![]() |
| Add caption |
![]() |
| Add caption |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்..திண்டுக்கல்லில் இருக்கும் ராஜாமணி மாமாவுக்கு அப்பா
தந்தி அனுப்பி, அவசரமாக வீடு ஒன்று பார்த்துக் கொடுக்கணும்.
வேலையில் மே கடைசியில் சேர வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
ஓ , சொல்ல மறந்துவிட்டேனே. அப்பா, தாத்தா கூட
தபாலாபீஸ் , தந்தி வழியாகச் செய்திகள் அனுப்பிக் கொள்வார்கள்.
கட்டுக் கட கட.கட்டுக் கட்டு கட கட நானும் கொஞ்ச நாட்கள் கற்றுக் கொண்டேன்.
மோர்ஸ் கோட்.
ராஜாமணி மாமா பார்த்த வீடு செயிண்ட் ஜோசஃப் பள்ளியிலிருந்து
மணி அடிக்கும் சத்தம் வீட்டில் கேட்கும் என்று சொல்லி அப்பா
எங்களை அழைத்துப் போனார்.
ரெஜினா விலாஸ் என்ற பெயர் அந்த வீட்டுக்கு. சுற்றுப்புறம் தான் சரியாக இல்லை.
சித்தப்பாவின் ஜீப்பில் மதுரையிலிருந்து
வந்த நாங்கள் முதலில் பார்க்க விரைந்தது கிணற்றைத்தான்.
தண்ணீர் நிறைய இருந்தது. குடிக்கத்தான் நன்றாக இல்லை.
குளித்தாலும் சோப் நுரை வராது போல இருந்தது.
வீட்டு சொந்தக்காரர் பெரிய வீட்டை இரண்டாகப் பிரித்திருந்தார். எங்களுக்கு அடுத்த
வீடு முயல் வீடு. ஏகப்பட்ட முயல்கள் இருந்தன. வாயில் கதவைத் திறந்தால் உள்ளே
வந்துவிடும். பின்னால் குட்டிப் பெண் ஒன்றும் வரும். கை நிறைய முயல்களை
அள்ளிக் கொண்டு சின்னச் சிரிப்பை உதிர்த்து விட்டு ஓடி விடும்.
வாசலில் trellis work இருக்கும்.
அதற்கப்புறம் ஒரு அறை பீரோ ,மேஜை, rack, எல்லாம் கொண்டு ,சாப்பிட, படுக்க அறையாக
அது உபயோகப் பட்டது. கிணற்றுக்குப் பக்கத்தில் சமையல் அறை. ஓடு போட்டு புகைபோக்கி
எல்லாம் வைத்திருந்தது. கீழே அடுப்புகள் அமைக்கப் பட்டு சுத்தமாக இருந்தது.
பாவம் அம்மா, நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்க ,மழையோ,வெய்யிலோ
அங்கேயே இருப்பார். சமையல் முடிந்ததும்
எல்லா பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு இங்கே வந்து விடுவார்.
இங்கே எங்களைப் பார்க்க தாத்தாவும் பாட்டியும் வந்தார்கள்.
நல்ல தண்ணீர் எடுத்து வரும் வேலை எனக்கு. அந்தக் கிணறு
இருக்கும் இடம் கொஞ்சம் தள்ளி இருந்தது. என் உயரத்தில் பாதி இருக்கும்
குடம்.
அதைப் பார்த்துப் பாட்டிக்கு மனசாகவில்லை.
நாராயணா சீக்கிரம் வேற வீடு பாருடா. குழந்தைக்கு உடம்புக்கு வந்துவிடும்
என்று சொல்லிவிட்டு இரண்டு நாட்களிலேயே கிளம்பி விட்டார்கள்.
அதற்குள் அப்பா என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாச்சு.
முதல் தடவை கன்யா ஸ்திரிகளைப் பார்த்துக் கொஞ்சம்
பயம் தான்.
எட்டாம் வகுப்பில் சேர்க்கப் பரிட்சை வைக்க வேண்டுமே
என்று ஸிஸ்டர் வணக்கத்துக்குரிய ரெடெம்ப்டா மேரி சொல்ல,
நானும் ஒத்துக் கொண்டேன். படிக்க, எழுத, ஆங்கிலம், கணக்கு, தமிழில்
டெஸ்ட் வைத்தார்கள்.
என்ன எழுதினேனோ. சேர்த்துக் கொண்டார்கள்.
அப்பா, ஸிஸ்டர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது தப்பு செய்தால் தனக்குக் கடிதம் எழுத வேண்டும்
ஏகத்துக்கு அப்பாவி😐😐😐 என்றேல்லாம் சொல்லி
விட்டு விட்டுப் போனார்.
ஐயோப் பாவமே இந்த அப்பா என்றிருந்தது.
முதல் மாடியிலிருந்த எட்டாம் வகுப்புக்கு
அழைத்துச் செல்லப்பட்டேன். என் மிக மகிழ்ச்சியான நாட்கள் துவங்கின.
ஆறு மாதத்தில் பல மாற்றங்கள். அடுத்துப் பார்க்கலாமா.
![]() |
| Add caption |
| . | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| . |













