பதிவுகள்,
பின்னூட்டங்கள் என்று தமிழ்மண வாழ்க்கை போகிறதேனு நினைக்கும்போதே
மறுபடி ஏதோ சொந்த செலவு சூன்யம் செய்துவிட்டேனோ தெரியவில்லை.
சும்மா இருக்காமல் சோதனை செய்யப் போய்,
செட்டிங்க்ஸில் ,ஏதாவது மாற்றி விட்டேனோ.
மறுபடித் தமிழ்மண உதவி தகவல் பக்கத்தை
மீண்டும் உதவிக்கு அழைத்து
சரி செய்து,
டெம்ப்ளேட் மாத்தி............,
தேவுடா!!
எத்தனை தீவிரமா நானும் இத்தனை வேலைகளுக்கு நடுவிலக் கஷ்டம் பாக்காம,:-)
சேவை செய்யணும்னு நினைக்கிறேன்.
ம்ம்ம்ம். நடக்கலியே.
பார்க்கலாம்.
யாரவது மந்திர மாயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் என் ப்ளாகுக்கு ஆசீர்வாதம் செய்யுங்க.
நோயெல்லாம் தெளிஞ்சுடும்.
Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
6 comments:
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா !
போன பதிவுக்கு வந்து மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்ல நினைச்சா முடியலை. இப்போ சொல்லியாச்சு. :)
வரணும் கண்ணன்.
பயணங்கள் முடிந்து ஊருக்கு வந்தாச்சா.
ரொம்ப நல்லா இருந்தது நீங்க எழுதினது.
நம்ம ஊரைப் பத்தி ஒரு குற்றம் குறை சொல்லாமல் எழுதுவதே படிக்க நிறைவா இருக்கு.
உங்களுக்கும்,அன்பு மனைவி,குழந்தை ,அம்மா எல்லோருக்கும் மங்கையர் தின வாழ்த்துக்கள்.
வரணும் கொத்ஸ். ரொம்ப தான்க்ஸ்.
எல்லாத் தினங்களிலும் நீங்க அம்மாவையோ, மனைவியையோ
தங்கை அக்காவை மறப்பதில்லை. அதனால் அவர்களோடு என்னையும் சேர்த்ததற்க்குத்தான் நன்றி.இத்தனை நட்பு இருக்கும்போது எங்களுக்கெல்லாம் ஏது கவலை.
உங்க வீட்டுக்கும் என் மகளிர்தின வாழ்த்துக்கள். வீடும் பெண்பால்தானே?:-)
மகளிர் தின வாழ்த்துக்கள் வல்லி :)
அடடா! பொன்ஸ்.
நீங்க கத்துக்கொடுத்த ஃபோட்டொபக்கெட்,.
இப்போ விதவிதமா இங்கே வருது.
அறிமுகம் செய்தது எவ்வளவு நல்லதாப் போச்சு பார்த்தீங்களா?
தினம் ஒரு அலங்காரம்:-)உங்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்.
Post a Comment