Thursday, October 03, 2024

2890நவராத்திரி நிலவரம்









வல்லிசிம்ஹன்





 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அனைவருக்கும் இனிய நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துகள். மக்கள் இன்பமும் இனிமையும் நிறை வாழ்வு வாழ
அம்பிகை அருள  வேண்டும்.

73 வருஷங்

களுக்கான  கொலு நினைவுகளை அசை போட வைத்தது எனது பழைய பதிவு. 
நல்ல வேளை எழுதி வைத்தேனே என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்:}))))))


அம்மா ,அப்பா,தம்பிகள் அவர்களின் மனைவி குழந்தைகள்

அப்பாவழி தாத்தா பாட்டி,சித்தப்பா சித்திகள் குழந்தைகள் கொலு நாள் கொண்டாட்டங்கள்,

அம்மா வழி பாட்டி, மாமாக்கள் மாமிகள், அவர்கள் பெற்ற செல்வங்கள் என்று சேகரித்த நினைவுகள்,பரிசுகள்,புத்தாடைகள்,

வாங்கிய பொம்மைகள், புக்ககம், முதல் கொலு மகளுடன் சேகரித்த துர்கா, கிருஷ்ணா, ரங்க நாதர்.  இன்ன பிற நினைவுகள். சுண்டல் சேகரிப்பு, உறவினர் அக்கம்பக்கத்தார் கலகலப்பு, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள். நிறை பண்டிகைகள் அத்தனையையும் அளித்த இறைவனுக்கு 
நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Monday, June 03, 2024

கர்ம பலன்..

வல்லிசிம்ஹன்

 இறைவன் அருள் என்றும் வேண்டும்.

 செயல்கள் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.

 நம் கடமைகளை  நாம் செய்து விட்டால் 
அதற்கான  பலன் கிடைக்கின்றன.

 நற்செயலுக்கு நல்ல நிலைமை கிடைக்கிறதோ இல்லையோ

தெரிந்தே செய்யும்  நல்லது அல்லாத செயலுக்கு  உடனே தீர்ப்பு உண்டு.

அனைவரும்  நலமாக நினைக்க செய்ய இறைவன் அருளட்டும்.

Thursday, May 02, 2024

அஞ்சலி ....உமா ரமணன்.....



வல்லிசிம்ஹன்









  எல்லோரும் வளமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

இனிமையான குரல் வளத்தால் தமிழ் மக்களைமகிழ்வித்து வந்த திருமதி உமா ரமணன்
இறைவனை மகிழ்விக்க சென்று விட்டார். 
இணையைப் பிரிந்த திரு ரமணன் அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.


சென்னையில் இருக்கும் போது மியூசியானோ  முழுவின் பல நிகழ்வுகளுக்குச்
சென்று  ரசித்துக் கேட்டிருக்கிறேன்.

ஓ மானே மானே பாடல் கேட்கும் போது 
நம்மையே மறக்கும் அளவுக்கு அவர்களின் குழு இசை

மெய் சிலிர்க்க வைக்கும். 1980 லிருந்து பல வருடங்கள்
இவர்களின் இசையை அனுபவித்திருக்கிறேன்.

திருமதி உமா ரமணனின் குரல் ஒரு அபூர்வ மென்மை
கொண்டது.
அவரௌக்கு இசைப் பயிற்சியுடன் நடனமும் தெரியும் 
என்று பிற்பாடே தெரியும்.

திரு ரமணன் மேடை முழுவதும் பாட்டுக்கு ஏற்ப 
அசைவார்.
உமாவோ ஆடாமல் அசையாமல் ஒரு  அமைதிச் சிலையாக
உதடுகள் அசைவது கூடத் தெரியாமல்

பாடல்களை வழங்குவார்.
69 வயது இந்தக் காலத்தில் மிகக் குறைந்த வயதே.

இசைத்தட்டுகளில் ,யூடியூபில் அவரைக் கேட்போம்.
அமைதி அடையட்டும் அவர் ஆன்மா.






ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...