தேவுடா எப்படி மறந்தேன் அவங்களை.
விகேஆர் ரொம்பவே பிடிக்கும். அவர் வில்லனா வந்தா தான் பிடிக்காது.
அதே போல அசோகன்,தேங்காய் ஸ்ரீனிவாசன் குணச்சித்திர நடிகர்கள். ஓராயிரம் பார்வையிலே பாட்டில அவரை மறக்க முடியாதே.
தேங்காய் சில படங்களைத் தவிர மற்ற படங்களில் நன்றாகவே செய்திருப்பார். நல்ல பர்சனாலிடி.
திறமைகள் சினிமா மயக்கத்தில் காணமல் போய் விடுகின்றன.
சதங்கா, என்ன பட்தக்கம் கொடுக்கப் போறீங்க , தேடல் அரசியா:)
வல்லிம்மா, அமலா எல்லாம் நடிக்கறதே இல்லியே. நம்மள மாதிரி அமலா ரசிகர்களுக்கு எவ்வளொ இழப்பு:), சூர்யா எனக்கும் ரொம்ப பிடிச்ச நடிகர்.
ஆமாம் சின்ன அம்மிணி. நடிக்கலைதான்.
இருந்தாலும் அவங்க வந்து நடித்த படங்கள் அருமை இல்லையா. வளையோசை கலகலபாட்டும், கண்ணுக்கு மையழகும் மறக்க முடியாதே. ஒரு மௌனராகம், ஒரு அக்னிநட்சத்திரம் போதுமே:)
துளசி,உங்க அம்மா இப்படி இருப்பாங்களா.
என்ன அழகு.!!
ஆந்திராவுக்கே உரிய பெரிய விழிகள், அவங்க குரல் ஒரிஜினல் இல்லையா. கண்ணாம்பா குரலே தனின்னு நான் நினைச்சுகிட்டு இருக்கேன்... என்னவோ . நல்ல நடிப்பு. அவ்ளோதானே நமக்கு வேணும்:)
துளசி,உங்க அம்மா இப்படி இருப்பாங்களா.
என்ன அழகு.!!
ஆந்திராவுக்கே உரிய பெரிய விழிகள், அவங்க குரல் ஒரிஜினல் இல்லையா. கண்ணாம்பா குரலே தனின்னு நான் நினைச்சுகிட்டு இருக்கேன்... என்னவோ . நல்ல நடிப்பு. அவ்ளோதானே நமக்கு வேணும்:)
வல்லி,
கண்ணாம்பா குரல் ஒரிஜனல்தான்ப்பா.
நல்லா அழுத்தம் திருத்தமாத் தமிழ் பேசுவாங்க.
எனக்குத்தான் விவரமாப் பின்னூட்டத்தெரியலை(-:
நான் சொன்ன 'உச்சரிப்புத் தகராறு' எங்க அம்மாவுக்குப்பா.
அந்தகா அரவம் ராது மாயம்மகு:-)
அரவம்= தமிழ்
//இது கவிதாயினி அம்மா எனக்கு மூணாவாட்டி சினிமா பத்தி எழுதச் சொன்ன
அழைப்புக்கு முந்தின அழைப்பு:) ]]]]//
அட! மூணாவது வாட்டியா ஜூப்பரூ!
வல்லியம்மா கலக்கிட்டீங்க!
வி.கே.ஆர் விட்டுப்போச்சு!
தங்கவேலு கூட விட்ட்ப்போச்சோன்னு நினைக்கிறேன்!
ரேவதி,அமலா வந்தா கண்டிப்பா ராதா பாலோ பண்ணி வரணுமே????
:)))))
வாங்கப்பா ஆயில்யன்,
தங்கவேலு முதப்பதிவிலியே வந்துட்டாரே:)
விகேஆர் தான் விட்டுப் போச்சு. அமலா,ரேவதி ஏதோ ஒரு கபடமில்லாத நடிப்பு என்று தோன்றும்.அதான் அவர்கள் படங்கள். இன்னும் எத்தனையோ நாயகிகள் விட்டுத்தான் போச்சு.
மனசுக்குத் தோன்றியதை எழுதினால் உண்மையாக இருக்கும். அதனால் இப்படி ஆச்சு.:)நன்றிம்மா.
Post a Comment