Blog Archive

Thursday, December 13, 2018

பத்தாவதுபடம் திருமலை தென் குமரி

Vallisimhan

#பத்துப்பட பதிவுகள்,
#பத்தாவதுபடம்திருமலைதென்குமரி
#இயக்கம்#எபி நாகராஜன்,
#நடிகர்கள்சீர்காழிகோவிந்தராஜன்,சிவகுமார்,சகுந்தலா, குமாரி  பத்மினி,
கோபாலகிருஷ்ணன்,காந்திமதி,மனோரமா,சுருளிராஜன் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள்.
இசை குன்னக்குடி வைத்திய நாதன் .

1970 இல் பார்த்த படம். ஒரு புதுவித முயற்சி. இயக்குனர் தேர்ந்தெடுத்த கருத்து பல
மொழி பேசும் குடும்பங்கள் கொண்ட ஒரு அடுக்கு மாடிக் குடி இருப்பிலிருந்து , ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து திருமலையிலிருந்து  தென் குமரி வரை, திருத்தணி, மைசூர்,மதுரை, குருவாயூர்
என்று எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள்.
அந்தக் குடுபத்தோடு நான்கு கல்லூரி மாணவர்களும், பக்கத்தில் குடி இருக்கும் ஏழைத்தம்பதிகளான மனோரமா ,சுருளிராஜன் தம்பதிகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.
வண்டி முழுவதும் கலகலப்புக்குப் பஞ்சமில்லை,
சுருளிராஜனைக் குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க மனோரமா முயற்சிக்கிறார். வெற்றியும் பெறுகிறார்.
கல்லூரி மாணவர்கள்+காதலர்களாக சிவகுமார்,குமாரி பத்மினியும், சகுந்தலாவும் அவர் காதலரும்.
இதைத்தவிர, ஒரு தெலுங்குக் குடும்பம், ஒரு கேரளக் குடும்பம், ,ஒரு கன்னடத்தம்பதியினர், ஒரு தமிழ்க் குடும்பம். தமிழ்ப் பேராசிரியர் அழகாகக் கவிதை புனைபவர்,அவரது மனைவி..ஒரு
பிராமணக் குடும்பம் கோபாலகிருஷ்ணன்,மனைவி,மகள்,மகன்,
ஒரு பாட்டியும் ,அவள் பேரனும்.
திருப்பதி உண்டியலில் மோதிரத்தைச் சேர்க்க மனமில்லமல்
பதிலாகப் பணம் செலுத்த நினைக்கும் போது மோதிரமும் கூட விழும் அற்புதம்,
திருத்தணியில் தொலைந்து போகும் மகனுக்கு,திரும்பக் கிடைத்ததும்,
முடியிறக்கி பிராத்தனை நிறைவேற்றும் அழகு,குருவாயூரில் சொல்லப்படும் மகிமை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சீர்காழியின் அற்புதப் பாடலும், வந்திருக்கும் மங்கைகளின் நடனம்,
ஒவ்வொரு கோவிலிலும் திரு கோவிந்தராஜனின் இசை மழை,
கடைசியில் கன்னியா குமரியில் காதலர்களின் பிரிவும் ,பின் இணைவதும்
மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
அந்தக் காலத்து தமிழ்னாடும் , கோவில்களும் ,சுற்றுப்புறமும் எப்படி இருந்தன என்பதற்காக எடுக்கப்பட்ட ஆவணப் படமாக இருக்கிறது. இந்தச் சித்திரம்.
ஒரு விகல்பம் இல்லை,கவர்ச்சி நடனம் இல்லை. இருந்தும் வெற்றி பெற்றது. திரு.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில்.
முடிந்தபோது காண மறக்காதீர்கள். வாழ்க வளமுடன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

No comments: