வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
இனிமையான குரல் வளத்தால் தமிழ் மக்களைமகிழ்வித்து வந்த திருமதி உமா ரமணன்
இறைவனை மகிழ்விக்க சென்று விட்டார்.
இணையைப் பிரிந்த திரு ரமணன் அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.
சென்னையில் இருக்கும் போது மியூசியானோ முழுவின் பல நிகழ்வுகளுக்குச்
சென்று ரசித்துக் கேட்டிருக்கிறேன்.
ஓ மானே மானே பாடல் கேட்கும் போது
நம்மையே மறக்கும் அளவுக்கு அவர்களின் குழு இசை
மெய் சிலிர்க்க வைக்கும். 1980 லிருந்து பல வருடங்கள்
இவர்களின் இசையை அனுபவித்திருக்கிறேன்.
திருமதி உமா ரமணனின் குரல் ஒரு அபூர்வ மென்மை
கொண்டது.
அவரௌக்கு இசைப் பயிற்சியுடன் நடனமும் தெரியும்
என்று பிற்பாடே தெரியும்.
திரு ரமணன் மேடை முழுவதும் பாட்டுக்கு ஏற்ப
அசைவார்.
உமாவோ ஆடாமல் அசையாமல் ஒரு அமைதிச் சிலையாக
உதடுகள் அசைவது கூடத் தெரியாமல்
பாடல்களை வழங்குவார்.
69 வயது இந்தக் காலத்தில் மிகக் குறைந்த வயதே.
இசைத்தட்டுகளில் ,யூடியூபில் அவரைக் கேட்போம்.
அமைதி அடையட்டும் அவர் ஆன்மா.
4 comments:
என்ன ஒரு பாடகி.... இழப்புதான். அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை சொல்வோம்.
69 வயது இந்தக் காலத்தில் மிகக் குறைந்த வயதே.//
ஆமாம். என்ன உடம்புக்கு என்று மனம் பதைத்து போனது.
அவர் பாடல் மூலம் என்றும் வாழ்வார்.
மிக நல்ல பாடகி.இன்னும் உயரங்களைத் தொட்டிருக்கலாம்.
69 என்பது சிறிய வயதே.
பிரபல பாடகியின் மறைவுக்கு அஞ்சலிகள்.
அவர் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment