About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, May 30, 2013

அப்பா 1921- மே 30 பிறந்த நாள்

தெய்வமான அப்பா
வணங்கிய தெய்வம்

 தன்னைப் பற்றியப் புகழோ  பேச்சோ விரும்ப மாட்டார்.
எப்பொழுதும் கீதை.
இல்லாவிட்டால்   குழந்தைகளுக்காக நல்ல விஷயங்களை

எழுதிவைப்பார்.
அபார்ட்மெண்டில் குடியிருந்ததால்  பொக்கிஷதார்  பொறுப்பும் கொடுக்கப் பட்டிருந்ததால் அந்தக் கணக்குகளைச்  சரி   பார்ப்பார்.

பேத்தியை ஹோலி ஏஞ்சல்ஸ்  பள்ளியில் கொண்டு போய் விடுவார்.

வீட்டுக்கு ஏதாவது வாங்கி வரவேண்டிய
பொருட்களை  பட்டியல் போட்டுக் கொள்வார். கடைக்குப் போவதும்
கோவிலுக்குப் போவதும் மிகவும் பிடித்த விஷயங்கள்.

பாண்டிபஜார் வழியே   நான் ஏதோ வேலையாகப் போய்க் கொண்டிருப்பேன் பஸ்ஸில். திடிரென்று அப்பா பண்டியன் காஃபிப் பொடி
கடையிலிருந்து வெளியே  வந்துகொண்டிருப்பார்.''அப்பா'' என்று வாயோட முணுமுணுப்பதோடு  பஸ்ஸில் போய்விடுவேன்.


வீட்டுக்குப் போகும் வரையிலும் அப்பாவின் உருவம் கண்ணிலேயெ நிற்கும்.

வீட்டுக்கு வந்து சமையல் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது
தொலைபேசி  கூப்பிடும். மகள் எடுத்துவிட்டு,அம்மா.....தாத்தா
ஃபோன்ல.

அவசரமாக வருவேன். ஏம்மா  பாண்டிபசார்வழியாப் பஸ்ஸில போனியா?
அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு ஆமாம்பா. ஜோசியர் வீட்டுக்குப் போய்
வந்தேன்.
ஜன்னலில் உன் முகம் மாதிரி தெரிந்தது.
நீதானா  என்று சந்தேகம். இவ்வளவு தூரம் வந்த பொண்ணு
வீட்டுக்கு    வருவியேன்னு நினைச்சேன்.

குற்ற உணர்வை மறைத்துக் கொண்டு
இரவு சமையலுக்கு நேரமாகிவிட்டதுப்பா.
 சாரி.!!
அடடா  இல்லம்மா.இவ்வளவு சாயந்திர வேளையில் தனியாகப் போகிறாயே.
உன் வேலைகளில் பாதி எனக்குக் கொடேன்.
நானும் நன்றாகச் செய்து கொடுக்கிறேன்.

இனிமேல் உங்கள் வீட்டுக்கு வந்து....
ஏன்மா இது உனக்கும் வீடுதான்...அப்பா சிரிக்கும் சத்தம் கேட்கும்.

சரிப்பா நம்ம வீட்டுக்கு வந்து,  உன்னையும் அழைத்துக் கொண்டு

ஜாதகங்கள் விஷயமாக நாம் யோசித்து   முடிவு செய்யலாம்.

ஆமாம்  இரண்டு ஜீனியஸ் சேர்ந்தால்  செய்ய முடியாத வேலையா
ஒரு கல்யாணம்:)

குறுக்கே  அம்மா குரல். பொண் குரல் கேட்டால் அப்பாவுக்குத் தனி உற்சாகம்.

ஏம்மா நீயும்   சேர்ந்துக்கோயேன். உனக்குத்தான் எல்லாவற்றிலும் ஆசைகள்  நிறைய. நான் அம்மாவைக் கிண்டலடிப்பேன்.

அம்மாவை ஒண்ணும் சொல்லாதே ஆண்டாள்.
அவளுக்குத் தெரியாததே கிடையாது.

இந்த அப்பா  இயங்குவது அம்மாவுடைய சக்தியால்தான்!!!

சாமி. உங்க     வைஃபை  ஒண்ணும் சொல்லலைப்பா.

நாம் எல்லாம் சேர்ந்து இந்தத் திருமணத்தை முடிக்கலாம்
என்பதோடு அந்தத் தொலைபேசி  சம்பாஷணை முடியும்.

இப்பொழுது நினைக்கிறேன்  பாண்டி பசார் பக்கம் போகும்போது
அம்மாவீட்டுக்கும் போயிருக்கலாமோ.

இன்னும் நிறைய சமாசாரங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமோ என்று.
அதற்கென்ன செய்வது.
அந்த நேரம் அப்படி. இப்பொழுது அப்பாவுக்கு மரியாதை சொல்லி அன்போடு நினைக்க வேண்டிய    நேரம்.

அப்பா  உன்னை மாதிரி தந்தை   இனிப் பிறக்கப் போவதில்லை.
எங்கே இருந்தாலும் நன்றாக இருப்பாய்.
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் உனக்கு அம்மாவாக இருக்கவேண்டும். உன்னைச் சீராட்ட வேண்டும்.

வணக்கங்கள் நமஸ்காரங்களுடன்
உன் குடும்பம்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் வழி காட்டும் தெய்வம்...

இராஜராஜேஸ்வரி said...

ஆமாம் இரண்டு ஜீனியஸ் சேர்ந்தால் செய்ய முடியாத வேலையா
ஒரு கல்யாணம்:)

மனம் நிறைந்த தந்தை ..!

அப்பாதுரை said...

அம்மாவாகப் பிறக்க வேண்டும். touching tribute.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பகிர்வு வல்லிம்மா.

Geetha Sambasivam said...

நிறைவான அஞ்சலி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் சுவையான படையல். பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் said...

அருமையான அப்பா..

மாதேவி said...

உங்கள் அன்புத் தெய்வத்தை வணங்குகின்றேன்.

ஸ்ரீராம். said...

அம்மா என்றால் மட்டுமல்ல, அப்பா என்றாலும் அன்புதான். உங்கள் அப்பாவின் நினைவு மழையில் நாங்களும் நனைந்தோம்.

வெங்கட் நாகராஜ் said...

தந்தைக்கு மகள் செய்த சிறப்பான அஞ்சலி!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.தவறாமல் கருத்துச் சொல்வதற்கு மிகவும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி.அப்பாவுக்கு
நகைச்சுவை உணர்வும் மகளின் மேல் பாசமும் அதிகம்.
எப்பொழுதும் பகிர்ந்து கொள்ளும்போது சுமை குறையும் என்றும் சொல்வார்.நடத்தியும் காட்டுவார்.என்னிடம் மட்டும் இல்லை அங்கே இருக்கும் அனைத்துப் பெண்களுக்குமவர்கள் வீட்டுக்காரர்களுக்கும் அப்பாதான்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.அவர்கள் நமக்குச் செய்த உபகாரத்துக்கும்,அன்புக்கும்
பிரதியாகப் பிள்ளைகளாவது வருடம்தோறும் திதி கொடுத்துத் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள். பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை.
அதுதான் இப்படித் தோன்றியது. அவர் இந்த நிலைமையைக் கடந்துவிட்டிருப்பார் என்றும் தெரியும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா ராமலக்ஷ்மி.நினைக்காமலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை மா.

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பதிவு ஒன்றுதான் என்னால் செய்ய முடிகிறது கீதா.அதையாவது சிறப்பாகச் செய்யவேண்டும்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபு சார்.தவறாமல் வந்து படித்துப் பின்னூட்டம் இடுகிறீர்கள். இதுவும் ஒரு கருணை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சாரல்.அப்பா ஒரு தியாகினு நாவலே எழுதலாம்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி,.கருத்துக்கும் அன்புக்கும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.இத்தனை நட்புகளை எனக்குச் சம்பாதித்துக் கொடுத்தது அப்பாவின் கல்விக் கொடைதானே.என்னைப் பட்டதாரி ஆக்கவில்லையே என்று மகாக் குறை.
இப்பொழுது அவரிடம் இந்த அன்புக் குழாமை அறிமுகப் படுத்த ஆசையாக இருக்கிறது.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.
எனக்குத் தெரிந்த ஒரே அஞ்சலி எழுத்துதான்.அதை நீங்களும் படித்துக்
கருத்துச் சொல்வது இன்னும் விசேஷம்.நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.உங்களுக்குத்தேன் வண்டு என்றே பெயர்ப் பட்டம் என்று கொடுக்கிறேன்.

கோமதி அரசு said...

அடுத்த பிறவி ஒன்று இருந்தால் உனக்கு அம்மாவாக இருக்கவேண்டும். உன்னைச் சீராட்ட வேண்டும்.//
என்ன அருமையான நினைப்பு.
பெரியவர்கள் குழந்தைகளை கொஞ்சும் போது என்னப்பெற்ற அம்மா என்று கொஞ்சுவார்கள். அதை உண்மைக்க நினைக்கும் உங்கள் மனம் அழகு.
ஊருக்கு போய்விட்டதால் பதிவை இப்போது தான் படித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,எந்த விதத்தில் அம்மா அப்பாவின் அன்புக்கு மரியாதை செய்ய முடியும்.
முடிந்ததோ முடியவில்லையோ உதவிக்கு வந்துவிடுவார்கள். எதையுமே எதிர் பாராத உறவு.
அதற்கு எப்படியாவது பிரதி செய்யவேண்டும் என்கிற தாபம்.சுற்றி இருக்கிற எத்தனையோ உயிர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம்.அதையும் மீறி இந்த நினைப்பு வருகிறது:)நன்றி கோமதி. வாழ்கவளமுடன்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜராஜேஸ்வரி. என் தந்தை பெருமைப் படுத்தப் பட்ட இன்னொரு பதிவு. மஞ்சுமாவுக்குத் தான் நன்றி சொல்லணும்.