எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்.
மழையின் கும்மாளத்துக்கு நடுவே புதல்வர்கள்
தங்கள் வேலைகளையும் தந்தைக்கு வேண்டிய
பிதுர்க் கடன் களையும் நிறைவேற்ற
முடிந்தது கடவுளின் கிருபையே.
பின் வரும் தலைமுறைகள் நன்றாக ஆசிகள் பெறும்
வகையில் பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்ட இந்த சிரார்த்த விஷயங்களுக்கு ,முக்கியம் சிரத்தை. தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமை.
அதுவும் அவருடைய வீட்டில் செய்ய முடிந்தது
தான் எனக்கு நிம்மதி.
எத்தனையோ நபர்கள் வெளியில் செய்து கொள்ளலாம் என்று சொன்ன போதும் பசங்க மனம் மாறவில்லை.
என்றும் என் ஆசிகளும் சிங்கத்தின் ஆசிகளும் அவர்களுடனும் குடும்பத்துடனும் இருக்கும்.

14 comments:
சென்னை வந்திருக்கிறீர்களா என்ன? நலம்தானே அம்மா?
குழந்தைகள் அனைவருக்கும் ஆசிகள், வாழ்த்துகள்.
வரணும் ஸ்ரீராம். நான் வரவில்லை.
அலைய முடியவில்லை. பையன்கள். அவர்களாகவே
சமாளித்து அழகாக நிறைவேற்றிவிட்டார்கள்.
பலர் இதற்குக் கொடுத்துவைக்க இயலா நிலையில் சிரமப்படுவதைக் கண்டுள்ளேன்.
ஸ்ராத்தம் நன்றாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் நலம்தானே?
திருப்தி , நிம்மதி கிடைத்தது அது தான் முக்கியம்
அன்பு முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் கருத்துக்கு நன்றி.
அனைவர் கூடி இந்த வருட திதிகளை நடத்துவதாகக் கேள்விப்பட்டேன். அதுபோல முன்னோர்களுக்குச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.
அன்பு நெல்லைத்தமிழன். அங்கே போக முடியவில்லை என்ற வருத்தத்தைத்
தவிர நான் நலமாகவே இருக்கேன் மா.
உண்மைதான் சம்பந்தப் பட்ட அனைவரும் திருப்தி அடைவதுதான் திதி கொடுப்பதின்
தத்துவம்.நன்றி.அன்பு பூவிழி.
நன்று. வாழ்த்துக்கள்.
சாரின் திதியை நல்லபடியாக செய்தது குழந்தைகளுக்கு அவரின் ஆசிதான்.
நாளும் உங்கள் வாழ்த்தும் தான்.
நன்றி துரை.
ஆமாம் கோமதி. இந்த விஷயத்திலும்
அவர்கள் தேறிவிட்டார்கள். கடவுள் என்றும் அவர்களுக்குத் துணை இருக்கட்டும்.
திதி நல்லபடியாக நடந்தைமை நன்று! உங்கள் அனைவரது வாழ்த்துகளும் அன்பும் இருக்க குழந்தைகள் என்றும் இறைவனின் அருளால் நன்றாகவே இருப்பார்கள் வல்லிம்மா...
துளசிதரன், கீதா
Post a Comment