Friday, December 28, 2018

Positive vibes 2019



Vallisimhan

எல்லோரும் வளமுடன் வாழவேண்டும்

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய நன்றிகளைக் கடவுளுக்குச் சொல்லிவிட்டு,
நல்ல எண்ணங்களே மனதில் மந்தில் இடைவிடாது ஓட அவனருள் தேட வேண்டும்.
சிறு கோபம் தலை எடுத்தால் உடனே நீக்கினால் நல்லது.
இந்தக் கடும் சொல் என் ஆத்மாவைப் பாதிக்காது.
இதை நான் ஏற்றூக் கொண்டு சுமை ஏற்றிக் கொள்ள மாட்டேன்.

தினம் தினம் பூக்கும் புதுப் பூவைப் போல
மனதைச் சுத்தமாக மலர்ச்சியாக வைத்துக் கொண்டால் பாதி துன்பங்கள் தானே அகன்று விடும்..
மிகக் கடுமையான பயிற்சிதான்.

மேலும் மேலும் காழ்ப்பு உணர்ச்சிகளை மனதில் ஏற்றி,
அடுத்த பிறவிக்கும் அதை எடுத்துக் கொண்டு போக வேண்டாமே.
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்ச்சியே கொண்டு வர என் பிரார்த்தனைகள்.
வாழ்க வளமுடன்.










Wednesday, December 26, 2018

பழைய பயணம் பற்றிய புதுப் பதிவு.

Vallisimhan
எல்லோரும் இனிதே வாழ வேண்டும். 

 இது 2006 இல் நான் துபாயிலிருந்து ஸ்விட்சர்லாண்ட் பயணம் தனியே தன்னந்தனியே செய்த பயணம் பற்றியது.
அப்பொழுதெல்லாம் நம் முதுகெலும்பு கொஞ்சம் பழுதடைந்து இருந்ததால்
 உடல் பருமனும் கூடி
நம்மை நிலை தடு மாற வைத்த நாட்கள்.
எந்த ஊர் மண்ணாக இருந்தாலும் என் நெற்றி அதைப்
பதம் பார்க்காமல் இருந்ததில்லை.
வழக்கமாகக் கணவரின் இரும்புக் கைகள் என்னைக் காப்பாற்றும்.
இந்தத்தடவை அவர் பத்து நாட்கள் கழித்து வருவதாக ஏற்பாடு.

போய்ச் சேர வேண்டிய இடம் சிகாகோ. நடுவில் நிறுத்தம் சிறியன் வசிக்கும் பாசல்,ஸ்விஸ்.
 எங்கும் விழும் அம்மா பத்திரமாகப் போய்ச்சேர ஏற்பாடு செய்யச் சொன்னான் பெரியவன்.
எனக்கு அது தெரியாததால், ஸ்பெஷல் கவனிப்பாக டூனா, கீரை சாண்ட்விச் கொடுத்தபோதும் புரியவில்லை.
 மகன் சொல்லி இருந்த டயபெடிக் மீல்ஸ் தான் அது.
தேவுடான்னு பட்டினி கிடந்து 6 மணிப் பிரயாணத்தை முடித்தபோது,
காவலாளி போல நீல உடை ஹோஸ்டஸ் வந்து நின்று கொண்டாள்.

ப்ளீஸ் கம் வித் மீ என்று அழைத்துச் சென்றாள்.
   


அந்த நீல உடுப்பின் முதுகைப் பின்பற்றி வெளியே வந்தால் இன்னோரு
இனிமையான குரல், நாராசிமான் என்று கூவியது.

நானும் விட்டுக் கொடுக்காமல் நரசிம்ஹன் என்றதும்,
சரி சரி இப்ப என்னோட வா...என்கிற புன்னகையோடு,
மெயின் காரிடார்க்கே அழைத்து வந்துவிட்டது.

my luggage, என்று இழுத்தவளை, ஓ எல்லாம் பத்திரமாக இருக்கு.
உங்க மகன் காத்திருக்கிறார் , என்று ஜேம்ஸ்பாண்ட் படத்தில்
வருவது போல்  ஒரு சிறிய லிஃஃப்டில்
அழைத்துச் சென்று ஒரு பெரிய வால்வோ வண்டி அருகில் நிறுத்தினார்.
 நீங்கள் உங்கள் மகனிடம் போகலாம் ,இவர் உங்களை மெயின் டெர்மினலில் விடுவார் என்றார்.
இதை உங்கள் தோளீல் இருந்து எடுக்கலாமா என்றபடி நானே உணராமல்
என் தோளில் சேர்க்கப் பட்டிருந்த  எஸ்கார்ட் சர்வீஸ் என்று பெரிய பட்டனை
எடுத்தார்.
பட்டை கட்டப் பட்ட பூனை, குழந்தை இது போல அந்த
வண்டியில் ஏறிக்கொண்டேன்.
வெளிச்சத்துக்கு வந்ததும்  அந்த நவம்பர்  காலைக் குளிரில் மகன்
 பூங்கொத்தோடு நின்றிருந்தான். என்னடா ராஜா இந்த மாதிரி கண்கட்டிக் கூட்டி வருவது போல அழைத்துவதார்கள் என்றால்.
நான் தான் ஏற்பாடு செய்தேன் மா. அப்பாவை விட்டுத் தனியா வர.
பயப்படுவியேன்னு செய்தேன் என்று சிரித்தான்,. இதற்கு 500 ஃஃப்ராங்க்ஸ் எஸ்கார்ட்  ஃஃபீஸ்.
குழந்தைக்கு செலவு வைத்தேனே என்று வருத்தமும், அவனுடைய கரிசனத்துகாகச்
சந்தோஷமும் போட்டியிட, ஸ்டார்பக்ஸ் காப்பிக்கு விரைந்தோம்.
ஏண்டா ,அவா எனக்கு ஒரு காஃஃபி கொடுத்திருக்கலாமே என்றேன் நான்.

Sunday, December 23, 2018

மயிலை முண்டகக் கண்ணி,திண்டுக்கல் அபிராமி

இந்தத் தீபங்கள் அபிராமி அம்மா கோவில் தீபங்கள்.


அபிராமி அம்மா எங்களுக்கு அறிமுகமானது திண்டுக்கல்லில் எங்கள் பள்ளிப் பருவத்தில்







அருள்மிகு ஸ்ரீ அபிராமித் தாயார்




அருள்மிகு ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மன்





மயிலை முண்டகக் கண்ணி அம்மா கோவில் .






Saturday, December 15, 2018

Kal Garuda Sewai Full

Vallisimhan

1500பதிவுகள் ,,,,,,,,12 வருடங்களுக்கான பொழுதுகளின் பதிவுகள்.

Vallisimhan பதிவுகள் 1500
அவசரமாக ஓடிய நாட்கள் சில. ஆனந்தமாக ஓடிய நாட்கள் சில.
வருத்தத்துடன் பதிந்த பதிவுகள் சில. வரம் கொடுத்த சாமிகளாக பேரன் பேத்திகள் விஷமங்கள், பேச்சுக்கள் சில.சென்று கழித்த இடங்கள் பல. துணயை இழந்து ,நினைவில் பதிந்த நிகழ்ச்சிகள் சில.

நண்பர்கள் குழாம் பெருகி இருந்த காலம் சில. இப்பொழுது  இன்னும் வல்லி ம்மாவுக்காகப் படிக்க வரும் நாலைந்து நட்புகள்.
பூனை கண்ணை மூடிக் கொள்வது போல என்னிலேயே நான் மூழ்கி விட்டால் யார் தான் 
அசராமல் படிக்க முடியும்.

ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பலரின் உறுதுணையால் வளர்ந்த வலைப்பூ இது.
எண்ணங்கள் மனதில் ஓடும்  வரை எழுத ஆசைதான்.

அனைவரும் வாழ்க வளமுடன்.

காலமகள் கண்திறந்தாள் 2

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழவேண்டும் .

  சாப்பாட்டுக்கடை வாசலில் திகைப்புடன் உட்கார்ந்த
சரவணன் ஐயாவைப் பார்த்த அவரது கிராமத்தவர்கள்
அதிர்ந்து போனார்கள்.
செய்தி கேட்டதும் பதறிப் போய் அவருடைய பையின் அடையாளங்களை
ஒலிபெருக்கியில் சொல்லச் சொன்னார்கள்.

அடுத்த பத்து நிமிடங்களில் பையும் கையுமாக நால்வரைப் பிடித்தனர் போலீசார்.

அவர்களை ஐய்யா அவர்களின் அருகாமையில் கொண்டு வந்ததும் அதிர்ச்சியில்
திகைத்தார் ஐய்யா.
ஏண்டா பக்கத்து நிலத்துப் பங்காளிகள என்னைப் பாதுகாப்பீங்கன்னு நினைச்சேனே /
என் மடியிலிலேயே கை வச்சிட்டீங்களே பசங்களா.
பங்காளின்னால் இப்படியா.
என் அண்ணன் பிள்ளைகள் என்னைத் தாங்கிப் பிடிப்பதை விட்டு
வெட்டிப் போடப் பாத்தீங்களா என்று கண்ணீர் விட்டார்.
பெரியப்பா, தண்டனை கொடுங்க.
நிலத்துல தண்ணி இல்ல, எங்களுக்கு நெஞ்சிலயும்
தண்ணீ இல்ல.
பெரிய மனசு செய்யணும் என்று அவர்களும் அழ, நம்ம சீமைக்கு வந்த
நட்டத்தைப் பாத்தியா.
பாசம் ஓடிவிட்டதே ..பாசனம் எப்படிச் செய்வோம்.
இந்த எட்டாயிரம் எத்தனை நாளுக்குக் காணுமடா உங்களுக்கு.
சரி பேச்சு வேண்டாம்.
எல்லாம் சாப்பிடுங்க. ஒரு வழி செய்யலாம் என்று அவர் சொல்லும்போதே சூறைக்காற்று
அடிக்கத் தொடங்கியது.
ஏதோ கஜா புயலாம், நாம ஊரைப் பார்க்க ஓடுவோம்,
பொண்டு பிள்ளைக் காக்கணும்னு அவசரமாக சாப்பிட்டு
அதே லாரியைப் பிடித்து வீடு நோக்கி விரைந்தார்கள்.
வழி எங்கும் தோப்புகளும்,பசுமையை இழந்து சரிந்து கிடந்தன.
அனைவர் மனங்களும் பதைக்க ஊர் வந்து சேர்ந்த போது இரவாகிவிட்டது.
மழை வீர்யம் கொண்டு முழங்கிக் கொண்டிருந்தது.
இது அரியாங்கோட்டை தானா என்று கேள்வி கேட்க்கும்படி இருந்தது. எங்கும் தண்ணீர்.
ஒரே இருட்டு. அவரவர் தம் மனைவி,பிள்ளைகள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தனர். ராமலிங்க சாமி, எங்க பாவத்தை மன்னிச்சுடு. இனித் திருட நினைக்க மாட்டோம். பெரியம்மாவையும்  குடும்பத்தையும் காட்டிகொடு. உயிர் இருந்தால் போதும். பணம் மண் எதுவும் வேண்டாம் என்றூ கூக்குரலிட ஆரம்பித்தனர்.
ஏதோ வண்டி வெளிச்சம் கண்ணில் பாட சாலை நடுவில் நின்று
பார்த்தனர். அது காவல் நிலைய வண்டி. ஓட்டுனர் இறங்கி, ஏன் வழியில் நிக்கறீங்க,புயல் அடிக்கப் போகுதே எங்களுடன் வாருங்கள் என்று வண்டியின்
பின்னால் ஏறிக்கொள்ளச் செய்தனர்.
தங்கள் விவரங்களைச் சொன்னதும், சமூகக் கூடத்தில் நிறையபேருக்கு இடம் இருக்கு. நீங்க அங்க இறங்கிப் பாருங்க..
வெளியே மட்டும் வரவேண்டாம். நாளைக்காலையில்
புயல் கரையைக் கடந்துடும்.காத்து மட்டுப் படும். அப்போ நாங்களே உதவறோம் என்று சொல்லி ,சமூகக் கூடத்தில் இறக்கிவிட்டனர்.

பெரியப்பனைக் கையில் தாங்கியபடி உள்ளே விரைந்தனர்
அந்த வாலிபர்கள். குளிரும் பசியும் வாட்ட,அங்கே கூடி இருந்த மக்களில் தங்கள் குடும்பத்தைதேடினர்.
 அப்பா, தாத்தா, என்னாங்க என்ற குரல்கள் வந்த திசையில் பார்த்தால்,
பர்வதம்மா, மருமகள்கள்,பிள்ளைகள் என்று ஒரே இடத்தில் இருப்பதைப்
பார்த்து ,சரவண ஐய்யாவுக்கு மனம் நெகிழ்ந்தது.
பர்வதம்மா கேட்ட முதல் கேள்வி சாப்பிட்டிங்களா என்பதுதான்.

பெரியம்மா காலில் விழத்தயாராய் இருந்த தம்பி மகன் களைக்
கண்ணால் தடுத்து நிறுத்திய, பெரியப்பா எப்படித் தப்பி இங்க வந்தீங்க எல்லாரும். வர வழி எல்லாம்
மரம் சாய்ஞ்சு கிடக்கே என்று வினவினார்.
நீங்க முந்தின நாள் கிளம்பும்போதே ரேடியோ, டிவில சொல்லிட்டாங்கப்பா.
கிடைத்த வரை எடுத்துக் கொண்டு இங்க வந்துட்டோம்.
நம்ம பந்து ஜனமெல்லாம் இங்கதான் என்றார் பர்வதம்மா.
பெரியம்மா இல்லாட்டா நாங்க நிலத்துலயே மடிஞ்சிருப்போம் என்றாள்
ஒரு மருமகள்.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எல்லாம் நல்லதுக்குத்தான்.
குடும்பம்னா இப்படித்தான் இருக்கணும்.
வறுமை வந்தால் விலகிப் போகணும்னு யாரும் சொல்லலியே.
இருக்கிறதைப் பகுந்து கொண்டா,மனசும்,குடும்பமும்
வளரும் பிள்ளை என்றாள் பாசத்தோடு.

வெளியே அடிக்கும் புயல் பெரிசா, மனசில் அடித்த புயல் பெரிசா
என்று யோசித்தார் பெரியய்யா சரவணன்..
 தாயார் அளித்த கூழை உண்டு தகப்பனார் அருகில் வந்தமர்ந்த பிள்ளைகள்,
பெரியப்பா, இந்தமழை நம் குடும்பத்தை ஒண்ணாக்கிடுச்சு.
உங்க நிலமும் எங்க நிலமும் சேர்த்து நாங்க பாடுபடறோம்.
மண்மாதா வஞ்சிக்க மாட்டாள்.
ஒரு போகம் முடிந்ததும் ராமேஸ்வரம் போயீ சாமி கும்பிட்டு வரலாம்
என்று சொல்லி முடித்தனர்.

ஆமாண்டா இனிப் பழைய பகை இல்லை. புது சோறு பொங்கி
,புதுக்காளை வாங்கி, இனி எல்லாம் புதுசு தான்.
பெரியய்யா காளைகளை மீட்கணும் முதல்ல.
ஆமாண்டா முதலில் நம்மைக் கடனுக்காகக் கழுத்தை நெரிச்சதுனால
தான, பெரியய்யாவுக்குத் துரோகம் செய்யப் போனொம்.
நம்ம எட்டு காளைகள்ள இரண்டு ஜோடியைக் கொடுத்துட்டுப் பெரியய்யாவுக்குக் காளைகளை
மீட்டுடுவோம்.
இத்தனை முடிவுகளையும் தீர்மானம் செய்து
அவரவர் குடும்பங்களுடன் தூங்கச் சென்றனர்.
சரவண ஐய்யாவும் பர்வதமும் வெகு நாட்களுக்குப் பிறகு
விடியல் சீக்கிரமே கிடைக்கும் என்ற நிம்மதியோடு
உறங்கச் சென்றனர். வீடு புயலைத் தாங்குமா,மீண்டும் தமக்குக் கிடைக்குமா
என்ற கேள்விகள் மனதின் மூலையில் இருந்தாலும் இன்று
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லியபடி
மழையின் சத்தத்தில் லயித்தபடி கண்களுக்கு ஓய்வு கொடுத்தனர்.
நமக்கு என்று இருப்பது பறிபோவது போலத் தோன்றினாலும்
மீண்டும் அது நமக்குக் கிடைக்கக் கடவுள் அருள்
உண்டு .நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க வளமுடன்.

Thursday, December 13, 2018

பத்தாவதுபடம் திருமலை தென் குமரி

Vallisimhan

#பத்துப்பட பதிவுகள்,
#பத்தாவதுபடம்திருமலைதென்குமரி
#இயக்கம்#எபி நாகராஜன்,
#நடிகர்கள்சீர்காழிகோவிந்தராஜன்,சிவகுமார்,சகுந்தலா, குமாரி  பத்மினி,
கோபாலகிருஷ்ணன்,காந்திமதி,மனோரமா,சுருளிராஜன் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள்.
இசை குன்னக்குடி வைத்திய நாதன் .

1970 இல் பார்த்த படம். ஒரு புதுவித முயற்சி. இயக்குனர் தேர்ந்தெடுத்த கருத்து பல
மொழி பேசும் குடும்பங்கள் கொண்ட ஒரு அடுக்கு மாடிக் குடி இருப்பிலிருந்து , ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து திருமலையிலிருந்து  தென் குமரி வரை, திருத்தணி, மைசூர்,மதுரை, குருவாயூர்
என்று எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள்.
அந்தக் குடுபத்தோடு நான்கு கல்லூரி மாணவர்களும், பக்கத்தில் குடி இருக்கும் ஏழைத்தம்பதிகளான மனோரமா ,சுருளிராஜன் தம்பதிகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.
வண்டி முழுவதும் கலகலப்புக்குப் பஞ்சமில்லை,
சுருளிராஜனைக் குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க மனோரமா முயற்சிக்கிறார். வெற்றியும் பெறுகிறார்.
கல்லூரி மாணவர்கள்+காதலர்களாக சிவகுமார்,குமாரி பத்மினியும், சகுந்தலாவும் அவர் காதலரும்.
இதைத்தவிர, ஒரு தெலுங்குக் குடும்பம், ஒரு கேரளக் குடும்பம், ,ஒரு கன்னடத்தம்பதியினர், ஒரு தமிழ்க் குடும்பம். தமிழ்ப் பேராசிரியர் அழகாகக் கவிதை புனைபவர்,அவரது மனைவி..ஒரு
பிராமணக் குடும்பம் கோபாலகிருஷ்ணன்,மனைவி,மகள்,மகன்,
ஒரு பாட்டியும் ,அவள் பேரனும்.
திருப்பதி உண்டியலில் மோதிரத்தைச் சேர்க்க மனமில்லமல்
பதிலாகப் பணம் செலுத்த நினைக்கும் போது மோதிரமும் கூட விழும் அற்புதம்,
திருத்தணியில் தொலைந்து போகும் மகனுக்கு,திரும்பக் கிடைத்ததும்,
முடியிறக்கி பிராத்தனை நிறைவேற்றும் அழகு,குருவாயூரில் சொல்லப்படும் மகிமை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சீர்காழியின் அற்புதப் பாடலும், வந்திருக்கும் மங்கைகளின் நடனம்,
ஒவ்வொரு கோவிலிலும் திரு கோவிந்தராஜனின் இசை மழை,
கடைசியில் கன்னியா குமரியில் காதலர்களின் பிரிவும் ,பின் இணைவதும்
மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
அந்தக் காலத்து தமிழ்னாடும் , கோவில்களும் ,சுற்றுப்புறமும் எப்படி இருந்தன என்பதற்காக எடுக்கப்பட்ட ஆவணப் படமாக இருக்கிறது. இந்தச் சித்திரம்.
ஒரு விகல்பம் இல்லை,கவர்ச்சி நடனம் இல்லை. இருந்தும் வெற்றி பெற்றது. திரு.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில்.
முடிந்தபோது காண மறக்காதீர்கள். வாழ்க வளமுடன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...